அவதார் 3 படம் ஹிட்டா இல்ல ப்ளாப்பா…இது படமே இல்லை.. சற்றுமுன் இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா?
என்னதான் தமிழ் சினிமாவின் மீது தீராத வெறித்தனமான ரசிகர்களாக இருந்தாலும் சரி, அவ்வப்போது ஏதாவது தரமான மற்ற மொழி திரைப்படங்கள் வரும் போதும் ஹாலிவுட் திரைப்படங்கள் வரும்போதும் அது ரசிகர்களை கவரும் விதத்தில் இருந்தால் அதையும் நம் தமிழ் ரசிகர்கள் தலைமீது தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.. அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் அவதார் 3 திரைப்படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற அளவிற்கு மேஜிக்கல் மொமெண்ட் கொடுத்துள்ளார்கள் என்று படத்தைப் பார்த்தவர்கள் ரிவ்யூ செய்ய ஆரம்பித்து விட்டார்கள்..
உலக சினிமாவில் டைட்டானிக் திரைப்படம் ஒரு மைல் ஸ்டோன்.. டைட்டானிக் படத்திற்கு பிறகு கடந்த 25 ஆண்டுகளாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தனது ஒட்டுமொத்த வாழ்நாளையும் அவதார் உலகத்தை உருவாக்குவதிலேயே அர்ப்பணித்து விட்டார் என்று சொல்லலாம். இந்த உலகத்திற்கு ஏலியன்ஸ் டெர்மினேட்டர் என அட்வான்ஸ் சயின்ஸ் பிக்சன் படங்களை கொடுத்து வந்த ஜேம்ஸ் கேமரூன் தற்போது வேற்று கிரகத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்த படத்தை பார்த்து மக்கள் அனைவரும் தியேட்டரில் எக்ஸ்பிரியன்ஸ் செய்தால் எப்படி இருக்கும் என தொடர்ந்து அவர் அவதார் பாகங்களை அடுத்தடுத்து இயக்கி ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறார்..
2009 ஆம் ஆண்டு அவதார் முதல் பாகம் வந்தபோது அதனை கண்ட ரசிகர்கள் தங்களுடைய வாழ்நாளில் இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்ததே இல்லை என்றும் இப்படி ஒரு அனுபவத்தை உணர்ந்ததே இல்லை என்றும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள் அதன்பின் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அவதார் 2 படத்தில் கடலும் கடல் சார்ந்த அந்த காட்சிகளையும் பார்த்து மிரண்டு போனார்கள் என்று சொல்லலாம் இப்போது மீண்டும் அவதார் 3 உலக ரசிகர்களை அவதார் ஃபயர் அண்ட் ஆஸ் படத்தின் மூலம் பாண்டாரே n அழகானது மட்டுமில்லை அதில் உள்ள ஆபத்துகளும் என்னென்ன பாருங்கள் என மிரட்டி உள்ளார் என்றே சொல்லலாம் அதனைப் பார்த்த ரசிகர்கள் இப்போது தங்களுடைய விமர்சனங்களை சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்..
அவதார் 2 பாகத்தின் எக்ஸ்டெண்ட் வெர்ஷன் ஆகவே அவதார்த்திரி பாகம் உள்ளது திரைக்கதையில் பெரிதாக எதுவுமே எக்ஸைட் செய்யவில்லை மாங்வான் இன மக்களை தவிர்த்து ஆனால் இந்த படம் பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கண்டிப்பாக பெரிய திரையரங்குகளில் பார்த்து கொண்டாடலாம் செம ஒர்த்தான படம் என சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் மேலும் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் கதாபாத்திரமான நெய்திரியின் சாகசங்களையும் அவர்கள் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்..
பிரம்மாண்டமான சினிமா சண்டைக் காட்சிகளும் சொல்ல முடியாத ஒரு வசீகரிக்க கூடிய உணர்வுகளும் நிறைந்த இந்த படம் இதன் அடர்த்தியான கதைக்களம் முதல் முறை பார்க்கும் பொழுது முழுமையாக புரிந்து கொள்வது சற்று கடினமாகவே இருக்கும் ஆனால் அற்புதமான சண்டைக் காட்சிகள் நேர்த்தியான அரங்க அமைப்புகள் மற்றும் இதுவரை திரையில் கண்டிராத மூச்சடைக்க கூடிய காட்சிகள் படத்தின் பிரதான குறைகளை மறைத்து விடுகின்றன கதையின் ஓட்டத்தில் உள்ள துள்ளல் தன்மை சற்றே நீளமான கதை அமைப்பு போன்ற சில துறைகள் இருந்தாலும் அவை பெரிதாக தெரிவதில்லை இது வே ஆப் வாட்டர் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இது உருவானபோது ஏன் பாகம் 2 என்ற துணை தலைப்பு பெறவில்லை என்று வியக்கத் தோன்றுகிறது அவதார் வரிசையிலேயே இதுவே மிக அதிகமான கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படமாக உள்ளது முந்தைய படத்தின் நிகழ்வுகளை நேரடியாக தொடர்வது அவசியமானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் அமைந்துள்ளது முந்தைய படமான தீவே ஆஃப் வாட்டர் உடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது அப்படத்தில் நிறுவப்பட்ட உறவுகளையும் முக்கிய திருப்பங்களையும் பெருமளவு சார்ந்து உள்ளது ஆகவே இதை பார்ப்பதற்கு முன் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்ப்பது ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கின்றார்கள்..
