2026: மாறும் மனிதன் மாறா மிருகம் – இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan ஏன் மனிதர்களை நாயைப் போல் தூங்குங்கள் என்று சொல்கிறார் தெரியுமா?
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
என்னது நாயைப்போல் தூங்கணுமா?
‘என்ன சொல்ல வர்றீங்க?’
விலங்கு இனங்களில் நாயைப் போல் தூங்கும் ஒரு விலங்கு கிடையாது!
Facebook
Instagram
YouTube
Twitter
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
பூனை தூங்குவதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டு அலையும். நல்ல இடம் அமைந்து விட்டால் போய் படுத்துக் கொண்டு காதுகளை அசைத்துக் கொண்டே தூங்கும். அலெர்ட்!
சொந்த வீட்டிலேயே வளர்ந்திருக்கும் ஆனாலும் ஒரு பயலையும் நம்பாது, நம்மள என்னமோ பண்ணியிருவாங்க என்கிற பயம்!
நாய் அப்படியில்லை. பிஸியாக இருக்கிற ஐ.ஏ.எஸ் கூட அப்படி ஓடி ஆடி இருக்கமாட்டான். இங்கிருந்து அங்க ஓடும் எதுக்குன்னு தெரியாது. அங்கிருந்து இங்க ஓடும் எதுக்குன்னு தெரியாது. ஏதாவது கொடுத்தால் சாப்பிடும். மீண்டும் வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வரும், எதற்கு என்று தெரியாது. எங்கு இடம் கிடைக்கிறதோ அது ரோடாக இருந்தாலும், பெட்ரோல்பங்காக இருந்தாலும் ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற வாகன நெருக்கடிமிக்க இடமாக இருந்தாலும் படுத்துக் கொள்ளும்! கண்ணைமூடி தூங்கிவிடும்!
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
பசித்தாலும் கவலை இல்லை, அதற்குத் தூங்க வேண்டும். இவ்வளவிற்கும் பூனைகளைவிட நாய்களின் காதுகள் ஷார்ப். மேலே ஏதாவது பொருள் பட்டால்தான் விழிக்கும்!
இரவில் நாய்களைப் பாருங்கள் நன்றாகத் தூங்கும். எழுந்து நடக்கும், அங்கேயே கிடைத்த இடத்தில் தூங்கிவிடும்! படுத்த இடத்தில் இரண்டாவது நொடியில் தூங்கிப்போகும்!
நாயைப் போல் நம்மில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்!?
இறைவன் கொடுத்த அருட்கொடை தூக்கம்!
இன்று பலருக்கு மது அருந்தினால் தான் தூக்கம் வரும்! படுக்கையில் விழும்போதுதான் பகலில் செய்த நல்லது கெட்டது அனைத்தும் நினைவுக்கு வரும்!
புத்தகம் படித்தால் தூக்கம் வரும் என்கிற நிலைகூட இப்போது இல்லை!
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
தூங்குவதற்கு சிலருக்கு ஏதாவது வேண்டும்! குறைந்தபட்சம் செக்ஸ்! கூடுதல்பட்சம் அளவுக்கு அதிகமான மது!!
தூங்குவதற்கான சாதனங்கள் அன்றைய இரவு மட்டும்தான் என்பதை உணர மறுக்கிறோம்!
காரணம்… பகலில் செய்த தவறு! யார் யாருக்கோ செய்த நம்பிக்கைத் துரோகம்! யார் யாரையோ ஏமாற்றி பணம் வாங்கி இருப்போம்! அல்லது உன்னை ஏமாற்றி இருப்பார்கள்!
இன்னொருவன் மனைவியோடு படுத்து எழுந்திருப்பாய்!! மனைவி இல்லாத போது இன்னொரு பெண்கூட வந்து போய் இருக்கலாம்!
இப்படி… பகலில் செய்யும் நல்லவைகளை விட, தீமைகளே அதிகம்!
அடுத்தவனை எப்படிக் கவிழ்ப்பது என்பதற்குக் கூட நாம் இரவுகளைத்தான் பயன்படுத்துகிறோம்!
லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொள்கிறோம், ஆன்ட்ராய்டு போனில் ஆன்லைனில் இருக்கிறோம்! தூக்கம் வரும் வரையில் முகநூல் பார்க்கிறார்கள் என்று பொய்யான ஆறுதல் கூறிக்கொள்ளலாம்!
