பெங்களூரு–நாக்பூர் தொடர்ச்சியான தற்கொலை: புதுமணத் துயரம் இரு உயிர்களை எடுத்தது.!

பெங்களூரு வித்யாரண்யபுராவைச் சேர்ந்த சூரஜ் சிவன்னா (26) மற்றும் கன்வி (26) தம்பதியரின் வாழ்க்கை திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே துயரத்தில் முடிந்தது. அக்டோபர் 29-ஆம் தேதி திருமணம் செய்த அவர்கள், இலங்கைக்கு தேனிலவுக்குச் சென்ற நிலையில், கன்வியின் திருமணத்திற்கு முந்தைய காதல் விவகாரம் வெளிப்படுவதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்களுக்குள் தேனிலவை ரத்து செய்து திரும்பிய பிறகு, அவர்கள் மேலும் பிரச்சினைகளில் சிக்கினர்.

கடந்த வாரம் கன்வி தற்கொலை முயற்சி செய்தார்; மூளை செயலிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சூரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, கன்வியை வலியுறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதியடைவின் அச்சம் மற்றும் குடும்பத்தினர் போராட்ட காரணமாக சூரஜ், தாய் மற்றும் சகோதரருடன் பெங்களூரை விட்டு வெளியேறினார்.

நாக்பூர் நகரில் ஓட்டலில் தங்கியிருந்த போது சூரஜ் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட தாய் ஜெயந்தியும் தற்கொலை முயன்றார்; அவர் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

ஒரே திருமண விவகாரம் காரணமாக தொடர்ச்சியாக ஏற்பட்ட இந்த சம்பவம், பெங்களூரு முதல் நாக்பூர் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.