நாட்டாமை படத்தில் வரும் டீச்சரை ஞாபகம் இருக்கா?? அவருடைய மகள்தான் இந்த பிரபல நடிகையா?
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் வருடங்கள் கடந்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும்..சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை. அந்த படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது என்றே சொல்லலாம்.. நீதி தவறாத நேர்மையான ஒரு மனிதன் தன் தம்பிக்கு ஒரு தவறான தீர்ப்பு கொடுத்துவிட்டு அந்த விஷயம் கடைசியில் அவருக்கு தெரிய வரும் போது அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் மரணித்து விடுவார் அதுதான் இந்த படத்தின் கதையே..அந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பேசப்பட்டது அதிலும் குறிப்பாக பேசப்பட்ட ஒரு கதாபாத்திரம் டீச்சர் கதாபாத்திரம்..
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த டீச்சர் கதாப்பாத்திரத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். இந்த டீச்சரின் மகளும் ஒரு ஹீரோயின்தான். அவர் யார் தெரியுமா?
சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்த படம், நாட்டாமை. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த டீச்சர் கதாப்பாத்திரம், யாராலும் மறக்க முடியாததாக இருந்தது. இந்த கதாப்பாத்திரத்தில் ராணி என்பவர் நடித்திருப்பார். இந்த நடிகை, பெரிதாக தமிழ் படங்களில் நடித்ததில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இப்போது இவரது மகளும் நடிக்க வந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? இதோ விவரம்!
சரத்குமார், இரு வேடங்களில் நடித்திருந்த படம் நாட்டாமை. இந்த படத்தில் மறக்க முடியாத பல கதாப்பாத்திரங்கள் உண்டு. அதில் ஒன்று, டீச்சர் கதாப்பாத்திரம். 90s குழந்தைகளின் ஃபேவரட் ஆன இந்த கதாப்பாத்திரத்தை, இன்று வரை மறக்க முடியாததற்கு பல காரணங்கள் உண்டு என்றே சொல்லலாம்.
நாட்டாமை திரைப்படம் ஹிட் ஆக, இந்த டீச்சர் கதாப்பாத்திரமும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். இந்த கேரக்டரில் நடித்தவர் பெயர், ராணி. தமிழை தாண்டி, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் இவர்.
ராணி, படங்களை தாண்டி சில தமிழ் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து சின்னத்திரையில் தன் முகத்தை காட்டிக்கொண்டு வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவரது பெயர், தார்னிகா.
பார்ப்பதற்கு அச்சு அசலாக, தன் தாய் இளமையில் இருந்த போது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கும் தார்ணிகா, தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருக்கிறார். திரையுலக பிரபலங்களின் வாரிசுகளும், சினிமாவிற்குள் எண்ட்ரி ஆவது வழக்கம். அப்படி, நடிகை ராணியின் மகளும் சினிமா ஆசையில் தன் முதல் படத்தில் நடித்துள்ளார்.
விரைவில், பொன்ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘கொம்பு சீவி’ படத்தில்தான், தார்ணிகா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு போலீஸ் கதாப்பாத்திரம் ஆகும். இதில் அவர் நடிகர் விஜயகாந்தின் மகன், ஷன்முக பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
கொம்பு சீவி படத்தில் ஷன்முக பாண்டியனுடன் சரத்குமார் ஹீரோவுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தார்னிகாவும், அவரது தாயார் போல பெரிய ஹீரோயினாக வர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. கொம்பு சீவி படம் வெளியான பின்பு, இன்னும் சில படங்களில் அவர் கமிட் ஆக வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தார்னிகாவும் அவர் அம்மாவை போல ஒரு ரவுண்ட் வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது….
