2026: மாறும் மனிதன் மாறா மிருகம்.. டைரக்டர் ரவிபார்கவன் வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ஏன் (Rat)எலியை போல கொண்டாட சொல்கிறார்?? காரணம் என்ன தெரியுமா?
ஒவ்வொரு நிமிடமும் எலியைப் போல் கொண்டாடுங்கள்.
“(Rat) எலி எங்க கொண்டாடுது?”
“ஏன் பழமொழி இல்ல… பூனை இளைச்சா எலிக்குக் கொண்டாட்டம்!”
(Rat)எலிகளில் பலநூறு இனங்கள் இருந்தாலும், அந்த எலிகளில் ஸ்பெஷல் மூஞ்சூறு! கிட்டத்தட்ட மூஞ்சூறு எலியை உற்றுப் பார்த்தீர்கள் என்றால், ஒரு மினி யானையின் தலை தெரியும்! சின்னதாக… தும்பிக்கையே தெரியும்! அது தும்பிக்கை போன்ற அழகு, எலிகளில் அதுவே அழகு!
Facebook
Instagram
YouTube
Twitter
மாறும் மனிதன் மாறா மிருகம்
கொஞ்சம் பழகினீர்கள் என்றால் மிக உரிமையோடு நீங்கள் சாப்பிடும் தட்டுக்கு அருகே வந்து நின்று விடும்! நாலு பருக்கை எடுத்து வைத்தால் மிக உரிமையோடு சாப்பிடும். ஐந்தாவது நாள் நீங்கள் சாப்பிடும் போது உங்கள் தொடைகளில் ஏறிக் கொள்ளும்! அதாவது… உரிமை கொள்ளும்!
‘உணவுக்காகத்தான் செல்கிறோம் இவன் நம்மை கொல்லமாட்டான், துன்புறத்தமாட்டான்!’ – அவ்வளவு நம்பிக்கை!
நன்றாக ஆறிய பாலோ, காஃபியோ ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து வைத்தால் முழுவதுமாக குடித்து விடும். உங்கள் முகத்தை உற்று நோக்கும்! அதன் பின் உங்களை தொந்தரவு செய்யாது. அதன் பின் எங்கு இருக்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது!
இரவு உணவின் போது வந்து உட்கார்ந்து விடும்.
அதாவது மனிதர்களிடம் உரிமை எடுத்துக் கொண்டு பாசத்தைக் காட்டி தனக்கான ஆதாயத்தைத் தேடிக் கொள்வது!
இரண்டாவது எலி… அது பாகுபலி கோட்டையாக இருந்தாலும் சரி, அதில் ஓட்டையைப் போட்டு தனக்கான குட்டி அரண்மனையையே உண்டாக்கி விடும்!
சுரங்கப்பாதைகள் எல்லாம் அமைத்து, பல்வேறு வழிகளை எல்லாம் உண்டாக்கிக் கொள்ளும். அதன் நடுவே தானியக் கிடங்கு! தன் வாயில் உள்ள பசைகளால் மண்ணைச் சேறாக்கி, கெட்டியாக்கி ஒரு தானியக் கிடங்கையே உருவாக்கி விடும்!
நெல், அரிசி, பருப்பு எது கிடைத்தாலும் சேர்த்து வைக்கும்.‘சேப்டியா இருக்கு! தப்பு வராது’ என்றால் கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று விடும். எவனோ விதைத்து, எவனோ அறுவடை செய்து சேமித்து வைத்தால்… அதில் ஆட்டையைப் போட்டு கிலோ கணக்கில் தன் கோட்டைக்குள் வைத்து விடும்!
நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா என்று தெரியாது! பஞ்சகாலங்களில் எலி பிடிப்பவர்கள், விவசாயிகளின் வயல்காடுகளில் எலி வளைகளாகத் தேடித் தேடிப் போவார்கள்! அதை மெல்ல கம்பியால் இடித்து இடித்து வழி ஏற்படுத்துவார்கள்.
