“எதையும் பொருட்படுத்தாமல் வாழ்கிறேன்” – ரங்கராஜ் குடும்ப புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்து பகிர்ந்தார்.!

சர்ச்சைகளால் இணையத்தில் பரபரப்பை கிளப்பி வரும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், புத்தாண்டு வாழ்த்துடன் தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து தற்போது புதிய புயலை கிளப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக, ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை இணையத்தில் அதிகம் பேசப்பட்டது. இதனால் ரங்கராஜ் குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனங்களை பகிர்ந்துள்ளனர்.

மாதம்பட்டி ரங்கராஜ், தமிழகத்தின் பிரபல சமையல் கலைஞராகவும், “மெஹந்தி சர்க்கஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகராகவும் அறியப்படுகிறார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை. ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதி உடன் திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரண்டாம் திருமணம் மற்றும் ஜாய் கிரிஸில்டா குறித்து எழும் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், ரங்கராஜ் தனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சமீபத்தில், அவர் தனது முதல் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார்.

இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே கலக்கலை ஏற்படுத்தியுள்ளது. பலர் இவரின் குடும்ப உறவுகளை மதிப்பதாகவும், சிலர் இதனை சர்ச்சையாகவும் பார்க்கின்றனர்.

T.P.Rangharaaj Family