2026: முதல் சூப்பர்ஸ்டார் M. K. Thyagaraja Bhagavathar பற்றி இந்த தலைமுறை அறிந்திடாத ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?? – பொம்மைகளும் உண்மைகளும் புத்தகத்திலிருந்து இயக்குனர் ரவிபார்கவன்.!

Superstar M. K. Thyagaraja Bhagavathar

தோள் வரை தொங்கும் முடி. செக்க சிவந்த நிறம். நெற்றியில் சந்தனம். ஒரு பஞ்ச கச்சம் வேஷ்டி. அது பட்டாக இருக்கும். வெறும் உடம்பில் பட்டு அங்கவஸ்திரம்.

Facebook
Instagram
YouTube
Twitter

அவர் காரில் ஏறி அமர்ந்து படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, ராஜநடை நடந்து, ஜவ்வாது வாசனை, அத்தர் வாசனை, புனுகு வாசனையோடு கம்பீரமாக வந்து நின்றால் மொத்தக் கூட்டமும் சொக்கிப் போகும். பெண்கள் ஆனந்த கூத்தாடுவார்கள். அவர் வாயைத் திறந்து ‘சொப்பன வாழ்வில்’ என்று பாட ஆரம்பித்தால் சொக்கிக் கிடக்கும் கூட்டங்கள்.

மக்களைக் கெடுத்த முதல் கிருமி, வீசும் காற்றில் விஷம் கலந்த நேரம் அது.
அந்த ஜவ்வாது வாசனையை அருகில் நின்று நுகர அதிகாரிகளின் மனைவிகள் தவம் கிடந்தார்கள். மின் விசிறியில் ஜவ்வாது, பன்னீரில் குளியல், பாட்டில் பாட்டிலாகப் பன்னீரைக் கொட்டி அதில்தான் குளியல், தங்கத்தட்டில் உணவு, வெள்ளி டம்ளரில் தண்ணீர், மின் விசிறி இல்லை என்றால், இரவு முழுவதும் விசிறிக் கொண்டிருக்க பணிப்பெண்கள், ஏக போக ராஜ வாழ்வு.

முதல் சூப்பர்ஸ்டார் M. K. Thyagaraja Bhagavathar, பைத்தியம் பிடித்து அலைந்தது தமிழ்க் கூட்டம். ரகசியமாக வந்து விழுந்தார்கள் பெண்கள். யாரையும் விட்டு வைக்கவில்லை. தாலியை அப்படியே தூக்கி அசால்ட்டாக முதுகுக்குப் பின்னால் வீசுவது, கசக்கி நுகர்ந்து படுக்கை அறையை வேட்டைக் காடாக மாற்றுவது.முதல் அழகன்… அழகாய் முதல் நடிகன்.
நடிகன் என்றால் அவனே கடவுள். ரட்சிக்க வந்தவன். மேய்ப்பன். அவனுக்கு பாத்ரூம் வராது, சிறுநீர் எல்லாம் கழிக்கமாட்டான். தமிழ் மக்களைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிய முதல் சூப்பர்ஸ்டார். வறுமையில் பிச்சை எடுத்து, கண் தெரியாமல் இறந்து போனது வேறு கதை.

Superstar M. K. Thyagaraja Bhagavathar

தமிழ் மக்களைக் கெடுத்த முதல் தமிழ் நடிகன். எப்படி மயங்கினார்கள்..?
நூறு வருட தமிழ் சினிமா. நூறு வருடமாக திரை இன்னும் தரையை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
இதோ அஜீத் வரை கடவுளாகவே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ் மாநிலம், தெலுங்கு மாநிலம், கன்னட மாநிலம், சினிமா என்றால் நிஜம் என்று நம்பும் பெரும்கூட்டம் இன்னும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்தார், என்.டி.ஆர் அங்கு ஆட்சியைப் பிடித்தார், இங்கு நாம் எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப் போட்டோம். அங்கு அவர்கள் என்.டி.ஆருக்கு ஓட்டுப் போட்டார்கள். ராஜ்குமாரை கன்னடத்தை மீட்கவந்த கடவுள் என்று கொண்டாடினார்கள். இன்னும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சரி, நடிகன் மட்டும்தான் நாட்டைக் கெடுத்தார்களா? படைப்பாளிகள் கெடுக்கவில்லையா? ஏதோ தாங்கள் பூமிக்கு செய்தி சொல்ல வந்த தூதர்களாகவே தங்களை எண்ணிக் கொண்டார்கள் படைப்பாளிகள்.

Superstar M. K. Thyagaraja Bhagavathar

சினிமா வெளியே வசந்தம் வீசும், தென்றல் வீசும் ஒரு சொர்க்கலோகம். அந்த சொர்க்க லோகத்தின் உள்ளே அடிக்கும் கெட்ட வாடைகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? கெட்ட வாடைகள் என்றால் நடிகனில் ஆரம்பித்து கடைக் கோடி தேநீர் கொடுக்கும் நபர் வரை புரையோடிக் கிடப்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர்களை அவர்களே கெடுத்துக் கொண்டு, அவர்களுக்கு அவர்களே குழி தோண்டிக் கொண்டு, மக்களையும் கெடுத்து, அந்த மக்களுக்குக் குழி தோண்டும் வரலாறு உங்களுக்கு தெரியுமா?

வெளியே பூக்கடை. உள்ளே சாக்கடை.

Privacy & Policy
Disclaimer
Contact us
About us