அந்த எலி வலைக்குள் குறைந்தது ஐந்து கிலோ நெல் இருக்கும்! சில வயல்களை முழுவதும் தோண்டி எடுத்தால் மூன்று நான்கு மூட்டைகள் தேறி விடும்! அந்த நெல்… கெட்டும் இருக்காது! எப்படி அறுக்குறோமோ அப்படியே இருக்கும்! துளி மழை நீர் உள்ளே செல்லாது! சேர்த்து வைப்பதை பூராவும் சாப்பிட முடியாது!
ஆனால் சேர்த்து வைக்கும்! நல்ல மழைக்காலங்களில் பொண்டாட்டி புள்ளைங்களோடு அப்டியே சொகுசா சாய்ந்து… [டி.வி.மட்டும் இருக்காது ] இரண்டு மூன்று மாத காலம் நன்றாக வாழும்! விதைக்கும் காலம்வரை உள்ளே ஓய்வு எடுக்கும்! வாழும் போதே வாழ்க்கையைக் கொண்டாடுவது!
“அப்ப நாங்களும் மளிகைக்கடையில் ஓட்டையைப் போட்டு அரிசியைத் திருடி வைச்சுக்கட்டுமா” என்கிறீர்களா?
உனக்கு விதைக்கத் தெரியுமல்ல, அறுக்கத் தெரியமல்ல, சம்பாதிக்க கை கால் இருக்குல்ல, திருடாதே, ஆனால்… சேமித்து வை!
வரவு முழுவதையும் செலவழிக்காதே, உனக்காகச் சேர்த்து வைக்காதே, உன்னை மட்டுமே நம்பி இருக்கும் உன் குடும்பத்தை பட்டினி போடாமல், அவர்ககளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு வறுமைக் காலங்களில் நிம்மதியாகச் சாப்பிட வழியைச் செய்யுங்கள். கூடுமானவரை சேமியுங்கள்.
இந்த மாதச் சம்பளம், அடுத்தமாதம் ஊர்ஜிதம் இல்லை! இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்! சேமித்ததை உன் குடும்பத்திற்குப் போக மீதமுள்ளதை கஷ்டப்படும் நண்பர்கள், உறவுகளுக்குக் கொடுங்கள்.
எலிகள்… அதைத்தான் செய்கிறது! சேமிக்க முடியாமல் ஓடி ஆடி வேலை செய்ய முடியாமல் தவிக்கும் எலிகளைத் தங்கள் வலைகளுக்குள் சேர்த்துக் கொள்ளும்! அந்த முதியோர் எலிகள் உண்ட பின்தான், தானும் தங்கள் குடும்பமும் உண்ணும்!
இதைப் பார்த்துக் கொள்ளும் குட்டி (Rat)எலிகள் ‘வயதான எலிகளை காப்பாற்ற வேண்டுமே’ என்று கற்றுக் கொள்ளும்.
அப்பா, அம்மா எலிகளுக்குத் தெரியும்! தங்களுக்கு வயதாகிறது உணவு தேடிச் செல்ல முடியாது சேமிக்க வேண்டும் சேமித்தால் கஷ்டப்படும் போது உணவு கிடைக்கும்! பகிர்ந்தால் தங்களுக்கும் பகிர்வார்கள்.
(Rat)எலிப்பொறியில் சாகும் எலிகளைத் தவிர பூனைகளிடம் பிடிபடும் எலிகளைத் தவிர நோய்வாய்ப்பட்டு தானாக இறந்து கிடக்கும் எலிகளைப் பார்த்து இருக்கிறீர்களா?
அந்த வயதான எலிகள் வெளியே வந்தால் சக்கரத்தில் மிதிபட்டு இறக்கும்! ஆனால் வயதான இறந்து கிடக்கும் எலிகளை உங்களால் பார்க்க இயலாது!! இறக்கும் வரை உணவு கொடுத்து, இறந்த பின் அப்புறப்படுத்தி விடும்.
(Rat)எலிகளைப் போல் வாழ்ந்தோம் என்றால் உங்கள் பிள்ளைகள் உங்களை முதியோர் இல்லத்தில் போய் தள்ளமாட்டார்கள்!
எலிகளைப் போல் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.
