நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷின் மகன், நடிகர் ஆனந்த்பாபுவிற்கு நடந்த சோகம்.!
எத்தனையோ நடிகர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் ஒரு சில நடிகர்களின் இடம் மட்டும் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும் அந்த இடத்தை அவர்களை தவிர வேறு யாராலும் நிரப்ப இயலாது.. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத மாபெரும் நடிகர் தான் நாகேஷ் அவர்கள்..இயக்குனருக்கு பாலச்சந்தரின் ஆஸ்தான ஹீரோ, இப்போது வரை கமலஹாசனிலிருந்து பெரிய உச்ச நட்சத்திரங்கள் வரை நாகேசுடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.. நாகேஷின் உச்சத்தை தொட முடியவில்லை என்றாலும் அவருடைய மகன் ஆனந்த் பாபுவும் மிகவும் திறமையான ஒரு கலைஞர்தான்..
தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் எந்தவொரு பெரிய ஹீரோ பட்டமும் இல்லாமல் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்கள். அந்த வரிசையில் மக்கள் மனதில் இடம் பிடித்த ஒருவர் தான் ஆனந்த் பாபு. பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகனான இவரின் திறமையான நடிப்பு, இயல்பான காமெடி, அப்பாவி முகம் இவை எல்லாம் சேர்ந்து அவரை தனியாக அடையாளம் காட்டியது.
நடிகர் ஆனந்த் பாபு தன் அப்பாவின் பெயரை வைத்து சுலபமாக வாய்ப்புகளை தேடியிருக்கலாம். ஆனால், தன்னுடைய பாதையை தனியா அமைத்தது மட்டுமல்லாமல் ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, காமெடி ரோல்கள், நெக்கடிவ் கதாபாத்திரம் என அனைத்து கேரக்டர்களிலும் தன்னை நிரூபித்தார். இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘தங்கைக்கோர் கீதம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆனந்த் பாபு பல படங்களில் நடித்துள்ளார்.
இருந்தாலும், இவரால் நடிகர் நாகேஷ் போன்று ஜொலிக்க முடியவில்லை. ஆனந்த் பாபு கதைத் தேர்வுகளில் கோட்டைவிட்டதாக கூறப்படுகிறது. இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலயில், நடிகர் ஆனந்த் பாபு தன் அப்பா பெயரை நிரூபிப்பதற்காக வெறித்தனமாக ஆடியதாக கூறியுள்ளார்.
நான் காலேஜுக்கு போனதும், என்கிட்ட பாட்டு பாட தெரியுமா?ன்னு கேட்டாங்க. தெரியாதுன்னு சொன்னேன். டான்ஸ் ஆட தெரியுமா?ன்னு கேட்டாங்க. அதுக்கும் தெரியாதுன்னு சொன்னேன். உடனே நீ எல்லாம் நாகேஷ் ஐயாவோட பிள்ளையாடா?’ன்னு கேட்டாங்க.
அந்த கேள்வி கேட்டதும் மனசுக்குள்ள சுருக்குன்னு ஆயிடுச்சு. நீர்க்குமிழி படத்தில் என் அப்பா, கன்னி நதியோரம் என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்த படத்தை 2 காட்சிகள் விடாமால் பார்த்தேன். அப்போது நான் படம் பண்ணவில்லை. அந்த பாடலுக்கு நடனமாடி பயிற்சி எடுத்துவிட்டேன். 10 கல்லூரிகள் கலந்து கொண்ட போட்டியில் கலந்து கொண்டு நடனமாடி முதல் பரிசு வென்றுவிட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என் அப்பா நாகேஷ் தான் வந்திருந்தார். அவர் கையால் தான் பரிசு வாங்கினேன்.
கன்னி நதியோரம் பாடல் பார்த்துவிட்டு நான் ரூமில் பட்டபாடு எனக்கு தான் தெரியும். ஏனென்றால் அப்பா ஒரு ஃபீலிங்கோட ஆடுவார். எனக்கு அந்த ஃபீலிங் வரவில்லை. அப்படி நானே அந்த பாடலுக்கு நடன பயிற்சி எடுத்து முதல் பரிசு வாங்கினேன். அதன்பிறகு மெடிக்கல் படிக்க சென்றேன். பின்னர் டி.ஆர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி எனது வாழ்க்கையை மாறிவிட்டது. நான் நாகேஷின் மகன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வெறி தான் என் மனதில் இருந்தது” என்றார். சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாததால் இவர் கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மௌனம் பேசியதே” சீரியலில் வில்லனாக நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