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஆன்ட்ராய்டு போனும், லேப்டாப்பும் உங்களிடம் இருந்ததா?
அவ்வளவு எளிதாக மது அருந்த முடிந்ததா?
‘வீட்ல அப்பா இருக்காங்க, அம்மா இருக்காங்க, அண்ணனுக்குத் தெரிஞ்சிரும் அப்புறம் தப்பாயிரும்!’
மனிதன் கட்டுப்பாடுகளோடு வாழவேண்டிய கட்டாயம்! உறவுகளாக வீட்டிலேயே… இருந்தது!
இன்று யாரும் இல்லை! சம்பாதிப்பவனாக இருந்தால் வீட்டில் மது அருந்தலாம்! அவனின் மனைவி கேட்க முடியாது! கத்தலாம், அழலாம் ஆனால் கண்டிக்க முடியாது! பிள்ளைகளுக்கும் பயப்படமாட்டார்கள்!
இத்தகைய விதிமீறல்கள் நமது தூக்கத்தை காவு வாங்குகிறது! வாங்கிக் கொண்டிருக்கிறது! நாயைப் போல் நம்மால் தூங்க முடிகிறதா!?
சரி, நாய் எங்கு படுத்தாலும் தூங்கி விடுகிறது! பூனை ஏன் தூங்குவதில்லை? பூனைக்குத் தூங்குவதில் என்ன பிரச்சனை? சிந்திக்கத் தெரியாது, நாயைப் போலவே வீட்டில் செல்லமாகத்தான் வளர்க்கிறார்கள். ஆனாலும் பூனைகளால் ஏன் தூங்க முடியவில்லை? திருட்டு! நம்பிக்கைத்துரோகம்!
நாய்கள் இரண்டு நாள் கூட பட்டினியாகக் கிடக்கும்! நாம் சோறு வைக்கும் வரை, சில நாய்கள் அதன் முன்பு உணவு வைத்தாலும் ‘சாப்பிடு’ என்று சொன்னால்தான் சாப்பிடும்! இல்லை நம் முகத்தைப் பார்க்கும்! வாயில் எச்சில் ஒழுகும்! ‘சாப்பிடு’ என்றால் சாப்பிடும்!
பூனை திருடிவிடும்! கொஞ்சம் லேட்டாகி விட்டால் உண்டு இல்லை என்று செய்துவிடும்!
தூக்கத்தில் நாய் மீது படுத்து இம்சை செய்தாலும், மீறிப்போனால், வள்… என்று அலறியபடி ஒதுங்கிப் போகும்!
தூக்கத்தில் பூனையை இம்சித்தால் பிராண்டி கடித்து விடும்!
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
காரணம்…பயம்! பாலைத் திருடிக் குடித்து விட்டோம், எப்போ வேண்டுமானாலும் அடி விழலாம்! ஆக பரண் மேல் போய் பாதுகாப்பாக படுத்துக் கொள்ளும்!
நாய்க்கு இவைகள் எல்லாம் இல்லை! அது உலவும் ‘என் மனதில் களங்கமில்லை, நான் எங்கும் தூங்குவேன்’
களங்கத்தைத் துடைத்துப் பாருங்கள்!
நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் இருந்து பாருங்களேன்!
மனதால் கூட யாரையும் இம்சிக்காமல் இருந்து பாருங்களேன்!
கொடுக்கும் வரை திருடாமல் இருந்து பாருங்களேன்!
வாழ்க்கை கிடைக்கும் வரை நன்றாக இருந்து பாருங்களேன்!
மனதளவில் கூட வஞ்சகம் எதுவும் எண்ணாமல் இருந்து பாருங்களேன்!
படுத்ததும் தூங்கிப் போவீர்கள்!!
படுத்ததும் தூங்குபவனுக்கு மருத்துவமனை தேவையிருக்காது!
நீங்கள் ஆறுமணிநேரம் நன்றாகத் தூங்கினால், அந்தத் தூங்கும் நேரத்தில் உங்கள் உறுப்புகள் அனைத்தும் எழுந்து உங்களைச் சரிசெய்து கொண்டிருக்கும்!
இரவுகளில் ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு உறுப்புக்கள் விழித்து ரீ ஃபிரஷ் செய்து கொள்ளும்!
அப்படி செய்து கொள்ளும் போது உங்கள் உடலுக்கு மருத்துவமனைகள் தேவைப்படாது!!
நாயைப்போல் தூங்குங்கள்…
