புதுச்சேரியில் TVK தலைவர் விஜய்யின் அனல்பறக்கும் வெறித்தனம்.!தொண்டர்கள் ஆரவாரம்.!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த். இவர்கள் இருவருக்கு பிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நடிகர் விஜய் கொண்டாடி வருகிறார்கள்.. 2026 அரசியலில் விஜய் மாபெரும் தலைவராக வலம் வருவார் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தமிழக முதல்வராவார் என்று அவரது ரசிகர்களும் தொண்டர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க விஜய் எப்போது அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் வந்தாரோ அப்போதிருந்தே அவருக்கு தொடர்ந்து பிரச்சனையும் வர ஆரம்பித்துவிட்டது.இருந்தாலும் அது எதையும் அவர் அரசியலாக்காமல் மிகவும் நிதானமாக செயல்பட்டு வருகின்றார்…
கரூர் சம்பவம் நடந்த 73 நாட்களுக்கு பின் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். காலை முதலே புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் குவிந்து வருகின்றனர். புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் – பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கும் சூழலில், விஜய்யின் பேச்சு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் அப்படி என்ன பேசினார் என்பதைப் பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்..
புதுச்சேரியில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும்; நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம் என்றும்
புதுச்சேரி பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு மாநில அந்தஸ்துதான்
இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான் என்றும் இங்க இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் என்ன பாவம் செய்தார்கள் என்றும் பின் புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிடுவார்கள்:
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றும்
புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை: அதே நேரத்தில் புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? என்றும் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்
கரூர் சம்பவத்திற்கு பின், புதுச்சேரியில் விஜய் களமிறங்கி இருக்கிறார்: அலைகடலென அங்கும் அவர்களுடைய ரசிகர்கள் பட்டாளம் திரண்டு அவரை வரவேற்றது. விஜய் பேசி முடித்ததும்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும், காவல்துறைக்கும் நன்றி சொன்னார் ஆதவ் அர்ஜுனா.. புதுச்சேரியிலும் தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் ஆதவ் அர்ஜுனா
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டத்திற்கு அரங்கு அமைக்க அனுமதி அளிக்கப்படாத சூழலில், விஜய்யின் பிரச்சார வாகனம் மீது நிரந்தர மைக் பொருத்தப்பட்டுள்ளது பற்றியும் உரத்த குரலில் சொன்னார்
2026ல் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வருவார்.. அதேபோல் புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி அமையும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்…உப்பளம் மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டுள்ள நிலையில், பாஸ் இல்லாதவர்களையும் அனுமதிக்க தவெகவினர் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கும் நிலையில், நுழைவு வாயிலில் போலீசார் – தவெக இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது…
விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தவெக பொதுக்கூட்டம் நடக்கும் நுழைவுவாயிலில் தவெகவினர் பலரும் முண்டியடித்து கொண்டு உள்ளே புகுந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதுச்சேரி போலீசார் தவெகவினரை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
