Vijay Kutty Story: வெள்ளத்தை மென்ஷன் செய்து சொன்ன தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி கவனம் ஈர்த்தது
மலேசியாவில் நடைபெற்ற நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய உரை, பாடல், நடனம் உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவர் கூறிய குட்டி ஸ்டோரி சமூக வலைதளங்களில் தனி கவனம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியின் நிறைவில் விஜய் தனது ரசிகர்களுக்காக பாடியும், ஆடியும், உணர்ச்சிப்பூர்வமாக பேசியதுடன், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை மறக்க முடியாத நிகழ்வாக மாற்றினார். குறிப்பாக தனது குட்டி ஸ்டோரியில் சமீபத்திய வெள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டி கூறிய விஜயின் வார்த்தைகள், ரசிகர்களை ஆழமாக சிந்திக்க வைத்ததாக பேசப்படுகிறது.
விழாவில் நடிகை பூஜா ஹெக்டே குறித்து பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் மோனிகா பெல்லூச்சி ஸ்டைலில் அவர் நடனமாடியதை குறிப்பிட்டு, “தமிழ் சினிமாவின் மோனிகா பெல்லூச்சி” என தனது ஸ்டைலில் பாராட்டினார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியிருந்த பூஜா ஹெக்டேயின் சமீபத்திய ஹிட் பாடலை குறிப்பிட்ட விஜயின் பேச்சு, ரசிகர்களையும், பூஜா ஹெக்டேயையும், இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், நடிகை மமிதா பைஜு குறித்து பேசும் போது,
“இன்னைக்கு இளைஞர்கள் கொண்டாடும் டியூட் மட்டும் இல்ல; இந்த படத்துக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் டாட்டராகவும் மாறுவா,” என்று விஜய் கூறினார். ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு மகளாகவே மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், விஜயின் இந்த பாராட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் குறித்து பேசிய விஜய்,
“அனிருத் ஒரு MDS – Musical Department Store. அங்கே இருந்து எதை வேண்டுமானாலும் நிம்மதியா எடுத்துட்டு வரலாம். அவர் என்னை ஒருபோதும் ஏமாற்றியது கிடையாது,” என்று கூறி விழா நாயகனை பாராட்டினார்.
படத்தின் வில்லன் பாபி தியோல் குறித்து பேசும்போது,
“பாபி சார், உங்களுக்கே தெரியாமல் உங்களோட இரண்டு படங்களை சுட்டு நான் இங்கே படம் பண்ணியிருக்கேன். பிரியமுடன், வில்லு போன்ற படங்கள் எல்லாம் உங்க படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆனது தான்,” என்று விஜய் ஓபனாக கூறி ரசிகர்களை கவர்ந்தார்.
இயக்குநர் எச். வினோத்தைப் பற்றி பேசும் போது,
“என்னோட இயக்குநர் வினோத், சோஷியல் மெசேஜை கமர்ஷியலாக சொல்ல தெரிந்தவர்,” என்று பாராட்டிய விஜய், பிரகாஷ் ராஜுடன் தனக்குள்ள கெமிஸ்ட்ரி கில்லி படத்திலிருந்தே சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மொத்தத்தில், விஜயின் குட்டி ஸ்டோரி, அவரது பாராட்டுச் சொற்கள் மற்றும் எமோஷனல் பேச்சுகள், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்களுக்கு நீண்ட காலம் நினைவில் நிற்கும் நிகழ்வாக மாற்றியுள்ளது.
