இன்றைய வாழ்க்கை தெளிவு”✍️ Life Coach Dr.Tamizhmaranஎல்லாமே சரியாக நடக்குது… ஆனா மனசு மட்டும் ஏன் நிம்மதி இல்ல?

இன்று பலரின் வாழ்க்கையை வெளியில் பார்த்தால் எல்லாமே சரியாக இருப்பது போலத் தெரியும்.
வேலை இருக்கிறது.
குடும்பம் இருக்கிறது.
சாப்பாடு, உடை, வசதி – எதற்கும் குறைவு இல்லை.
ஆனால் மனசுக்குள் மட்டும் ஒரு கேள்வி சத்தமாக திரும்ப திரும்ப நமக்குள்ளே கேட்டு கொண்டே இருக்கு….

“இதுதானா வாழ்க்கை?”
இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு நாம் பிஸியாகி விட்டோம். காலை எழுந்ததும் வேலை, மாலை திரும்பி வீட்டில் பொறுப்புகள், இரவு தூங்கும் முன் அடுத்த நாளுக்கான கவலை. இப்படியே நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

நம்ம வாழ்க்கை ஓடவில்லை…
நாம்தான் வாழ்க்கையை இழுத்துக்கொண்டு போகிறோம்.
உண்மை என்ன தெரியுமா?
நிம்மதி இல்லாததற்குக் காரணம் பிரச்சனைகள் இல்லை.
நம்ம வாழ்க்கையை நாம வாழாமல், “நடிப்பதுதான்” உண்மையான காரணம்.
பிறர் எதிர்பார்ப்புக்காக ஒரு வாழ்க்கை.
சமூகம் என்ன சொல்வதற்காக ஒரு முடிவு.
“அவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்ற பயத்தில் ஒரு பாதை.
இதற்குள் எங்கோ நம்ம ஆசை, நம்ம விருப்பம், நம்ம கனவு – எல்லாம் அடக்கம் செய்யப்பட்டு விடுகிறது.
சிலர் சொல்வார்கள்:
“எல்லாரும் இப்படித்தான் வாழ்கிறார்கள்.”
ஆனால் எல்லாரும் வாழ்கிறார்கள் என்பதற்காக,
அது சரியான வாழ்க்கை ஆகிவிடுமா?
ஒரு இடத்தில் நின்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் கடைசியாக எப்போது மனமார சிரித்தீர்கள்?
பணம் இல்லாமல் அல்ல…
பயம் இல்லாமல்.
நீங்கள் கடைசியாக எப்போது,
“இது நான் விரும்பியது” என்று நம்பிக்கையுடன் சொன்னீர்கள்?
இங்கேதான் “வாழ்வியல் தெளிவு”

நான் சொல்வதை நீங்கள் இப்போது உங்களுக்குள்ளே கேட்டு பாருங்கள்??

“நான் யாருக்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன்?”
இந்த கேள்வி உங்களை கொஞ்சம் அசௌகரியப்படுத்தும்.
ஆனால் அந்த அசௌகரியம் தான் மாற்றத்தின் ஆரம்பம்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
உங்கள் மனம் உங்களுக்கு தினமும் சிக்னல் அனுப்புகிறது.
சோர்வு, கோபம், எரிச்சல், வெறுமை
இவை எல்லாம் உடம்பின் பிரச்சனை இல்லை. வாழ்க்கையின் திசை தவறியதின் அறிகுறி.
அதை மருந்தால் சரி செய்ய முடியாது. தெளிவால் மட்டுமே சரி செய்ய முடியும்.
வாழ்க்கையை முழுசாக மாற்ற வேண்டிய அவசியமில்லை.
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உங்களுக்கே முக்கியம் என்பதை. நீங்கள் சுயநலவாதி ஆக வேண்டாம்.
ஆனால் சுயமரியாதையோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
இன்று செய்ய ஒரு சின்ன பயிற்சி நான் சொல்வதைப் போல நீங்கள் செய்து பாருங்கள்…
இன்று இரவு தூங்கும் முன்,
இந்த ஒரு கேள்வியை எழுதிப் பாருங்கள்:
“நான் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறேனா?”
“ஆம்” என்றால் – ஏன்?
“இல்லை” என்றால் – எதனால்?
பதில் உடனே வர வேண்டாம்.
ஆனால் அந்த கேள்வியை தவிர்க்காதீர்கள்.
ஏனென்றால்,
கேள்வி கேட்ட இடத்தில்தான் வாழ்க்கை மாற ஆரம்பிக்கும்….

     - வாழ்வியல் பயணம் தொடரும்...

“வாழ்க்கை தெளிவு – 7 நாள் மாற்றப் பயணம்”
Original Fees: ₹999
Early Bird Fees: ₹699
⏰ Valid for first 20 members only.
மாற்றத்தை தள்ளிப் போடாதீங்க.
Interested என்றால் கீழே இருக்கும் Whatsapp நம்பருக்கு
“EARLY” என்று மெசேஜ் அனுப்புங்கள்.

  • “Lifestyle Trainer” Dr.A.Tamizhmaran

Class Register

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!