காலை டீ குடிப்பவர்களா நீங்கள்? அப்போ டாக்டர் சொல்லும் இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்காக தான்.!

இயற்கையோடு இயற்கையாக இருந்த காலகட்டத்தில் இயற்கையான உணவு முறைகளை நாம் அதிகம் எடுத்துக் கொண்டோம். நான் அருந்துகின்ற பானமும் அப்படித்தான் இருந்தது.. முதல் நாள் சமைத்து சாப்பிட்டது போக எஞ்சி இருக்கும் உணவினை தண்ணீர் ஊற்றி வைப்போம் காலையில் எழுந்ததும் வீட்டில் ஏற்கனவே உரை மோர் விட்டு வைத்திருந்த தயிரை எடுத்து அந்த பழைய சோற்றில் கலந்து சாப்பிடுவோம். வடித்த கஞ்சி தண்ணீரை குடிப்போம். வெயில் காலத்தில் மோரினை குடிப்போம். இளநீர் நுங்கு வெள்ளரிக்காய் போன்றவற்றை அதன் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப நாம் எடுத்துக் கொள்வோம் ஆனால் இன்றைக்கு அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.. மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையை விட இன்றைக்கு டீ காபிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை ஏராளம் என்றே சொல்லலாம் அவர்களுக்கான ஒரு எச்சரிக்கை பதிவுதான் இது…

குளிர்காலம் ஆரம்பித்தவுடன் உடலை சூடாக வைத்துக்கொள்ள பலர் தேநீர், காபி போன்ற பானங்களை அதிகமாகப் பயன்படுத்துவது வழக்கமாகிறது. ஆனால் இந்த பழக்கம், குறிப்பாக முழங்கால் மூட்டுகளின் ஆரோக்கியத்தில் எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என ஏம்ஸ் ராய்ப்பூர் மருத்துவமனையின் ஆஸ்தி மற்றும் விளையாட்டு காய நிபுணர் டாக்டர் துஷ்யந்த் சௌஹான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், குளிர் காலத்தில் அதிக கஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் மூட்டு ஆரோக்கியம் இடையே உள்ள தொடர்பை அவர் விளக்கினார்..

குளிர் காலத்தில் தேநீர், காபி அளவு அதிகரித்தால், முழங்காலில் உள்ள கார்டிலேஜ் எனப்படும் மென்மையான பாதுகாப்பு அடுக்கு ஈரப்பதத்தை இழந்து கடினமடைந்து, மூட்டுகளில் வலி, நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் எலும்புகள் உரசும் உணர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என அவர் கூறினார். குறிப்பாக குளிரான காலங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவது பொதுவான பிரச்சனை என்றும், பலர் தண்ணீர் குடிப்பதை குறைத்து தேநீர், காபியையே நம்புவதை அவர் சுட்டிக்காட்டினார். தேநீர் குடிப்பதில் தப்பில்லை, ஆனால் அதற்குச் சேர்த்து போதுமான தண்ணீர் குடிப்பதும் அவசியம் என அவர் வலியுறுத்தினார். இதனை மேலும் விளக்கி, ஆர்த்தோபீடிக் மற்றும் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சி. ஜகதீஷ், கார்டிலேஜ் 70–80% வரை நீரை கொண்டுள்ளது. நீர்ச்சத்து குறைந்தால் அது மென்மையை இழந்து எலும்புகள் மீது அழுத்தம் அதிகரிக்கும். கஃபைன் நேரடியாக கார்டிலேஜை சேதப்படுத்தாதாலும், அதற்கு உள்ள இலகு டியூரெடிக் எபெக்ட் காரணமாக உடலில் நீர் விரைவாக வெளியேற வாய்ப்பு உள்ளது. குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பது குறைவதால் கிரோனிக் டீஹைடிரேஷன் ஏற்பட்டு மூட்டு ஒட்டுதல், வலி அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார். தினமும் 2 முதல் 2.5 லிட்டர் வரை திரவம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு தேநீர்/காபி கப்புக்கும் கூடுதல் ஒரு கண்ணி தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்குகிறார்.