Don’t postpone yourself… You matter… Dr. Tamizhmaran | Life Coach

Don’t postpone yourself.

பலரின் வாழ்க்கை வெளியில் பார்க்கும்போது அழகாகத் தெரியும்.
வேலை இருக்கிறது.
குடும்பம் இருக்கிறது.
கடமைகள் இருக்கிறது.
அனைத்தும் “சரி” போலவே தெரியும்.

ஆனால் அந்த வாழ்க்கைக்குள் வாழும் மனிதன் மட்டும்,
ஒவ்வொரு நாளும் ஒரு சோர்வோடு எழுந்துகொண்டே இருக்கிறான்.
“எனக்கு என்ன நடக்கிறது?”
“நான் ஏன் இப்படி உள்ளுக்குள்ளே empty ஆகிறேன்?”
இந்த கேள்விகள் தோன்றும்போது,
பலர் ஒரு முடிவை எடுத்துவிடுகிறார்கள்.

“எல்லாம் சரிதான்… நான் தான் overthink பண்ணுறேன்.”
ஆனால் உண்மை என்ன தெரியுமா?
நீங்கள் overthink இல்லை.
நீங்கள் உங்களை தள்ளி வைத்து வாழ ஆரம்பித்து விட்டீர்கள்.
இதுதான் இன்றைய மனிதனின் மிகப் பெரிய பிரச்சனை.
காலை எழுந்ததும் வேலை.
வேலை முடிந்ததும் குடும்பம்.
குடும்பத்துக்குப் பிறகு பொறுப்புகள்.
அதற்குப் பிறகு தூக்கம்.
இவ்வளவு வேலை நடக்கிறது…
ஆனால் வாழ்க்கை நகரவில்லை.
Busy இருக்கிறோம்…
ஆனால் peace இல்லை.
Because we are living for everything… except ourselves.

ஒரு இடத்தில் நின்று யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் கடைசியாக எப்போது உங்களுக்காக ஒரு முடிவெடுத்தீர்கள்?
எனக்கு இது பிடிக்கும் என்று சொன்ன நாள் எது?
எனக்கு இப்படி வாழ முடியாது என்று உணர்ந்த நாள் எது?
என் மனசுக்காக நான் “No” சொன்ன நாள் எது?
இந்த கேள்விகளுக்கு பதில் தேடுவதற்குள்
நம்ம வாழ்க்கை நம்மை தள்ளி போட்டு விடுகிறது.
மற்றவர்களுக்காக வாழ்கிறோம்.
எல்லாரையும் திருப்தி படுத்த முயற்சிக்கிறோம்.
எல்லா பிரச்சனைகளுக்கும் பதில் சொல்ல முயற்சிக்கிறோம்.
ஆனால் அந்த வாழ்க்கையில்
நாம் மட்டும் இல்லை.

உண்மை என்ன தெரியுமா?
உங்களை மறந்து வாழ்வது தான்
மன அழுத்தத்தின் முதல் படி.
நாம் பல நேரங்களில் நம்மையே குறைத்து பேசுகிறோம்.

“நான் யாரு?”
“எனக்கு என்ன worth?”
“என்னை யார் கவனிக்கப் போறாங்க?”
இந்த மாதிரி எண்ணங்கள் தான்
நம்ம உள்ளே இருக்கும் சக்தியை மெதுவாக சிதைக்கிறது.

நீங்கள் சுயநலவாதி ஆக வேண்டாம்.
ஆனால் சுயமரியாதையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பிடிக்காத விஷயத்தில்
அமைதியாக சம்மதம் சொல்வது
நல்ல மனம் அல்ல.
அது slow suicide.
உங்களுக்கு சரியில்லை என்று தெரிந்தும்
“சும்மா இருக்கலாம்” என்று நினைப்பது
சாந்தம் அல்ல.
அது self-neglect.

அதனால் இன்று இந்த ஒரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள்:
You matter.
நீங்கள் முக்கியம்.
உங்கள் மனநிலை முக்கியம்.
உங்கள் நிம்மதி முக்கியம்.
உங்கள் ஆசைகள் முக்கியம்.

வாழ்க்கையை முழுசா மாற்ற வேண்டிய அவசியமில்லை.
முதலில் உங்களுக்காக
ஒரு சின்ன இடம் உருவாக்குங்கள்.
தினமும் 10 நிமிடம் அமைதி
தினமும் உங்களை நீங்களே பாராட்டுவது
தினமும் ஒரு சின்ன “No”
தினமும் ஒரு சின்ன “Yes to myself”
இந்த சின்ன மாற்றங்கள் தான்
ஒரு நாள் பெரிய வாழ்க்கையாக மாறும்.
நினைவில் வையுங்கள்.

Don’t postpone your life for a future that may never come.
இன்று தான் வாழ்க்கை.
இன்றே தான் மாற்றத்தின் ஆரம்பம்.
உங்களைத் தள்ளி வைத்து வாழாதீர்கள்.
நீங்கள் முக்கியம்…

உங்கள் வாழ்க்கை குறித்து பேச,
தெளிவு பெற,
அல்லது ஒரு வழிகாட்டல் தேவை என்றால் –
📩 WhatsApp-ல் தொடர்பு கொள்ளலாம்
– Dr. Tamizhmaran | Life Coach

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!

Check us Social Media

Facebook

Instagram

YouTube