2026: தன்னுடைய ஆராய்ச்சியில் (Crow)காகங்களை பற்றி இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன் என்ன சொல்லியிருக்கின்றார் தெரியுமா?

(Crow)காகங்களைப் போல் குரல் கொடுங்கள் தெரிந்ததுதானே, உணவு கிடைத்தால் ஒரு காகம் குரல் கொடுத்து மற்ற காகங்களை வரவைத்து உண்ணும்.

‘காக்கா(Crow) கூட்டத்தைப் பாருங்க அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க, ஒண்ணா இருக்க கத்துக்கணும்’
கொஞ்சூண்டு சாதமும் ஒரு வடையும் மட்டும் வைத்துப் பாருங்கள். அந்த வகையான உணவுக்கு எத்தனை பேரை அழைக்கவேண்டும்..? என்பதாக ஒரு குரல் கொடுக்கும்!

Facebook
Instagram
YouTube
Twitter

எத்தனை காகங்கள் வரலாம்! அவ்வளவு எளிதாக காகங்களை படிக்க முடியாது!
கொஞ்சூண்டு உணவும், வடையும் வைத்த போது மிக மைல்டான சத்தத்தை கேட்க முடிந்தது! ஒரு விதமான அழைப்பு! ஒரு இரண்டு மூன்று (Crow)காகங்கள் வந்து உணவை உண்டது! வடையைப் பிய்த்து வைக்காமல் முழுதாய் வைத்தால் அதை அப்படியே தூக்கிக் கொண்டு போகும். ‘பாட்டி வடை சுட்ட கதையாகி விடும்’ (Crow)காக்கைக்கு வடையைப் பிய்க்காமல் வைக்கும் எந்த மனிதர்களையும் அறிவு இல்லாதவர்கள் என்றே சொல்லலாம்! காகங்கள் சாப்பிட அழைக்கும், ஆனால்… பங்கு போடத் தெரியாது! வடைகளைப் பிய்த்து வைக்க வேண்டும்.

சிலர் சாதங்களை கையளவு பிசைந்து வைப்பார்கள். நான்கு ஐந்து காகங்கள் உண்ணும்! சரி, எல்லோரும் உண்ணட்டும் என்பதற்காக, மிக்சர், காராபூந்தி போன்ற பண்டங்களை வாங்கி பிரித்து வைத்து கொஞ்சம் தரையில் தூவினேன். மிக உன்னிப்பாக கவனித்த போதும் எனக்கு சில நாட்கள் எதுவும் புலப்படவில்லை! ஆனால் கூட்டம் கூட்டமாக காக்காக்கள் வந்தன! பறவைகளின் மொழியைப் பிடிப்பது பெரும் கஷ்டம். அதன் பாஷையைப் பிடித்து விட்டால், அவைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்!

சில நாட்கள் கழித்து அதே போல் இன்னொரு இடத்தில் தூவினேன். கொஞ்சம் நிறையத் தூவினேன்! காக்கைகள் மெஜாரிட்டியாக வந்தது. அடிவயிற்றில் இருந்து கொஞ்சம் அதிகமான சத்தத்தில் குரல் கொடுத்தது! சற்று நேரத்தில் ராணுவ ஹெலிஹாப்டர் போல் லேண்டானது! அதாவது… உணவு இருக்கும் அளவு தெரிந்து, குரலில் மெல்லியதாக கத்தும்போது,
‘இவ்வளவுதான் இருக்கு இத்ததனை பேர் வந்தால் போதும்’ என்றும், உணவுகள் நிறைய இருக்கிறது என்றால், சத்தத்தை உயர்த்தி, ‘அனைவரும் வாருங்கள்’ என்னும் தத்துவத்தை உணர்ந்து கொண்டேன்!

சரி, ஒரு காகம்(Crow) அடிபட்டு இறந்து கிடந்தால், சுத்துப்பட்டு பதினெட்டு கிராமங்களில் இருந்தும் மொத்தக் காகமும் வந்து இறங்கி விடுகிறது. காகம் இறந்து கிடப்பதும் மற்ற காகங்கள் கூடுவதும் அரிதான நிகழ்ச்சி!

இறந்து கிடக்கும் (Crow)காகத்தை நோக்கி அடிவயிற்றில் இருந்து குரல் கொடுக்கும், அந்த இரைச்சலை… குரலை உன்னிப்பாகக் கேட்டால் ‘ஆபத்து ஆபத்து’ என்பது போலிருக்கும்!

