அம்மாடியோவ்… அவதார் 3 படத்துக்கான செலவு இந்திய மதிப்பில் இத்தனை ஆயிரம் கோடிகளா ? கேக்கும் போதே தல சுத்துதே.!

சினிமா என்றாலே ஒரு காலகட்டத்தில் திருவிழா போல் எல்லோரும் கொண்டாடினார்கள் ஆனால் நாகரீக மாற்றத்தில் இப்போது மக்கள் மிகவும் தெளிவாக ஒரு மனநிலையில் இருப்பதால் ஒரு 50 சதவீதம் சினிமாவை சினிமாவாக மட்டும் பார்த்துவிட்டு தங்களுடைய வேலைகளில் முழு கவனம் செலுத்தி வருகின்றார்கள் அதே நேரத்தில் சினிமாவை மட்டுமே தங்களுடைய வாழ்க்கையாக நினைப்பவர்கள் அந்த மாயையான உலகத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. போதிய படிப்பறிவு இல்லாத காலகட்டத்தில் சினிமா ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது சினிமாவில் நடிக்கின்ற அனைத்தையும் மக்கள் நிஜம் என நம்ப ஆரம்பித்தார்கள்..

சினிமாவில் நடித்த அரசியலில் ஆட்சியைப் பிடித்த பிரபலங்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள் அது தமிழ்நாட்டிலும் நடந்திருக்கின்றது தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வளர ஆரம்பித்தபின் அதனுடைய மாற்றம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.. ஒரு காலகட்டத்தில் வாரம் வெள்ளிக்கிழமை கிராமப்புறங்களில் இருக்கின்ற பஞ்சாயத்து யூனியன்களில் ஒரு தொலைக்காட்சி பெட்டி வைத்து அதில் ஒளியும் ஒலியும் என்ற ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் 30 நிமிடம் ஒளிபரப்பாகக்கூடிய அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஆறு பாடல்கள் ஒளிபரப்பாகும் இந்த ஆறு பாடல்களை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடும் என்றே சொல்லலாம் அது திருவிழா போல் கலைகட்டும் அப்படி இருந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து நாகரீக மாற்றம் ஏற்பட்டு திரைப்படங்கள் வர ஆரம்பித்தபோது அப்போதே ஹாலிவுட் படங்களையும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்..


ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பிப்பதை ஒரு மிகப்பெரிய கௌரவமாகவும் இந்த படங்களை எல்லாம் நாம் பார்த்தால் தான் நம்மை ஒரு பெரிய அறிவாளியாகவும் நினைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலகட்டமும் உண்டு அந்த நேரத்தில் டைட்டானிக் என்ற ஒரு படம் உலக அளவில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம் இப்போது வரை அதில் நடித்த ஜாக் ரோஸ் இவர்கள் இருவருடைய கதாபாத்திரமும் ரசிகர்களின் வாயில் முணுமுணுக்க வைக்கின்றன இந்த படத்தை இயக்கிய இயக்குனர் தான் ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை இயக்கி இவர் இந்த படத்தை பார்த்ததை விட இதற்கென்றே இருந்த வெறித்தனமான ரசிகர்கள் இதை பார்த்தது தான் அதிகம் அந்த ஜேம்ஸ் கேமரூன் இன் கைவண்ணத்தில் உருவாகி அவதார் எனும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது உலக அளவில் மிகப்பெரிய பொருட் அளவில் எடுத்த திரைப்படம் அது. அதனுடைய முதல் பாகமும் மிகப்பெரிய வெற்றி இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி.. இப்போது இன்று ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகிய அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது இந்த படம் 400 மில்லியனுக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது அதிக பொருட்ச அளவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் இந்த அவதார் 3 படமும் இணைந்துள்ளது.. அவதார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தீவே ஆப் வாட்டர் என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டு வெளியானது உலக அளவில் அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக 160 மொழிகளில் வெளியானது இந்த பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து அவதார் படத்தின் மூன்றாம் பாகம் அவதார் ஃபையர் அண்ட் ஆஸ் என்ற பெயரில் தயாராகி உள்ளது ஷாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்..

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் 300 மில்லியனுக்கு அதிகமாக இருக்கும் என்றும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்றும் விஷுவல் எபக்ட்ஸ் போன்ற பணிகளை சேர்த்து படத்தின் மொத்த செலவு 400 மில்லியனுக்கும் மேலாக உள்ளது என்றும் இது இந்திய ரூபாயில் ரூபாய் 3 ஆயிரத்து 614 கோடியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன், ஸ்ட்ரேஞ்சர் டைட்ஸ் படம் உள்ளது. இந்த படம் 379 மில்லியன் செலவில் அதாவது இந்திய ரூபாயில் 3425 கோடியாக இருந்தது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 365 மில்லியன் டாலரிலும் ஸ்டார்வார்ஸ் தி ரைஸ் ஆப் ஸ்கைவாக்கர் திரைப்படம் 275 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டன அதாவது அவதார் திரைப்படத்தின் முந்தைய படமான அவதார் தீவே ஆஃப் வாட்டர் படம் சுமார் 350 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. முந்தைய படத்தை விட அவதார் மூன்று படத்தின் பட்ஜெட் 50 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளதால் இந்த படத்தின் வசூல் இரண்டு புள்ளி ஐந்து மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.

அவதார் 3 உள்நாட்டில் 100 மில்லியன் முதல் 130 மில்லியன் வரை வசூலிக்கும் என ஆரம்பகட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பாரிஸில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் நான்காவது பாகத்தை இயக்கப் போகின்ற எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.