என் உயிரினும் மேலான மக்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்.. அவர்களும் என்னை கைவிட மாட்டார்கள் ஈரோட்டில் விஜய் பேசிய சரவெடிகள்…
நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் நடிகர் விஜயின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தேர்தல் நெருங்கி வருவதால் 2026 இல் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு எகிறிப் போய் உள்ளது என்றே சொல்லலாம்..அதுவும் குறிப்பாக ஒவ்வொரு மேடையிலும் விஜய் பேசுகின்ற போது இந்த முறை போட்டி ஒன்று திமுக இன்னொன்று தவெக என ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வருகின்றார்..அதுவும் குறிப்பாக நேற்று அவர் ஈரோட்டில் பேசிய பேச்சு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என்றே சொல்லலாம் அவர் தன்னுடைய பேச்சில் அப்படி என்னென்ன சரவெடிகளை கொளுத்தி போட்டு மக்களை ஈர்த்தார் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்..
தளபதி விஜய் பேசிய பேச்சுக்களின் சுவாரசியமான தொகுப்புகள் :
இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும்.
மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
மஞ்சள்… மஞ்சள்… பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னாடி மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள்.
நம் வீட்டில் கூட அம்மாக்கள், சகோதரிகள் நமக்காக நாம் நல்லா இருக்கணும் என்பதற்காக மஞ்சள் நிற புடவையை கட்டி வேண்டிப்பாங்க.
நம் கொடியில் கூட அந்த எனர்ஜெட்டிக்கான வைப் மஞ்சள் இருக்கும். அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாம வேறு எங்க போய் பேசுறது. அதுமட்டுமல்ல.. இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும். இந்த ஈரோடு மண். விவசாயத்துக்கும் பெயர் போன மண்.
இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை. காலிங்கராயன் கால்வாய்.
காலிங்கராயன் அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போதும், ரொம்ப சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய் பார்த்து சொன்னாராம். மகனே கலிங்கா.. தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கு.. மோர் விற்ற காசு முகடம் வரைக்கும் இருக்கு. அதை எடுத்துப்போட்டு போய் கால்வாய் வெட்டுரான் என்று தைரியம் கொடுத்தார்கள்.
பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தையரித்தை தான் நீங்கள்… என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள், தோழிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க.
இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை.. இந்த விஜிய மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று பேசினார்.
