பாபா வாங்கா கணிப்பு: 2026-ல் கோடீஸ்வர யோகம் பெறும் இந்த 4 ராசிக்காரர்கள் யார்?
2026ஆம் ஆண்டு குறித்து உலகம் முழுவதும் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வரும் நிலையில், பிரபல தீர்க்கதரிசியான பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்த சில முக்கிய முன்னறிவிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நிதி முன்னேற்றம் கிடைக்கும் என்ற அவரது கணிப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாபா வாங்காவின் கணிப்பின்படி, 12 ராசிகளில் பிறந்தவர்களில் நான்கு ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டசாலிகளாக மாறப்போகிறார்கள். பொன், பொருள், செல்வம் என அனைத்திலும் குறைவின்றி வாழும் வாய்ப்பு இவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ராசிகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
மேஷம்
2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு முழுமையான அதிர்ஷ்டத்தைத் தரும் ஆண்டாக இருக்கும். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மாறும். மன உறுதி, கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் நிதி ஆதாயங்களை பலமடங்கு உயர்த்தும்.
குறிப்பாக, வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு 2026 மிகச் சிறப்பான ஆண்டாக அமையும். பெரிய சாதனைகள் மற்றும் எதிர்பாராத லாபங்கள் தேடி வரும்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு நிதி ரீதியாக மிகுந்த முன்னேற்றத்தை தரும். 2025 ஆம் ஆண்டில் அவர்கள் சந்தித்த சிரமங்களும் போராட்டங்களும் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வரும்.
ஆண்டின் தொடக்கத்திலும், குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்குப் பிறகும், வங்கி கணக்கில் கணிசமான வளர்ச்சி காணப்படும். தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை எட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மிதுனம்
புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை 2026 ஆம் ஆண்டில் பிரகாசமாக இருக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். புத்திசாலித்தனமான திட்டமிடலும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகளும் இவர்களுக்கு அபரிமிதமான நிதி பலன்களைத் தரும்.தொழில் மற்றும் சமூக தொடர்புகள் விரிவடையும். புதிய முயற்சிகளை தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் இது சிறந்த ஆண்டாக அமையும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் இவர்களின் குணம் பெரும் நன்மைகளைத் தரும்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் அபரிமிதமான வளர்ச்சியும், நேர்மறையான மாற்றங்களையும் அனுபவிப்பார்கள். புதிய தொழிலைத் தொடங்குவதற்கோ அல்லது தற்போதைய பணியில் உயர்ந்த பதவிக்கு செல்வதற்கோ வாய்ப்புகள் தேடி வரும்.
தலைமைத் தன்மை, தன்னம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவை இவர்களின் நிதி முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும். 2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை திசையை முழுமையாக மாற்றும் ஆண்டாக அமையும் என கூறப்படுகிறது.
