2026: (Elephant) யானைகளைப் போல் வழி நடத்துங்கள்! – இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன் சொல்லும் சீக்ரெட்.!

(Elephant) யானைகள் தம் கூட்டத்தை வழிநடத்தும் என்பது அனைவரும் அறிந்ததே!
அதிலும் பெண் யானையைக் கவனித்துப் பாருங்கள்! தண்ணீர் எங்கு இருக்கும்? எப்படி அழைத்துச் செல்லலாம்! சிங்கங்களும், வேங்கைகளிடமும் உள்ள பேராபத்துகள், வழியில் உள்ள இடர்பாடுகள் என்ன? எத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்… அதைச் சமாளிப்பது எப்படி? எந்தெந்த நீர் நிலைகளில் முதலைகள் பதுங்கி இருக்கும்! வெறி கொண்டு தாக்கினால் என்ன செய்யலாம்? வழியில் எங்கு புதை குழிகள் இருக்கும்? போகும் வழியில் எங்கு இளைப்பாறலாம்!

Facebook
Instagram
YouTube
Twitter

இளைப்பாறும் இடங்களில் எங்கு கொடூர மிருகங்கள் இருக்கும்? அந்தக் கொடூர மிருகங்களில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது! கொடூர மிருகங்கள் எப்போது இரைதேடி முடித்திருக்கும்! எங்கே மனிதர்கள் தங்கள் இனத்தை வேட்டையாடுவதற்காக குழி தோண்டியிருப்பார்கள்!
கிட்டத்தட்ட நூற்றுக்கணக்காக மனதில் விவாதித்துக் கொண்டு, நூற்றுக்கணக்காக சாதக, பாதகங்களை அலசி, தான் முன்னே நடக்க பின்னால் தனது கூட்டத்தை வழிநடத்தும்!
சரி, ஒருமாதக் குழந்தையை எங்கு நிறுத்துவது..? நான்கு ஐந்து மாதக் குழந்தையை எந்த வரிசையில் நிறுத்துவது…

கடைசியில் யார் வருவது? அவை தாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறதா? அதன் உடல் நிலை எப்படி இருக்கிறது? அப்படி வரிசைப்படுத்தி நிற்கவைக்கும்!
அதன் பின் நின்று… ஒரு அரைமணி நேரம் அசை போடும்! நடக்க ஆரம்பித்து விடும். மணிக்கணக்காக நடப்பார்கள். காதுகளை ஆட்டி ஆட்டி சுற்றுப்புற சத்தத்தை உற்றுக் கேட்கும்.
அதன் காதுகளை தளபதிகளாக வரும் (Elephant)யானைகள் பார்த்து வழிநடத்தும்! குட்டிகள் கற்றுக் கொண்டே நடக்கும்! தனக்குப்பின் வழி நடத்தப் போகும் பெண் யானையை இரண்டாவதாக நடக்க வைக்கும்.

அப்படி ஒரு அமைப்பை… உலகில் எந்த இராணுவத்திடமும் பார்க்க முடியாது! துல்லியமாகத் திட்டமிடுதல் துல்லியமான அணிவகுப்பு! ஒரு கூட்டத்தை, தன்னையே நம்பியிருக்கும் கூட்டத்தை… எப்படி அழைத்துச் செல்வது!

டிஸ்கவரி சேனல்களில் பார்ப்பதைக் காட்டிலும் நேரில் சென்று பார்த்தீர்களானால் நிறைய விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்! அந்தக் காட்டில் எனக்குத் தெரிந்தது, மூத்த பெண் யானைகள் நிதானமாக யோசித்து வழிநடத்தும்! எந்தெந்த (Elephant)யானைகள் எங்கெங்கு நிற்க வேண்டும் என்று மிகச் சரியாக நிறுத்தும்! ஆப்பிரிக்க காடுகளில் உள்ள யானைகளும், இதே கூட்டமாக இதே வரிசை! அதே அணிவகுப்பு! சதுப்பு நிலக்காடுகளுக்குச் சென்றாலும், முட்டியளவு தண்ணீர் உள்ள சதுப்பு நிலக்காடுகளிலும் இதே அணிவகுப்பு! அழைத்துச் செல்லும் முறையிலும் வித்தியாசப்படுவதில்லை!
நீங்கள் ஒரு சிறு கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும் ஒரு பெரும் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்தாலும், (Elephant)யானைகளாக இருங்கள்!

