2026: இயக்குனர் Ravi Bhargavan ஏன் மனிதர்களை தூக்கணாங்குருவி போல காதலிக்க சொல்கிறார் தெரியுமா?

தூக்கணாங்குருவி போல் காதலியுங்கள் – Ravi Bhargavan.
‘அது என்ன தூக்கணாங்குருவிகள் எங்களைவிட அவைகள் காதலில் மேன்மையா!?’
ஃபிகர் கரெக்டானா உடனே மாயாஜால், ஐநாக்ஸ் கூட்டிக் கொண்டு போய், உயர் வகைச் சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுக்கிறோம்!

Facebook
Instagram
YouTube
Twitter

இயக்குனர் Ravi Bhargavan

பாவம் இன்னொருவனுக்கு பொண்டாட்டி ஆகப்போறவளுக்கு ஏன் செலவு செய்யறேன்னு தெரியல!? திடீர்ன்னு ரெண்டு பேருக்கும் சண்டை வரும்! சில்லிச்சிக்கனைச் சாப்பிட்டு சில்லித்தனமாக சண்டையிட்டு, ‘ஐ ஹேட் யூ’ அவனும், ‘ஐ ஹேட் யூ’ என்று பிரிந்து போவீர்கள். அவனுக்கு இன்னொரு ஃபிகர். அவளுக்கு இன்னொரு சுகர்!
காதல் என்பதின் இன்னொரு பெயர் அவசரம்! அவசரம் அவசரமாக காதலிப்பது! அவசரமாக முடிப்பது! அவர்களாகவே பிரிந்து செல்வது!

நம்மில் காதலிக்கும் ஆண்கள், காதலிக்கும் பெண்ணை எப்படி நேசிக்க வேண்டும் தெரியமா? வாருங்கள்..!
தூக்கணாங்குருவிகளைக் கொஞ்சம் ஆராய்வோம் பருவம் வந்ததும் தாய் தந்தை கட்டியிருக்கும் படு அசத்தலான கூட்டிலிருந்து வெளியேறும்! துல்லியமாகக் கட்டமைக்கப்பட்ட கூடு அது! இடி, மின்னல், மழை, புயல், சுனாமி எது வந்தாலும் மரம் வேரோடு சாயும்! தூக்கணாங்குருவிகள் கூடுமட்டும் அப்படியே இருக்கும்!

இயக்குனர் Ravi Bhargavan

ஒரு வேளை கூடுகள் தூக்கி வீசப்பட்டு கடலில் போய் விழுந்தாலும், பெரும் அலைகள் அடித்து அதில் உழண்டு எங்கோ கரை ஒதுங்கினாலும், உள்ளிருக்கும் தாயும் குஞ்சும் பத்திரமாக இருக்கும்! பலமான இரும்புக்கோட்டை தூக்கணாங்குருவிக் கூடு!
அப்படி ஒரு நார்கள்! வேப்பமரம் போன்ற மரங்களின் குச்சியின் இலைகளை… அதாவது விதவிதமான இலைகளில் இருந்து பெறப்படும் இலைகளை எல்லாம் பிய்த்துப் போட்டு காம்புகளை மட்டும் தூக்கி வந்து கொஞ்சம் கொஞ்சமாக பாதுகாப்பான இடத்தில் சேகரிக்கும்!

ஒரு ஆண் குருவி, இந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டு இருக்கும் போதே ஒரு காதலியைத் தேடி கண்டுபிடிக்கும்! காதலியைக் கவர்ந்து, கூடு கட்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து விடும்!
அதன் கண் பார்வையில் பலபல ஜாலங்கள் செய்து வால் சிறகுகளை விரித்து நடனமாடிக் காட்டுதல்!
கூட்டைக் கட்டி கொண்டே தானும் இரை தேடி, இரை இருக்கும் இடத்தைக் காதலிக்கும் காட்டி, மீண்டும் மரத்திற்கே அழைத்து வந்து, கூட்டையும் கட்டிக் கொண்டு, ஒரு சேஃப்பான இடத்தில் காதலியைத் தூங்க வைத்துக் கொண்டு, அது விழித்துக் கொண்டு இருக்கும்!
காரணம், மரத்தில் இருக்கும் பாம்புகளிடம் இருந்து காதலியைக் காப்பாற்ற அதுமட்டும் விழித்திருக்கும்!
அதாவது கூடுகட்டி முடியும்வரை அது காவல் காக்கும்!

இயக்குனர் Ravi Bhargavan

தூக்கணாங்குருவிகள் கூடு கட்டுவதற்கு, நாற்பத்ததைந்து நாட்கள் வரை ஆகும்! கட்டி முடித்தவுடன் கிரகப்பிரவேசம்!
ஆமாம், தண்ணீரை உறிஞ்சி வந்து தன் நாவில் இருக்கும் பசையோடு சேர்த்து, கூடுகள் மேல் தெளிக்க ஆரம்பிக்கும். உள்ளே பசையோடு சேர்ந்துதான் கூட்டிப் பின்னிக் கொண்டிருக்கும்!

இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும் ஒரு தூக்கணாங்குருவிக் கூட்டை கலைத்துப் போட்டு மீண்டும் கூட்டை செய்ய இயலவில்லை!
நார்களைப் பின்னுவதில் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக நார்களைப் பின்னுவதில், நார்களை வெளியே எடுத்து மீண்டும் நுழைப்பதில் எந்த ஆராய்ச்சியாளர்களும் வெற்றி பெறவில்லை!

இந்தத் தருணம் வரை தூக்கணாங்குருவிக் கூடுகள் புதிரானவை! மர்மமானவை!
தான் வளர்ந்த கூட்டிற்குள் எந்த ஆண் குருவியும் மீண்டும் நுழைவது இல்லை! பெண் குருவிகள் கூட்டிற்குள் இருக்கும்! தன் மணவாளன் தனக்காகத் கட்டிய அந்த வீட்டிற்குள் காத்துக் கொண்டிருக்கும்!

இயக்குனர் Ravi Bhargavan

அதே போல் அந்தக் கூட்டில் முதன் முதலாக காதலியை உள்ளே போக அனுமதித்து, அதாவது வலது காலை வைத்து அழைத்து பின்னால் செல்லும்!
காதலன் நீண்டதூரம் வரை பயணித்து பஞ்சுகளை சுமந்து, ஒரு படுக்கைஅறை, முட்டைகளை அடைகாப்பது, கழிவுகளை வெளியேற்றுவதும், குஞ்சு பொரித்து வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் அந்தக் கூட்டின் புடைத்த பகுதியில் இருக்கும்! குருவி வகைகளைச் சேர்ந்த சில பறவைகள் கூட்டைப் பூக்களாலும் அலங்கரிக்கும்.

சில பறவை இனங்கள் கூடு முழுவதும் வெளியே மலர்களால் அலங்காரம் செய்து, நடனம் ஆடும்! பின் கூடுகளுக்குள் செல்லும், பின் மீண்டும் வெளியில் வந்து நடனம் ஆடும்! சொக்கிப் போவாள் காதலி! உள்ளே வாழ்ந்து தீர்க்கும்!
விதவிதமாக வெஜ் – நான்வெஜ் போன்ற உணவுகளை, கிடைக்கும் அனைத்தையும் எடுத்துச் சென்று காதலிக்கு ஊட்டிவிடும்! காதலி கரு உருவாவாள். அதன் பின் இன்னும் அதிகம் கவனம் செலுத்தும்!

இயக்குனர் Ravi Bhargavan

சத்தான அத்திப்பழங்கள், ஆலம்பழங்கள், கொய்யா, மா, மற்றும் என்னவெல்லாம் அரிதான பழம் கிடைக்கிறதோ நாவல்பழம் உட்பட! ஊட்டி ஊட்டி காதலியை இன்பத்தில் தளைக்க வைக்கும்.
இதில் இன்னொரு ஹைலைட் இருக்கு! ஆடிப்போவீர்கள். தான் வெளியே இரை தேடும் சில சமயங்களில் பாம்புகளாலோ, பருந்துகளாலோ தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ‘காதலியும் குழந்தையும் பட்டினி இருக்கக்கூடாது’ என்று, கர்ப்ப காலத்தில்… தானியங்களை உள்ளே குவித்து விடும்!!

இரை தேடும் போது சமயங்களில் பாம்புகள் காதலனைக் கவ்விப் பிடித்து விடும்! காதலி இரண்டு நாட்கள் தவிக்கும். வெளியே வந்து தேடிவிட்டு கூட்டுக்குள் ஓடும். மீண்டும் வெளியே வந்து படபடவென்று அடித்துக் கொண்டு உள்ளே வந்து விடும்!
இனி காதலன் வரமாட்டான், காதலனுக்கு என்னவோ நிகழ்ந்து விட்டது. இனி இந்த இரைகள் காலியாகி விடும்! தானே சம்பாதிக்க வேண்டும். குஞ்சுகளைப் பெரிதாக்கி வெளியே அனுப்ப வேண்டும், – மிக சின்சியராக வளர்க்கும்! இன்னொரு காதலனைத் தேடாது!

குஞ்சுகள் வளர்ந்து பெரிதானதும், “போ மகனே, சமத்தாய் போ மகளே, யாரோ ஒரு காதலன் உனக்காகக் கூடு கட்டிக் கொண்டிருப்பான். மகனே போ யாரோ ஒரு காதலி நீ வீடு கட்ட காத்திருப்பாள்! போய் வா செல்வங்களே…”
என்று அனுப்பி வைத்து விட்டு அளவாய் இரைதேடி, உண்டு கூட்டுக்குள்ளயே முடங்கி ஒருநாள் அந்தக் கூட்டுக்குள்ளயே இறந்து கிடக்கும்! இப்போது சொல்லுங்கள்…
தூக்கணாங்குருவிகளைப் போல் காதலியுங்கள்!

Privacy & Policy
Disclaimer
Contact us
About us