ஜனநாயகன் ஆடியோ லான்ச் INDIAவில் நடக்க போவதில்லை, அதற்கு பதிலாக ரெக்கார்டிங் செய்யப்பட்டு எந்த சேனலில், எந்த தேதியில் ஒளிபரப்ப போறாங்க தெரியுமா??
சினிமா அரசியல் இந்த இரண்டிலும் தளபதி விஜயின் அலை மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. முழு நேர அரசியலில் இறங்கி இருக்கக்கூடிய நிலையில் தற்போது
வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் உள்ள ஓப்பன் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இருப்பினும், தவெக தொடர்பான எந்தவொரு அரசியல் அடையாளங்களுக்கும் அனுமதி இல்லை என மலேசிய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை லைவாக பார்க்கலாம் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜனநாயகன் ஆடியோ லான்ச் லைவ் ஒளிபரப்பு கிடையாது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியாவிற்கு நேரில் செல்லும் ரசிகர்கள் மொபைல் போன் மூலம் பதிவு செய்யும் வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்றுள்ள ஜீ நிறுவனம், ஆடியோ லான்ச் ஒளிபரப்பு உரிமத்தையும் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, இந்த விழா லைவாக அல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜனவரி 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜீ தமிழில் ஜன நாயகன் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
இதனால், விஜய் ரசிகர்கள் லைவ் அனுபவத்தை இழந்தாலும், சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக குட்டிக் கதையுடன் ஆடியோ லான்சை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…