மேலும் இது சுவாரஸ்யமான தனிப்பட்ட மோதல்களை ஆளப்படுத்துகிறது என்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பிரகாசிக்க தகுந்த வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் தனித்துவமான மாறுபட்ட குண நலன்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் மாறிவரும் நோக்கங்களும் 3 மணி நேர ஓட்டத்தை நமக்கு மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வைக்கின்றன குறிப்பாக கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் உருவாக்கும் பல பதற்றமான தருணங்கள் இந்த ஆண்டு உங்களை வெகுவாக கவர்ந்த சில படங்களைப் போல பரபரப்பில் வைத்திருக்கும் ஒரு சாகாவரம் பெற்ற வில்லனாக உருவெடுத்த குவாரிச் இதில் மேலும் மிளிர்கிறார் ஓனா சாப்ளினின் முற்றிலும் மாறுபட்ட வரங்குடனான அவரது கூட்டணி மேலும் கதாபாத்திரத்திற்கு பலத்தை சேர்க்கின்றது ஜேக் சல்லியன் எதிரியாக அவர் தொடர்ந்து சித்தரிக்கப்படுவது முதல் படத்தில் அவர் ஒரு சலிப்பான ராணுவ வீரராக இருந்ததைவிட பல மடங்கு உயர்த்தி சிக்கலான வில்லன் கதாபாத்திரமாக மாற்றியுள்ளது ஜேக் மற்றும் நைத்திரியை பொருத்தவரை அவர்களை திரைப்படம் மீண்டும் மீண்டும் மிக மோசமான தாழ்வான சூழ்நிலைகளில் சிக்க வைப்பது ஆச்சரியம் அளிக்கின்றது அவர்களின் வீழ்ச்சி ஒவ்வொரு முறையும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது கிரியின் ஜீவாவுடன் ஆன்மீகப் பயணம் மற்றும் தாவரங்கள் விலங்குகள் மீதான அவரது சக்திகள் படத்தின் சுவாரசியமான காட்சிகளாக இருந்தாலும் இரண்டாம் நிலை சற்று அம்சமாக அப்படியே தொடர்கின்றன அவளது திறன்கள் பெரும்பாலும் கதையில் உள்ள சவால்களை தீர்க்க பயன்படுத்தப்படுகின்றன நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு முதன்மை கதாபாத்திரத்திற்கு மிக நெருக்கமான தனித்து நிற்கும் பாத்திரம் லோ அத்தான் அவன் தான் படத்தின் கதை சொல்லி குற்ற உணர்ச்சி மற்றும் வெட்கத்தால் உந்தப்பட்ட ஒரு அற்புதமான பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இந்த பயணம் அவனை இருண்ட இடங்களுக்கு இட்டுச் செல்கின்றது இந்த கதையின் உணர்வுபூர்வமான தூண்களில் ஒன்றாக லோ ஆப் செயல் படுகின்றான் என்ற டல்ஹூல் குறித்த கதையுடன் அவன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறான். பல முதல் கட்ட விமர்சனங்கள் ஃபயர் அண்ட் ஆப் தி வே ஆஃப் வாட்டர் படத்தின் மறுபடிவம் என்றும் புதிதாக இதில் எதுவும் இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் ஆனால் படம் பார்க்கும்போது அதன் மேஜிக்கில் மக்கள் நிச்சயம் பிரமித்து போவார்கள் திரைப்படமே அதற்குத்தானே உருவாக்கப்படுகின்றது ஜேம்ஸ் கேமரூன் மீண்டும் ஒருமுறை தனது மாயாஜாலத்தை செய்து இருக்கின்றார் என்ன ஒரு அற்புதமான படைப்பு என அனைவரும் இந்த படத்தை இப்போது கொண்டாடி வருகிறார்கள்..
