2026: இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன் ஏன் மனிதர்களை (Cockroach)கரப்பான் பூச்சிகள் போல் நிலைத்திருக்க சொல்கிறார் தெரியுமா?
(Cockroach) கரப்பான் பூச்சிகளைப் போல் சாதியுங்கள். கரப்பான் பூச்சிகளைப் போல் உயிர் வாழுங்கள். கரப்பான் பூச்சிகளைப் போல் பசித்திருங்கள்.
கரப்பான்பூச்சியைப் போல் வாழ்க்கையா.!? ஒரு கரப்பான்பூச்சி மனிதனைவிட மேலா? இது என்னமோ மனிதர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது!
நண்பர்களே..!
Facebook
Instagram
YouTube
Twitter
அவசரப்படாதீர்கள் ஹிரோஷிமா –நாகசாகி! அணுகுண்டு வீசப்பட்டது. நொடிப் பொழுதில் கட்டிடங்கள், மனிதர்கள் பொசுங்கிப் போனார்கள்.
ஒரே நிமிடத்தில் ஹிரோஷிமாவில் எழுபதாயிரம் பேர் சுருண்டு விழுந்து கிடந்தார்கள்! கை கால்கள் கோணி, கண்கள் வெளியே தள்ளப்பட்டு ரத்த வாந்திகளோடு ஐம்பதாயிரம் பேர் உயிருக்குப் போராடினார்கள்.
எல்லையைக் கடந்தும் கதிர் வீச்சுக்கள்! வயிற்றில் இருக்கும் எட்டுமாத சிசுக்கள் கூட இறந்து… இறந்ததும் அழுகியது. மீட்பு பணிகளுக்குக் கூட யாரும் செல்லவில்லை. ஜப்பானிய மன்னர் ரேடியோவில் கதறினார்! இராணுவம் கூட செல்லத் தயங்கியது!
இருபதுநாட்கள் கழித்து தக்க கவசங்களோடு இடிபாடுகளை அகற்றினார்கள். கருகிக் கிடந்த பிணங்களை அப்புறப்படுத்தினார்கள்.
அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது! தோண்டத் தோண்ட கரப்பான் பூச்சிகள் ஆயிரக்கணக்கில் வெளியேறியது. மனிதன் தோன்றுவதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது!
கரப்பான் பூச்சிகள் வரலாறு வியக்கத்தக்கதாக இருந்தது! எவ்வளவு பெரிய இடர்பாடுகளிலும், இக்கட்டுகளிலும் வருடக்கணக்கில் கூட கரப்பான் பூச்சிகள் சாப்பிடாமல் வாழ முடியும்! கொஞ்சம் காற்று கிடைத்தால் போதும், மிகக் கொஞ்சமே கொஞ்சமாகச் சுவாசித்து, சக பூச்சிகளையும் சுவாசிக்க வைத்து, இருந்த நிலைகளில் அப்படியே இருக்கும்! நிலைத்திருக்கும்!
ஒரேயொரு நாள் சம்மர் வெயிலில் பத்து நிமிடம் கரன்ட் இல்லை என்றால், மனிதனுக்கு உயிரே போய் விடும். என்னவோ ஒட்டு மொத்தமாக, கடவுள் துரோகம் செய்ததாக எண்ணுவான்!
வண்டி பஞ்சராகிவிட்டால் குந்தியே [குந்துவது, இருக்கையில் குந்துவது… குந்தி.] பஞ்சராகி விட்டது போல் டென்ஷனாவான்! நிறைய தமிழ் வார்த்தைகள் இப்படி மருவி தவறாக உச்சரிக்கப்படுகின்றன.
தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து என பார்த்தால்… அது செம்மொழிதான்!
ஆக, ‘அனைவருக்கும் வசதிகள் ஒரு நிமிடம்தானே இல்லை’ என்றெல்லாம் மனிதன் நினைப்பது இல்லை. வெறித்தனமாகத் திட்டிக் கொள்வது. கப்பல் உடைந்தால் தற்கொலை செய்து கொள்வது!
