2026: Life Coach Dr. Tamizhmaran புதிய கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறார்.! – வாழ்க்கையை நாம் ஏன் இவ்வளவு அவசரப்படுத்திக் கொள்கிறோம்?
Life Coach Dr. Tamizhmaran
இன்றைக்கு பலருடைய வாழ்க்கை
ஒரு ஓட்டமாக மாறி இருக்கிறது.
எங்கே ஓடுகிறோம் என்று தெரியாது.
ஆனா ஓடிக்கிட்டே இருக்கிறோம்.
“Time இல்லை”
“Busy-aa இருக்கேன்”
“பின்னாடி பேசலாம்”
இந்த வார்த்தைகள் தான்
நம்ம தினசரி வாழ்க்கையின் அடையாளமாகிவிட்டது.
அவசரம் எங்கிருந்து வந்தது?
வாழ்க்கை நம்மை அவசரப்படுத்தவில்லை.
சூழ்நிலையும் கட்டாயப்படுத்தவில்லை.
நாம்தான் நம்மை அவசரப்படுத்திக்கொள்கிறோம்
யாரோ முன்னேறுற மாதிரி தெரிகிறார்கள்.
Facebook
Instagram
YouTube
Twitter
Life Coach Dr. Tamizhmaran
யாரோ வாழ்க்கையை “handle” பண்ணுற மாதிரி காட்டுகிறார்கள்.
அதை பார்த்தவுடன்
நம்ம மனசுக்குள் ஒரு அழுத்தம் வருது
“நானும் சீக்கிரம் எதாவது ஆகணும்.”
இந்த அழுத்தம் தான்
மனசை அமைதியா இருக்க விடாமல் செய்கிறது.
அவசர வாழ்க்கை என்ன பறிக்கிறது?
அவசரமாக வாழும்போது
நாம் இழப்பது பெரிய விஷயங்கள் இல்லை.
சின்ன சின்ன நிம்மதிகள்.
ஒரு நாள் நல்லா முடிந்தது என்ற உணர்வு.
ஒரு வேலை திருப்தியாக செய்தோம் என்ற சந்தோஷம்.
ஒரு உரையாடல் மனசை லேசாக்கியது என்ற நிம்மதி.
இதெல்லாம்
அவசர வாழ்க்கையில் மெதுவாக காணாமல் போகிறது.
மெதுவாக போவது தோல்வி இல்லை
பலர் நினைக்கிறார்கள்,
மெதுவாக போனால்
பின்னாடி போய்விடுவோம் என்று.
ஆனா வாழ்க்கையில்
மெதுவாக போவது தோல்வி இல்லை.
Life Coach Dr. Tamizhmaran
திசை தவறாமல் போவது தான் முக்கியம்.
நீங்கள் இன்று செய்யும் சின்ன முன்னேற்றம்
நாளைக்கு பெரிய மாற்றத்துக்கு காரணமாகலாம்.
அதற்கு அவசரம் தேவையில்லை.
இன்றைக்கு ஒரு சின்ன மாற்றம்
இன்றைக்கு மட்டும்
இந்த ஒரு முடிவை எடுங்கள்.
“நான் என்னோட வாழ்க்கையை
யாரோட வேகத்தோடு ஒப்பிட மாட்டேன்.”
இந்த முடிவு
உங்களை மெதுவாக
அமைதிக்குத் திரும்பக் கொண்டு வரும்.
முடிவாக
வாழ்க்கை ஒரு போட்டி இல்லை.
வாழ்க்கை ஒரு பயணம்.
அந்த பயணத்தில்
சிலர் வேகமாக போகலாம்.
சிலர் மெதுவாக போகலாம்.
ஆனா எல்லாருக்கும்
சரியான நேரம் வரும்.
அதை நம்பினால் போதும்.
– Life Coach Dr. Tamizhmaran
TOP TN UPDATES
நம் Life Coach Online Class-ல் கலந்து கொள்ள விரும்பினால்
கீழே LINKல் இருக்கும் WhatsApp எண்ணை தொடர்பு கொள்ளவும்.
