PF(Provident Fund) கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த ஒரு வழியில் ரூ.7 லட்சம் வரை பெறலாம் – பலருக்கும் தெரியாத முக்கிய தகவல்.!

உங்களிடம் PF (Provident Fund) கணக்கு இருக்கிறதா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கே தான். பலரும் மாதம் மாதம் PF பிடித்தம் ஆகுது, ஓய்வு காலத்துக்கு பணம் சேரும் என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால் PF கணக்கின் மூலம் ரூ.7 லட்சம் வரை பெற முடியும் என்ற விஷயம் இன்னும் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. இது எந்த மோசடியும் இல்லை; அரசு விதிகளின் கீழ் வழங்கப்படும் ஒரு முக்கிய பாதுகாப்பு வசதி தான்.

Facebook
Instagram
YouTube
Twitter

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வழங்கும் EDLI – Employees’ Deposit Linked Insurance என்ற திட்டம் தான் இதற்கு காரணம். இந்த திட்டத்தின் கீழ், ஒரு தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் திடீரென உயிரிழந்தால், அவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இதற்காக ஊழியர் தனியாக எந்த பிரீமியமும் செலுத்த தேவையில்லை.

EDLI திட்டத்தின் படி, தற்போது அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை, அந்த ஊழியரின் கடைசி சம்பளம் மற்றும் சேவை காலத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. அதாவது, அதிக சம்பளம், நீண்ட சேவை காலம் இருந்தால், அதிகபட்ச தொகையை பெறும் வாய்ப்பு அதிகம்.

முக்கியமாக, இந்த பயன்களை பெற PF(Provident Fund) கணக்கு ஆக்டிவாக இருக்க வேண்டும். ஊழியர் வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில், நிறுவனத்தால் EPF கட்டணம் முறையாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், அந்த ஊழியர் வேலை செய்கிற நிறுவனத்தில் EDLI திட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும். பெரும்பாலான நிறுவனங்களில் இது தானாகவே அமலில் இருக்கும்.

இந்த ரூ.7 லட்சம் தொகையை பெறுவதற்கான நடைமுறையும் மிகவும் சிக்கலானது அல்ல. ஊழியர் உயிரிழந்தால், அவரது மனைவி, கணவர், பிள்ளைகள் அல்லது நியமிக்கப்பட்ட நபர் EPFO அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களாக, மரணச் சான்றிதழ், PF(Provident Fund) விவரங்கள், வங்கி கணக்கு தகவல், அடையாளச் சான்று போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது பல விஷயங்கள் ஆன்லைன் முறையிலும் செய்ய முடிவதால், செயல்முறை இன்னும் எளிதாகியுள்ளது.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், பலர் PF நாமினேஷன் (Nomination) செய்யாமல் விடுகிறார்கள். இது பெரிய தவறு. நாமினேஷன் சரியாக செய்யப்பட்டிருந்தால், குடும்பத்தினருக்கு பணம் கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆகையால், உங்கள் PF கணக்கில் உடனடியாக நாமினேஷன் அப்டேட் செய்திருக்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், PF என்பது ஓய்வு கால சேமிப்பு மட்டுமல்ல. அவசர நேரத்தில் குடும்பத்துக்கு பெரிய பாதுகாப்பாகவும் செயல்படுகிறது. “PF(Provident Fund) இருக்கு, ஆனா இதெல்லாம் தெரியல” என்று பின்னால் வருத்தப்படாமல், இப்போதே இந்த தகவலை உங்கள் குடும்பத்தினருக்கும் பகிருங்கள். ஏனெனில், ஒரு PF கணக்கு உங்கள் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் வரை பாதுகாப்பாக மாறும் என்பதே பலருக்குத் தெரியாத உண்மை.

Privacy & Policy
Disclaimer
Contact us
About us