அதேசமயம் 1982–ல் ஸ்கைலாப் என்கிற ராக்கெட் விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கப் போகிறது குறிப்பாகத் தமிழ்நாட்டில் விழப் போகிறது – என்கிற பீதி கிளம்ப, ‘ஓடுங்க… ஓடுங்க அது நம்மள நோக்கி வருது’ என்று பயந்து, இரவோடு இரவாக சொத்துக்களை விற்று மூன்று வேளையும், கறியும், மீனையும் எடுத்துத் தின்றான் தமிழன்! காரணம், நாளை ராக்கெட் விழுந்தால் செத்து விடுவோம், மேலே கறி கிடைக்காதாம்!
ஆனால் (Cockroach)கரப்பான் பூச்சிகள் ராக்கெட் விழுந்து பொசுக்கினாலும் வாழும். திடம், நிலைத்தல், வாழ்ந்து ஆக வேண்டும் என்றால் பதுங்கிப் பாதுகாத்துக் கொள்வது!
(Cockroach)கரப்பான் பூச்சிகள் போல் பசியாற்றுங்கள்! பட்டப்பகலில் நல்ல வெளிச்சத்தில் கரப்பான் பூச்சிகள் உணவு தேடி அலைவதில்லை. அதற்கு இருட்ட வேண்டும். வெளிச்சம் இருக்கக் கூடாது. சுத்தமற்ற கிச்சன்களில் இரவுகளில் அங்கு கரப்பான் பூச்சிகள் ஆட்கொள்ளும்! நடமாடும் பல்கிப்பெருகும்!
பெஸ்ட் கன்ட்ரோலுக்கு ஃபோன் செய்து ஆறு மாதங்கள் மருந்து வைத்தாலும், வெளியேறி பயணித்துப் பதுங்கிவிடும்! ஹிட் அடித்தாலும் தன் வாழ்க்கையில் தொடர்ந்து ஹிட் அடித்துக் கொண்டே இருக்கும்! குட்நைட் அடித்தாலும் நிதானமாக வந்து கிச்சனுக்குள் வந்து குட்நைட் சொல்லும்! பக்கத்தில் படுத்து இருக்கும் மனிதனின் பக்கத்தில் படுத்து இருக்கும்!
இரவுகளில் லேப்டாப்பை வைத்துக் கொண்டோ அல்லது தொலைக் காட்சியில் சினிமா பார்த்துக் கொண்டோ இருக்கும் போது அவனுக்கு கொறிப்பதற்கு ஏதோ வேண்டும்.
சூழ்நிலைக்கேற்ப வாழ்வதுதான் வாழ்க்கை என்கிற தத்துவத்தை கண்டு பிடித்தவன் மனிதன். ஆனால் அந்தத் தத்துவத்தை பின்பற்றுவது கரப்பான் பூச்சிகள்!
பசித்திரு, விழித்திரு மனிதனுக்கு! பசித்திருப்பதும் விழித்திருப்பதும் (Cockroach)கரப்பான் பூச்சிகள் மட்டுமே!
எழுமின் விழுமின் என்பதை அற்ப மனிதர்களுக்கு சொன்னாரோ, கரப்பான்பூச்சிகளுக்குச் சொன்னாரோ தெரியவில்லை!
பேசாமல் ‘நூறு கரப்பான் பூச்சிகளை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன்’ என்று இருந்தால், நூறு கோடி கரப்பான் பூச்சிகள் அணி வகுத்திருக்கும்!
‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றார் ஏசுபிரான்! (Cockroach)கரப்பான் பூச்சிகள் எதைக் கொண்டு தாக்கினாலும் அமைதியாக உயிர்த்தெழுந்து விடுகிறது!
‘அண்டை வீட்டார்க்கு பகிர்ந்து கொடு’ என்றார் நபிகள்நாயகம். சொன்னது கரப்பான் பூச்சிகளுக்கோ!?
மகா ஆத்மாக்கள் சொன்னதை எல்லாம் மனிதர்கள் கேட்டதாக இல்லை! கரப்பான் பூச்சிகள் கேட்டிருக்கிறது!!
நேற்று கிடைத்த வசதிகள், இன்று கிடைக்கவில்லையே… என்று தளர்ந்து போகாதே! இந்த மணிநேரத்தில் எல்லாம் முடிந்து விட்டதா..?
பதுங்கி விழித்து இழந்தவைகளை மீட்கப் போராடுங்கள். கரப்பான்பூச்சிகளைப் போல்!
