நடிகை கனகாவா இது?? அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரகாட்டகாரன் பட கதாநாயகி. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பழம்பெரும் நடிகை தேவிகா அந்த காலகட்ட ரசிகர் ரசிகைகளின் கனவு கன்னியாகவும் அதே நேரத்தில் கண்ணழகி தேவிகா என்றும் பெயர் பெற்றவர்.. அவருக்கே உரித்தான பாணியில் இத்தனை அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். பொதுவாகவே சினிமாவில் வெற்றிகரமான நடிகைகளாக இருந்தால் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் உட்பட்ட வாழ்க்கையாகவே இருக்கும் அதற்கு இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நடிகையர் திலகம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சாவித்திரியின் வாழ்க்கை.. ஒரு காலகட்டத்தில் நடிகை சாவித்திரி எப்படி புகழின் உச்சத்தில் இருந்தார் அதன்பின் குடிக்கு அடிமையாகி அந்த மிகப்பெரும் சாம்ராஜ்யத்தில் இருந்து அவர் எப்படி சரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் அனாதை போல் இறந்து கிடந்தார் என்பதுதான் நிதர்சனமான உண்மை

பெரும்பாலான நடிகைகளின் வாழ்க்கை கானல் நீர் போல, மார்க்கெட் இருக்கின்ற வரை அவர்களுடைய வாழ்க்கை ஒரு விதமாகவும் அதே நேரத்தில் மார்க்கெட் போனபின் அவர்கள் வாழ்க்கை மிகவும் கவலைக்கிடமாகவும் மாறி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை தான் இப்போது இந்த நடிகையும் வாழ்ந்து வருகின்றார்..

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் என்னும் திரைப்படத்தை இப்போது வரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த படம் படைத்த சாதனையை இப்போது வரைக்கும் வேறு எந்த படமும் முறியடிக்க வில்லை என்றே சொல்லலாம். மதுரையில் இருக்கின்ற தங்கம் தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட வருடங்களை தாண்டி ஓடிய திரைப்படம் என்றே கரகாட்டக்காரன் படத்தை சொல்லலாம். அந்தப் படத்தில் கவுண்டமணி செந்தில் காம்போவில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி உலகம் முழுவதும் பிரபலமானது என்றே சொல்லலாம். நடிகர் ராமராஜனின் வளர்ச்சியை பார்த்து ரஜினி கமல் என பெரிய பெரிய உச்ச நட்சத்திரமே பொறாமை கொண்ட காலம் அது. இளையராஜா இசையில் கங்கை அமரனின் இயக்கத்தில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம்.. அந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை கனகா.சார் நம்ம தேவிகாவை போலவே ரசிகர்கள் மத்தியில் கண்ணழகி என்று பெயரெடுத்தவர்.
90s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்த கனகா தற்போது எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு ரசிகையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது..அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் கனகா மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாரா?? என்று பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்..

தமிழ் சினிமாவில் பலருடைய மனதைக் கவர்ந்த நடிகை கனகா ஏன் எந்த திரைப்படத்திலும் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் ஏற்று நடிக்கவில்லை என்றும் அவர்கள் தொலைக்காட்சி தொடரில் நடித்தால் கூட நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. கரகாட்டக்காரன் படத்தின் மூலம் நடிகை கனகாவிற்கு கிடைத்த புகழின் மூலம் தொடர்ந்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிய தொடங்கின..ஆரம்ப காலகட்டத்தில் கனகாவிற்கு நடிப்பில் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் இல்லை, படிக்கின்ற காலகட்டத்தில் படிப்பு தான் முக்கியம் என இருந்த கனகாவிற்கு அவருடைய அம்மா தேவிகா ஒரு மிகப்பெரிய நடிகை என்பதால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இவரும் நடிப்புத் துறையை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக உள்ளே வந்தார்.. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். ஆனால் விதியின் விளையாட்டு கனகா புகழின் உச்சகட்டத்தில் இருந்தபோது அவருடைய அம்மா நடிகை தேவிகா காலம் ஆகிவிட்டார். அந்த நேரத்தில் கனகாவின் அப்பாவுக்கும் கனகாவுக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தார்கள்..

தன் அம்மாதான் தன்னுடைய முழு உலகம் என்று நினைத்து கொண்டிருந்த கனகாவிற்கு திடீரென அம்மா இறந்து போனதால் நிலைகுலைந்து போனார் அதன்பின் கனகாவின் வாழ்க்கையை சூனியமயமானது என்று சொல்லலாம்.. வெகு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் நடிகை கனகா வீட்டுக்குள்ளே இருந்ததால் அவருடைய அப்பாவே தன் மகள் பைத்தியம் என்று சொல்ல ஆரம்பித்தார் அதன்பின் கனகா ஒரு முறை வெளியே வந்து பத்திரிகையாளரிடம் தன் அப்பா தன் மீது சொத்துக்காக அவதூறு பரப்புகிறார் என்று சொன்னார்..

சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் சொல்லும்போது நான் கனகாவிடம் பேசினேன் என் வாழ்க்கையில் இப்போது நான் தனியாக இருக்கிறது தான் மிகப்பெரிய நிம்மதி இப்படியே இருந்து விட எனக்கு பிடித்திருக்கிறது என்றும் நீ என் வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை என்றும் சொல்லி இருக்கின்றார்.கனகா அப்போது பட்டன் வைத்த செல்போன் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தாராம் அதன்பின் குட்டி பத்மினி அவரை ஷாபிங்க்கு அழைத்து சென்று புதிதாக டச் செல்ஃபோன் வாங்கி கொடுத்து அதில் whatsapp இன்ஸ்டால் செய்து கொடுத்துவிட்டு வெகு நேரம் மனம் விட்டு பேசிவிட்டு வந்தேன் என்று சொல்லி இருந்தார்..அதற்குப்பின் கனகாவை பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை ஆனால் சமீபத்தில் ரசிகையுடன் எடுத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் இது அந்த கண்ணழகி கனகாவா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார்களே?? என்று தங்களுடைய கருத்துக்களையும் அதே நேரத்தில் மீண்டும் நீங்கள் சினிமாவில் ரி என்ட்ரி கொடுக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்…