சிறு படங்களின் நிலை பரிதாபம்: சல்லியர்கள் OTT-க்கு ஓடுகிறது – சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டு.!
இயக்குனர் கிட்டு இயக்கத்தில், வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட சல்லியர்கள் திரைப்படம், சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் போன்ற நடிகர்களுடன் வெளியானது. ஆனால், படம் வெளியான போது போதுமான அளவு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதனை எதிர்நோக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ரிலீஸை நிறுத்தி, படத்தை நாளை நேரடியாக ஓடிடி பிளஸ் (OTT PLUS) தளத்தில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது, சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளிப்படையான பதிவு ஒன்றை வெளியிட்டு, திரையரங்குகளில் படத்திற்கான நிலையை பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்டதாவது, “எமது படம் ஜனவரி 1 அன்று வெளியிடப்பட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. இன்று சிறிய படங்களின் நிலை இதுதான். வெறும் 27 திரையரங்குகளை வைத்து படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை. பெரிய படங்களுக்கும் கூட திரையரங்குகள் வழங்கப்படுகின்றன, ஆனால் சிறிய படங்களுக்கு அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை.”
சுரேஷ் காமாட்சி மேலும் கூறியதாவது, “நாங்கள் எடுத்திருப்பது தமிழ் மக்கள் சார்ந்த, ஈழத் தமிழர்களுக்கான படம். எங்கள் மக்களுக்கான படத்தை வெளியிட இவ்வளவு போராட்டம் உள்ளது. குறிப்பாக பிவிஆர் திரையரங்கில் ஒரு திரையரங்கும் கிடைக்கவில்லை. கேட்டாலும் தரவில்லை. இவ்வளவு திரையரங்குகள் நிரம்பியுள்ளது, ஆனால் எங்களுக்கு தரவில்லை.”
தற்போதைய நிலையை அவர் கடுமையாக விமர்சித்தார்: “ஒரு படம் ஓடாதுன்னு தீர்மானிக்க யார்? திரையரங்கு கொடு, படம் ஓடவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் முன்கூட்டியே தீர்மானிப்பது ஏன்? பெரிய படங்களில் காசு பார்த்துக் கொண்டு சிறிய படங்களை நசுக்கி கொள்கிறது. இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்லச் சாகும். ஏற்கெனவே நிலை செத்துப்போயுள்ளது, இனியும் இதுபோல் தொடர்ந்தால் மேலதிக பாதிப்பு ஏற்படும்.”
இதனால், சல்லியர்கள் படக்குழு படம் OTT PLUS தளத்தில் உலகம் முழுக்க உள்ள தமிழர்களுக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. தயாரிப்பாளர், மக்கள் ஆதரவு மிக முக்கியம் எனவும், படம் வெற்றி பெற உகந்த மக்கள் ஊக்கத்தை வேண்டிக் கொண்டார். மேலும், பிரசாத் லேப் திரையரங்கில் படம் வெற்றிப்படமாக இருக்கும் விழா நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
சுரேஷ் காமாட்சியின் பதிவு, சிறிய படங்கள் எதிர்கொள்ளும் திரையரங்கு பிரச்சினைகள் மற்றும் கர்ப்பரேட் முறைகேடுகள் குறித்து திகில் எழுப்பும் வகையில், தமிழ் திரையுலகின் நடப்பு நிலையை வெளிப்படுத்துகிறது.
