என் பொண்டாட்டி சாண்ட்ராவை நான் அப்போவே Divorce பண்ணிருப்பேன்.. அப்படி என்ன காரணம் தெரியுமா??

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் தற்போது சீசன் 9 ஆக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 80 நாட்களை கடந்த நிலையில், இந்த சீசன் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய போட்டியாளர் பிரஜன், அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துப் பேசிய பிரஜன்,
“சாண்ட்ராவுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், விவாகரத்து(Divorce) வரை சென்ற நிலையில் இருந்தது” என தெரிவித்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது பல்வேறு உணர்ச்சிமிகுந்த தருணங்களை வெளிப்படுத்திய பிரஜன், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தனது வாழ்க்கையில் நடந்த சவால்கள் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக அவரது பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

பிரஜனின் இந்த வெளிப்படையான கருத்து, பிக்பாஸ் ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது நேர்மையை பாராட்டி வர, சிலர் இது தனிப்பட்ட விஷயம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், போட்டியாளர்களின் வெளியே வரும் பேட்டிகள் தொடர்ச்சியாக ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது.. அதே நேரத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர் சாண்ட்ரா ஓவர் ஆக்டிங் என்றும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…