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்குப் போவதாக இருந்தாலும், சென்னையில் இருந்து கோவைக்குப் போவதாக இருந்தாலும், டெல்லிக்குப் போவதாக இருந்தாலும்! திட்டமிடுங்கள், அத்தனை சாத்தியக் கூறுகளையும் ஆராயுங்கள். வழியில் என்ன ஆபத்துகள் வரும் என்று யோசியுங்கள்! அந்த ஆபத்துகளை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசியுங்கள்.

திரு.கருணாநிதி அவர்கள் தனது கூட்டத்தைத் துல்லியமாகத் திட்டமிட்டு அழைத்துச் சென்றதால்தான் எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் மக்கள் நாயகன் பதினோரு வருடம் ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும், கட்சியைக் கட்டுகோப்பாக வைத்திருந்தார்.
துல்லியமான திட்டமிடுதல் தன்னைப்பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தன் அருகே எப்போதும் கூட்டமாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு போராட்டங்களை முன் நின்று நடத்தவேண்டும். வழி நடத்தும் போதெல்லாம் பெரும் திரளான கூட்டம் தன்னைப் பின் தொடர வேண்டும். கூட நடக்கும் தலைவர்களோ, தொண்டர்களோ பாதுகாப்பாக வரவேண்டும். ‘ஆபத்து’ என்றால் எப்படிச் சமாளிக்க வேண்டும்.

எந்தக் காலகட்டத்தில் மழை பெய்யும். வழியில் எவனிடம் எல்லாம் உணவு பெறலாம்..! எங்கு தங்கலாம் [முகாமிடுதல்] துல்லியமாகத் திட்டமிட்டு நீதி கேட்டு நெடும்பயணம்!
சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நடைப்பயணம்! அங்கு ஒரு தங்கவேல் காணாமல் போய்விட்டது. நகைகளைப் பாதுகாருங்கள் என ஆர்ப்பாட்டத்தோடு கருணாநிதியின் நடைப் பயணம்!

எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்தது. அந்த நேரம் எம்.ஜி.ஆர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்! பத்து நாட்கள்… மக்கள் எம்.ஜி.ஆரை மறந்தார்கள்! போகும் இடம் எல்லாம் கூட்டம்! எங்கும் கருணாநிதியைப் பற்றியே பேச்சு.
எம்.ஜி.ஆர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை! அவருக்குத் தெரியும், ‘கருணாநிதிக்கு கூட்டம் வரும் ஓட்டு விழாது’ என்று! அப்படித்தான் அடுத்த தேர்தலிலும் நடந்தது!
ஆனால், ‘வழிகாட்டுதல், வழிநடத்துதல்’– கலைஞரை மிஞ்ச இப்போதுவரை ஆளில்லை!

(Elephant) யானைகளின் திட்டமிடுதல், யானைகளின் நுண்ணறிவு, யானைகளின் முன் எச்சரிக்கை, இலக்கு தண்ணீரை அடைவது! தண்ணீரைக் குடிப்பதற்காக இவ்வளவு திட்டமிடுதல்!
இலக்கை ஏன் தண்ணீர் என லேசாக நினைத்து விட வேண்டும்!? உங்களை நம்பி வரும் நண்பர்களாகட்டும், தொழிலாகட்டும் உங்கள் குடும்பமாகட்டும்!
அவைகளை யானைகளைப் போல் வழி நடத்துங்கள்!

Privacy & Policy
Disclaimer
Contact us
About us