குளிர் காலத்தில் (இதய நோய்)மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள் – மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கை.!

இந்தியாவில் அதிக மரணங்களை விளைவிக்கும் முக்கிய காரணிகளில் இதய நோய்கள் ஒன்றாக உள்ளன. குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஆய்வின் படி, இந்தியாவில் நிகழும் மரணங்களில் நான்கில் ஒன்று இதய நோய்களால் ஏற்படுகிறது.

இதய நோயால் ஏற்படும் மரணங்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, உடலில் கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. ஆனால், இந்த அனுமானம் முழுமையாக சரியானதா என்ற கேள்வி மருத்துவ வட்டாரங்களில் எழுந்துள்ளது. கொலஸ்ட்ராலைத் தவிரவும், மாரடைப்பை எச்சரிக்கும் பல்வேறு காரணிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

❄️ குளிர் காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு ஆபத்து

2024-ஆம் ஆண்டு American College of Cardiology அமைப்பின் முதன்மை ஆய்விதழில் வெளியான ஆய்வின் படி,
👉 தீவிரமான குளிர்ந்த வானிலை மற்றும் திடீர் குளிர் அலைகள் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கின்றன.

இந்த ஆய்வு மேலும் கூறுவதாவது:

குளிர்காலம் தொடங்கிய உடனே பெரிய ஆபத்து இல்லாவிட்டாலும்

2 முதல் 6 நாட்கள் கழித்து மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது

அதேபோல், American Heart Association வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
👉 ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலகட்டத்தை ஒட்டி மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்புடைய மரணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன.

மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது,
குளிர், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் உடல் சார்ந்த எதிர்வினைகள் ஆகியவற்றின் கலவை இதயத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, மாரடைப்பு ஆபத்தை உயர்த்துகிறது.