பணம், வளர்ச்சி, வெற்றி… 2026-ல் எல்லாமே குவிய பிறந்த தேதிப்படி செய்ய வேண்டியது என்ன?

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2026 புத்தாண்டு மகிழ்ச்சியுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் பிறந்துவிட்டது. ஒவ்வொரு புத்தாண்டும் நம் வாழ்க்கையில் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது. அதனால் தான் புத்தாண்டின் முதல் நாளில் கோவிலுக்கு செல்வது, தானம் செய்வது, நல்ல விஷயங்களை தொடங்குவது போன்ற பழக்கங்கள் பலரிடமும் காணப்படுகின்றன.

இதுமட்டுமல்லாமல், வரும் ஆண்டு முழுவதும் பணம், வெற்றி, வளர்ச்சி மற்றும் மன அமைதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, புத்தாண்டின் முதல் நாளில் சிலர் சிறப்பு பரிகாரங்களையும் செய்வார்கள். அந்த வகையில், எண் கணிதத்தின் அடிப்படையில், ஒருவரது பிறந்த தேதியை வைத்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான செயல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஷயத்தை பிரபல ஜோதிடரான ஆஞ்சல் குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பிறந்த தேதியின் அடிப்படையில் புத்தாண்டின் முதல் நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிய செயல், 2026 முழுவதும் வெற்றியும் செழிப்பும் கிடைக்க உதவும் என தெரிவித்துள்ளார்.

🔢 எண் 1

(1, 10, 19, 28) ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 1.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில், தாயிடமிருந்து ஒரு வெள்ளை செயினை வாங்கி அணிய வேண்டும். இதன் மூலம், தெய்வீக அதிகாரம் செயல்படுத்தப்பட்டு, தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

🔢 எண் 2

(2, 11, 20, 29) ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 2.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில், படுக்கைக்கு அருகில் ஒரு பெளலில் நீரை வைத்து உறங்க வேண்டும். இதன் மூலம், 2025-ல் சந்தித்த உணர்ச்சிரீதியான எச்சங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும் என்றும், புதிய ஆண்டு நல்ல தொடக்கத்துடன் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔢 எண் 3

(3, 12, 21, 30) ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3.
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டின் முதல் நாளில் மதியத்திற்கு மஞ்சள் நிற உணவுப் பொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால், குருபகவானின் முழு ஆசீர்வாதம் கிடைத்து, அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும் என்றும், கல்வி, தொழில் மற்றும் பண விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த எளிய செயல்கள் நம்பிக்கையுடன் செய்யப்படும்போது, 2026 ஆண்டு முழுவதும் நேர்மறை சக்தி அதிகரித்து, வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.