தன் 2வது காதல் மனைவியை விவாகரத்து செய்ய போகும் செல்வராகவன்.. காரணம் தனுஷா??
பொதுவாகவே எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் இரண்டுமே கலந்திருக்கும்..ஆனால் அதைப்பற்றி யாரும் பெரிதாக வழிகாட்டிக்கொள்வதில்லை பெரிதாக பேசிக் கொள்வதும் இல்லை ஆனால் திரை பிரபலங்கள் என்றால் மட்டும் அந்த விஷயம் மிகவும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.. அந்த விதத்தில் தன்னுடைய வித்தியாசமான இயக்கத்தால் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் செல்வராகவன்.. ஆனால்
தனது மனைவி கீதாஞ்சலியை இயக்குனர் செல்வராகவன் விவாகரத்து செய்ய போவதாக சொல்லப்படும் நிலையில் அவர் மனம் உடைந்து கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் செல்வராகன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி இருவரும் பிரிவதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், செல்வராகன் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, இருவருக்கும் இடையே விவாகரத்து நடப்பது உறுதி என சினிமா வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.
கீதாஞ்சலி செல்வராகன்
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், செல்வராகன் மிகவும் மனவலியுடன் பேசும் காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், “நான் மிகவும் மோசமான ஒரு காலகட்டத்திலிருந்து விலகி, இப்போது உங்கள் முன் உட்கார்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்திருக்கிறேன்” என்று கூறினார். மேலும், அந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது சொல்ல மாட்டேன் என்றும், விரைவில் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பேட்டியே தற்போது பல யூகங்களுக்கு காரணமாகியுள்ளது.
செல்வராகன் குடும்பம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குனராக செல்வராகன் அறியப்படுகிறார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க படங்களை அவர் இயக்கியுள்ளார். வழக்கமான கமர்ஷியல் பாதையை தவிர்த்து, காதல், மனநிலை, அரசியல், சமூக சிந்தனை போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு படங்களை உருவாக்கியவர். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகன், தனது தம்பி தனுஷை வைத்து பல வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார்.
செல்வராகன் தனது புதுப்பேட்டை படத்தின் போது நடிகை சோனியா அகர்வாலை காதலித்து, 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, 2009-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர். அந்த பிரிவுக்குப் பிறகு, செல்வராகன் தனிமையான வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தார்.
செல்வராகன் சோனியா அகர்வாலுடன் திருமணம்
பின்னர் மயக்கம் என்ன படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, 2011-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கீதாஞ்சலி செல்வராகனின் இரண்டாவது மனைவி. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நீண்ட காலமாக சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்ட இவர்களுக்கிடையே தற்போது பிரிவு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த வதந்திகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகனின் புகைப்படங்களை நீக்கியிருப்பது தான். அதேபோல், செல்வராகனும் கீதாஞ்சலியின் புகைப்படங்களை நீக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீப காலமாக சினிமா பிரபலங்கள் காதல் அல்லது திருமண பிரச்சினையில் சிக்கும்போது, சமூக வலைதளங்களில் இருந்து புகைப்படங்களை நீக்குவது ஒரு “சிக்னல்” போல பார்க்கப்படுகிறது. இதனாலேயே நெட்டிசன்கள் பலரும் “ஏதோ பிரச்சினை இருக்கிறது” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில், கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பெயரை இன்னும் ‘கீதாஞ்சலி செல்வராகன்’ என்றே வைத்திருப்பது, இந்த வதந்திகளில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செல்வராகன் அல்லது கீதாஞ்சலி தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே உண்மை என்ன என்பது, சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக பேசும் வரை காத்திருப்பதே சரியானது என ரசிகர்களும் நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் செல்வராகவனின் தீவிரமான ரசிகர்கள் ஏற்கனவே அந்த மனுஷன் வாழ்க்கையில் ரொம்ப நொந்து போயிருக்காரு அதனால இதுக்கப்புறம் எதுவும் அவருக்கு தப்பா நடந்துட கூடாது என்று தங்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்து வருகிறார்கள்…
