சமந்தாவின் 2வது புருஷனின் முதல் மனைவி இந்த சினிமா பிரபலமா??

பானா காத்தாடி என்னும் தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை சமந்தா அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.. நாகார்ஜுனாவின் பையன் நாகச்சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை சமந்தா – இயக்குனர் ராஜ் நிடிமோரு சமீபத்தில் திருமணம் செய்துகொண்டது இணையத்தில் பெரும் பரபரப்பை அதிகரித்துள்ள நிலையில், இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இந்த திருமணம் குறித்து ராஜ் நிடிமோருவின் முதல் மனைவி ஷியாமலி தே வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் யார் என்று பலரும் தேட தொடங்கியுள்ளனர். அதில் குறிப்பாக சிலர் சமந்தாவை திட்டவும் சிலர் வாழ்த்தவும் செய்துள்ளனர்.

தனிமையில் இருந்த நடிகை சமந்தா கடந்த மாதம் (நவம்பர்) தனது பர்ப்யூம் பிராண்டின் அறிமுக விழாவில, ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார், இந்த போட்டோ அவர்களின் காதல் வதந்திகளை மேலும் தூண்டியது, அந்த வதந்தி உண்மையாகும் விதத்தில் இந்த ஜோடி டிசம்பர் 1, 2025 அன்று திருமணம் செய்துகொண்டதாகக் கூறுகின்றன. இருப்பினும், சமந்தாவுடனான உறவுக்கு முன்பு ராஜ் நிடிமோருவுக்குத் திருமணம் நடந்தது பலரும் அறியாத ஒரு தகவல். இந்த விஷயம் இப்போது தெரிந்ததும் சமந்தாவின் ரசிகர்கள் அனைவரும் பேர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

ராஜ் மற்றும் சமந்தாவின் வரவிருக்கும் திருமணத்தைப் பற்றிய ஊகங்களுக்கு மத்தியில், ராஜின் முன்னாள் மனைவி யார் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.