அந்த இரைச்சலைக் கேட்டு கூட்டம் கூட்டமாக வரும்! அதிக தூரத்திலிருந்து எல்லாம் வரும்! கத்தியபடியே ஒரு இரண்டு மூன்று மணிநேரம் அந்த இடத்தையே வட்டமிட்டுக் கத்தி – ‘என் இனத்தவன் இறந்துவிட்டானே’ என்று கதறுவது!

நம் இனத்தவன் இறக்கும் போது, நம்மைப் போல் அவைகள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருப்பது இல்லை!
நம் இனம் சாகும்போது ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட்டைப் பார்த்து கைதட்டிச் சிரித்துக் கொண்டிருக்காது!

இறப்பின் வலி! – தன் இனத்தின் ஓர் இறப்பின் வலி, மனிதர்களைவிட காக்கைகளுக்கு அதிகம்!
சரி, ஒரு நிகழ்வு பார்க்கிறேன். குருவிக்கார சகோதரர்கள் கவட்டையால் காகங்களை வேட்டையாடும் நிகழ்வுகள் திருநெல்வேலி, பாபநாசம் பகுதியில் அதிகம்!
கவட்டையால் அடித்து அவன் வேட்டையாடத் துவங்கும் போது, அடுத்த நிமிஷம்… தொண்டையில் இருந்து வேறுவிதமான ஒலிகளை எழுப்புகிறது!

‘வா… வா’ என்று
‘அவசரம் அவசரம்’ என்று.
மொத்தமாக அங்கு வந்து குவிகிறது… விரட்டுகிறது! நீங்கள் நன்றாகக் கவனித்துப் பாருங்கள். குருவி வேட்டையாடுபவர்கள் கடினமான தலைப்பாகையை அணிந்து இருப்பார்கள்! பறவைகள் தலையில் தாக்குவதில் இருந்து பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக!
சரி, விருந்தினர்கள் வருகிறார்கள் என்றால் காகம் வீட்டின் மேலேயோ, எதிரோ அமர்ந்து கத்தும் என்று காலம் காலமாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!

கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வரும் விருந்தாளியை காகம் எப்படி அறிந்து கொள்கிறது!? ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கிறார்கள். எல்லா வீட்லயும் கத்திக் கொண்டிருக்கிறதா?
ஒரு சிலர் வீட்டு முன்பு மட்டும்தான் கத்துகிறது! ‘அந்த வீட்டுக்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று தெரிந்து கத்துகிறது’ என்பது சிறு பிள்ளைத்தனமான பேச்சு!
ஆனால் கூர்ந்து கவனித்தால் வேறு ஒன்று புலப்படும்! ஒரு வீட்டில் பார்ட்டி வைக்க முடிவு செய்யப்பட்டு, வழக்கமான சமையலை விட சற்று வித்தியாசமாகச் சமைப்போம். அந்தச் சமையலில் காய் கறிகள், எண்ணெய் அயிட்டங்கள், பாயசம், பால் வாடை, நெய்வாடை, எல்லாம் வாசனையாக வெளியேறிப் பயணிக்கிறது!

‘இந்த வீட்ல விசேஷங்க… எல்லோரும் வாங்க’ – மீண்டும் அடிவயிற்றில் இருந்து சந்தோஷமாகக் குரல் எழுப்பும்!
காகம் கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள்!
‘விசேஷமாகச் சமைத்தால் விருந்தாளிகள் வருவார்கள்’ என்று காக்கைக்குத் தெரிகிறது!
தான்மட்டும் இல்லாமல் தனது சகாக்களையும் அழைத்து, ‘இந்த வீட்டிற்கு வந்தால் விருந்து கிடைக்கும்!’
விருந்தாளி வருவதை காகங்கள் உணர்ந்தால் ஒவ்வொரு வீட்டு அப்பார்ட்மென்ட்டிலும் கத்த வேண்டும். இன்றைய அப்பார்ட்மென்ட் குடியிருப்பு காலங்களில், காகங்கள் கத்துவதில்லை!
ஆக, பல வீடுகளில் எல்லா நாட்களும் விருந்தாக இருக்கிறது. விதவிதமாகச் சமைக்கிறார்கள். மூன்று வேளையும் கறி, மீனோடு உண்கிறார்கள்.

இந்தக் காலகட்டத்தில் காகங்களுக்கே குழம்பிய காலமாய் இருக்கிறது!
ஆனால் இப்போதும் நடுத்தரக் குடும்பங்கள் வாழும் கிராமங்களில், விருந்து என்றால் காக்காக்கள் கத்துகின்றன! நகர்ப்புறங்களில் இல்லை!
குறிப்பறிந்து குரல் கொடுப்பதில்… காகங்களாக இருக்கவேண்டும்!

Privacy & Policy
Disclaimer
Contact us
About us