பல நடிகைகளை நான் படுக்க அனுப்பி வைத்துள்ளேன்.. அப்படி அனுப்பி வைத்த நடிகையின் ஒரு படம் சமீபத்தில் வெளியானது.. சினிமாவில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.!

பொதுவாகவே சினிமாவில் வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் உள்ளே ஆராய்ந்து பார்த்தால் அதில் பலவிதமான சிக்கல்களும் அதனால் ஏற்படக்கூடிய மன உளைச்சல்களும் அதிகமாக இருக்கின்றன என்றே சொல்லலாம்.. குறிப்பாக சினிமாவில் நடிகைகளின் நிலைமை தான் மிகவும் கவலைக்கிடம் மார்க்கெட்டு இருக்கின்ற வரை அவர்கள் நடித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்கு செல்வதற்கு ஒவ்வொரு நடிகைகளும் போராடி வருகிறார்கள்.. மார்க்கெட் இல்லை என்றால் நடிகைகளுக்கு நடிப்பதற்கு கூட சரியான வாய்ப்புகள் எதுவும் அமைவதில்லை.. நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் வாய்ப்பு கிடைப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது PRO தான்.. PRO மனது வைத்தால் அந்த நடிகர் நடிகைகளுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.


தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் ஒரு செய்தி வைரல் ஆகி வருகின்றது. சினிமா துறையில் PRO வாக இருக்கும் வித்தகன் சேகர் அவர்கள் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் நடிகைகளின் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் சொல்லுகின்ற போது நடிகைகளுக்கு பட வாய்ப்பு வாங்கி தரக்கூடிய இடத்தில் இருக்கின்றேன். இங்கிருக்கும் நடிகைகள் அனைவரும் பெரும்பாலான அட்ஜஸ்மென்ட் செய்யக்கூடியவங்கதான் அதே நேரத்தில் எந்த விதமான அட்ஜஸ்ட்மென்ட்டும் கேட்காத கண்ணியமான ஆண்களும் இருக்கிறார்கள். என்னிடம் ஒரு நடிகை பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யவும் ரெடி என்று சொன்னார் நானும் ஒரு இயக்குனரிடம் அவரை அனுப்பி வைத்தேன். வெளியில் இருந்து பார்க்கக்கூடிய மற்ற அனைவருக்கும் இது மாமா வேலை போன்று தெரியும் ஆனால் இதுவும் PRO வேலைதான். நான் இதுவரை எந்த நடிகையிடமும் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டதில்லை என உத்தமன் வேஷம் போட விரும்பவில்லை.


என்னிடம் வந்து அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொன்ன நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் இயக்குனர்களுக்கு நான் சப்ளை செய்திருக்கிறேன் அப்படி நடித்த ஒரு நடிகையின் படம் கூட கடந்த ஆண்டு வெளியானது.. ஆனால் இப்போது நான் எந்த நடிகையையும் அப்படி அனுப்புவதில்லை அதற்கு காரணம் இப்படி நடிகைகள் அனைவரும் திறமை இல்லாமல் அட்ஜெஸ்மெண்ட் செய்து வாய்ப்பை பெறுவதால் பல்வேறு திறமையான நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதேபோல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்கப் போன ஒரு நடிகை சரியாக நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு பேசினார் இதனால் மனசாட்சி எனக்கு உறுத்தியது உடனடியாக அதனால் அந்த வேலையை நான் நிறுத்தி விட்டேன்.
சமீபத்தில் என்னிடம் வந்து வாய்ப்பு கேட்கும் பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சார் என்று சொல்வார்கள் ஆனால் அவர்களிடம் இப்போது நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு பதில் நீங்கள் அப்படி செய்தால் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் ஆனால் சினிமாவில் நீடித்து நிலைக்க முடியாது திறமை இருந்தால் தான் நிச்சயம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என்று நான் அறிவுரை சொல்லி அனுப்பி விடுகிறேன் என்று வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது