Life Coach: தமிழ்மாறன்You are not weak… You forgot to trust yourself…

பலர் தங்களைப் பற்றி உள்ளுக்குள்ளே சொல்லிக்கொள்ளும் ஒரு வரி இருக்கிறது:
“என்னால முடியாது.”
இந்த ஒரு வரி தான்
எத்தனை வாய்ப்புகளை இழக்க வைத்திருக்கிறது,
எத்தனை முயற்சிகளை தொடங்கவிடாமல் நிறுத்தியிருக்கிறது என்பதை
நாம் பெரும்பாலும் உணர்வதே இல்லை.
உண்மையிலேயே நீங்கள் பலவீனமா? இல்லை. நீங்கள் உங்களை நம்ப மறந்திருக்கிறீர்கள்.

தன்னம்பிக்கை என்பது
வெளியில் இருந்து கிடைக்கும் ஒரு gift இல்லை.அது ஒருநாள் திடீரென்று வந்து விழும் விஷயமும் இல்லை. அது ஒரு நினைவு.
“நான் இதை செய்ய முடியும்”
என்று நம்மையே நம்மிடம் நினைவுபடுத்தும் தருணம்.
சின்ன வயசில் நாம் அனைவரும் தைரியமாக இருந்தோம்.
பயமில்லாமல் பேசினோம்.
விழுந்தாலும் எழுந்தோம்.
தோல்வியை நிரந்தரம் என்று நினைக்கவில்லை.
பின்னர் என்ன மாறியது?
மக்களின் வார்த்தைகள்.
ஒப்பீடுகள், எதிர்பார்ப்புகள்!
“அவர்கள் என்ன சொல்வார்கள்?” என்ற பயம்…

ஒரு கட்டத்திற்கு பிறகு மெல்ல மெல்ல, நமக்குள்ளே இருந்த குரல் அமைதியாகி,
மற்றவர்களின் குரல்
நம்ம முடிவுகளை எடுக்க ஆரம்பித்தது.
அதற்குப் பிறகு
நாம் நம்மையே சந்தேகிக்க ஆரம்பிக்கிறோம்.
“என்னால முடியுமா?”
“நான் இதுக்கு சரியானவனா?”
இந்த கேள்விகள்
நம்மை பாதுகாக்கவில்லை.
நம்மை சிறியதாக மாற்றுகிறது.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்:
தன்னம்பிக்கை இல்லாதவர்கள்
திறமை இல்லாதவர்கள் அல்ல.
They are people who stopped trusting themselves.
வாழ்க்கையில் ஒரு விஷயம் மட்டும் உண்மை என்று உணருங்கள்.
நீங்கள் உங்களை நம்பாத வரை,
யாரும் உங்களை முழுமையாக நம்ப மாட்டார்கள். அதேபோல,
நீங்கள் உங்களை நம்ப ஆரம்பித்த நாளில் இருந்து உலகத்தின் எதிர்ப்புகள் மெதுவாக சத்தம் குறைக்க ஆரம்பிக்கும்.
தன்னம்பிக்கை என்றால்
எப்போதும் ஜெயிப்பது இல்லை.
Fail ஆனாலும்
“நான் இன்னும் மதிப்புள்ளவன்”
என்று நம்புவது தான்.
ஒரு நாள் தோல்வி
உங்களை தோல்வியாளனாக மாற்றாது. அந்த தோல்வியை வைத்து நீங்கள் உங்களை கைவிட்டால், அதுதான் உண்மையான பிரச்சனை.
இன்று உங்கள் வாழ்க்கையை
ஒரு நிமிடம் நிறுத்திப் பாருங்கள்.
நீங்கள் பயந்ததால்
எத்தனை விஷயங்களை செய்யாமல் விட்டிருக்கிறீர்கள்?
நீங்கள் உங்களை சந்தேகித்ததால்
எத்தனை வாய்ப்புகளை தவிர்த்திருக்கிறீர்கள்?
இந்த கேள்விகள்
கடினமாக இருக்கலாம்.
ஆனால் அவை தான்
மாற்றத்தின் ஆரம்ப புள்ளி.
நினைவில் வையுங்கள்:
Confidence is not built overnight.
But self-doubt is destroyed the moment
you decide to trust yourself once again.
அந்த முடிவை
இன்று எடுங்கள்.

வாழ்க்கை ஒரு கேள்வியிலிருந்து தான் மாற ஆரம்பிக்கும்.
அந்த கேள்வியை இன்று நீங்கள் கேட்டிருந்தால், நீங்கள் ஏற்கனவே மாற்றத்தின் பாதையில் இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை குறித்து பேச, தெளிவு பெற,
அல்லது ஒரு வழிகாட்டல் தேவை என்றால்—
You can reach me on WhatsApp.
📩 WhatsApp:+91 9884295482
— Life Coach தமிழ்மாறன்

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!