படையப்பா பட சீக்ரெட்.. நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்த 4 கதாநாயகிகள் யார் தெரியுமா?
இந்திய திரை உலகத்தின் வசூல் மன்னன் அனைவரும் வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டார் இந்த வயதிலும் சுறுசுறுப்பில் தேனியாகவும் நிதானத்தில் ஞானி ஆகவும் இருக்கும் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி.. அன்று உலகம் முழுக்க இருக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டாட ஆரம்பித்தார்கள்..ரசிகர்களை இன்னும் அதிகமாக குஷிப்படுத்தும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.. மீண்டும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது..25 வருடங்களுக்கு முன் அந்த படத்தில் தான் நடித்த அனுபவத்தையும் அப்போது நடந்த சுவாரசியமான சம்பவத்தையும் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பேட்டியில் பகிர்ந்துள்ளார்..அதிலும் குறிப்பாக ரஜினிக்கு இணையாக இந்த படத்தில் பேசப்பட்ட ஒரு கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி ஆனால் அதற்கு முன்னால் அந்த கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்க இருந்தார்கள் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்…
படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆகி, தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த தருணத்தில் நீலாம்பரியாக நடிக்க எந்தெந்த நடிகைகள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தது வைரலாகி வருகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற ரஜினிகாந்த் படங்களுள் ஒன்று, படையப்பா. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். இவருக்கு இணையான வில்லி கதாப்பாத்திரம் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த கேரக்டரின் பெயர், நீலாம்பரி. இந்த ரோலில், ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார். இதில் நடிக்க, அவருக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட நடிகைகள் யார் தெரியுமா? இதோ விவரம்!
25 வருடங்களுக்கு பிறகு, படையப்பா திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்திருக்கிறது. ரஜினியின் கதையை, திரைக்கதை எழுதி, கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். இதில், ஹீரோவாக நடித்த ரஜினிகாந்திற்கு எந்த அளவிற்கு பவர்ஃபுல்லான கேரக்டர் இருந்ததோ, அதே போல வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கும் சக்திவாய்ந்த கதாப்பாத்திரம் இருந்தது.
நீலாம்பரி என்கிற அந்த கதாப்பாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அந்த சமயத்தில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு, படையப்பா பட வாய்ப்பும் எதேச்சியாகத்தான் கிடைத்தது. பின்னர் இதுவே அவரது அடையாளமாக மாறியது.
நீலாம்பரியாக நடிக்க வைக்க, பல நடிகைகளின் பெயரை படக்குழு சொன்னதாகவும் அதில் எல்லாம் தனக்கு விருப்பமே இல்லாததால் அந்த வாய்ப்பு அவர்களுக்கு செல்லவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
ரம்யா கிருஷ்ணன், ஏதோ ஒரு படப்பிடிப்பிற்காக செட்டில் இருக்கும் போது கே.எஸ்.ரவிகுமாரை சந்திக்க நேர்ந்திருக்கிறது. அவர் உடனே ரம்யா கிருஷ்ணனை ஓகே செய்து, அவரை சில கிலோக்கள் வெயிட் போட சொல்லி, ஆடிஷன் வைத்து அவரை நீலாம்பரியாக நடிக்க வைத்துள்ளனர். ரசிகர்கள் இப்போது வரை யோசிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால், இந்த கதாப்பாத்திரத்தை ரம்யா கிருஷ்ணனை விட்டால் வேறு யாராலும் சரிவர செய்திருக்க முடியாது என்பதுதான்.
படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க, மீனா ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அவருக்கு வசுந்தரா கதாப்பாத்திரத்தை கொடுக்க படக்குழு முன்வந்ததாகவும், அது தனக்கு வேண்டாம் என்று சொல்லி, நடித்தால் நீலாம்பரியாகத்தான் நடிப்பேன் என்று கூறி படத்தில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
நக்மாவையும் படையப்பா படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார்களாம். ஆனால், நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நக்மாவை பார்க்க முடியாததால் ரஜினி வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீக்ஷித்தும் நீலாம்பரிக்கான தேர்வாக இருந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் இருவரையும் நீலாம்பரி கதாப்பாத்திரத்திடம் இருக்கும் அந்த பவர் இல்லாததால், அவர்கள் வேண்டாம் என்று ரஜினி கூறிவிட்டாராம்.
