Bigg Boss Tamil money task-ல் 18 லட்சம் எடுத்த கானா வினோத் சம்பளம் எவ்வளவு? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் என்ன?
Bigg Boss Tamil money task
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. காரணம்—money task மூலம் 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறிய கானா வினோத்தின் முடிவு.
இந்த exit-க்கு பிறகு, சமூக வலைதளங்களில் ஒரே கேள்வி தான் வைரலாக சுற்றுகிறது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வார வாரமாக சம்பளம் வழங்கப்படும் என்பது பொதுவாக பேசப்படும் தகவல். அதிலும், பிரபலங்கள் மற்றும் ரசிகர் பட்டாளம் உள்ள போட்டியாளர்களுக்கு சம்பளம் அதிகமாக இருக்கும்.
கானா வினோத் பிக்பாஸில் கலந்து கொண்டதிலிருந்து அவருக்கு கிடைத்த screen time, audience engagement, emotional connect எல்லாமே பேசப்பட்ட விஷயம். அதனால் தான் அவர் எடுத்த 18 லட்சம் பணப்பெட்டி exit-க்கு கூட “இது smart decision” என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் தற்போது பரவும் தகவலின்படி, கானா வினோத் வாரத்திற்கு ₹1.5 லட்சம் முதல் ₹2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்று சில தகவல்கள் கூறப்படுகிறது… இதை வைத்து பார்க்கும்போது, அவர் நிகழ்ச்சியில் இருந்த வாரங்களின் அடிப்படையில் அவருக்கு சம்பளம் வந்திருக்கும் என்றும் பேசப்படுகிறது. ஆனால் இதை Bigg Boss team அல்லது official source உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
ஒரு தரப்பு சொல்வது, 18 லட்சம் கைக்கு வந்தா வாழ்க்கைக்கு useful. அதோடு screen exposure கூட கிடைச்சுடுச்சு.”இன்னொரு தரப்பு “இன்னும் சில வாரங்கள் இருந்திருந்தா சம்பளம் கூட அதிகமாகி, finale வரை chance இருந்திருக்கும்.”ஆனால் உண்மை என்னவென்றால், கானா வினோத்தின் exit இந்த சீசனின் மிகப்பெரிய turning point ஆகவே பார்க்கப்படுகிறது.. அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் அவர் எடுத்த முடிவு தான் இந்த வாரத்தின் வைரல் ஹைலைட்!
