2026: எல்லாருக்கும் ‘Adjust’ பண்ணி பண்ணி கடைசில நமக்கு யாரும் இல்லாம போயிடுமா? வாழ்க்கை இப்படித்தான் மெதுவா உடையும்.!
நம்ம பல பேரோட வாழ்க்கை பிரச்சனை ஒரு இடத்துல தான் ஆரம்பிக்குது. அது பெரிய தவறு கிடையாது. ஆனா அதையே தொடர்ந்து செய்து கொண்டே இருந்தா, ஒரு நாள் நம்ம வாழ்க்கையே வேற மாதிரி ஆகிடும். அந்த பழக்கம் என்னனா “எல்லாருக்கும் Adjust பண்ணுவது”.
Facebook
Instagram
YouTube
Twitter
நம்ம நல்ல மனசு உள்ளவங்க. யாராவது கஷ்டத்துல இருந்தா உடனே help பண்ணிடுவோம். யாராவது பேசினா நம்ம பதில் சொல்லாம விடுவோம். “சரி விடு”ன்னு சின்ன சின்ன விஷயங்களை தள்ளிவிடுவோம். இதெல்லாம் நல்ல குணம் தான். ஆனா இப்படி எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு, நம்ம மனசுக்குள்ள இருக்குற துன்பத்தை மட்டும் வெளியே காட்டாம நாமே உள்ளுக்குள்ள வைத்துக்கிட்டா என்ன ஆகும் தெரியுமா?
முதலில் நம்ம சிரிப்பு குறையும். அப்புறம் நம்ம பேசுறது குறையும். அடுத்தது நம்முக்கு எதுவுமே பிடிக்காது. வாழ்க்கை ஒரு சுமை மாதிரி தெரியும். இதுக்கெல்லாம் காரணம் யாரும் இல்ல – இவங்க கண்ணுக்கு நம்ம happy-ஆ இருக்குற மாதிரி தான் தெரியும். ஆனா உண்மை அதுக்கு முழுக்க opposite.
“அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”னு சொல்லுறவர்கள் பல நேரம் அந்த வார்த்தையை “நீங்க மவுனமா இருங்க”ன்னு அர்த்தத்தில் தான் பயன்படுத்துறாங்க. இன்னும் சிலர் அதை நம்ம பலவீனமா எடுத்துக்குறாங்க. நம்ம சத்தம் போடாததால் நம்முக்கு இப்படி தான் பழக்கம் என்று நினைக்கிறாங்க. அதனால தான் ஒருத்தன் ஒருத்தனா தாண்டிக்கிட்டே போவாங்க. நம்ம தான் ஒவ்வொரு தடவையும் “சரி” சொல்லிக்கிட்டே இருப்போம்.
இது எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல போனா, நம்ம மனசுக்குள்ள ஒரு கேள்வி வரும்: “நான் எல்லாருக்காக ஓடுறேன்… எனக்காக யார் ஓடுறாங்க?” இந்த கேள்வி வந்துட்டா அதுக்கப்புறம் relationship கூட நம்முக்கு வெறுப்பா மாறிடும். ஏன்னா அந்த “Adjust” என்ற பெயரில் நாம நம்மத்தை நாமே அழிக்க ஆரம்பிச்சுருக்கோம்.
இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, நம்ம boundary இல்லாமல் போயிடும். ஒருத்தன் நம்ம நேரத்தை எடுத்துக்கிட்டான், பணத்தை எடுத்துக்கிட்டான், மரியாதை இல்லாம பேசிட்டான், எதுவுமே நாம எதிர்க்க மாட்டோம். ஏன்னா “சண்டை வேண்டாம்”ன்னு நினைப்போம். ஆனா மரியாதை இல்லாம பேசுறது சண்டைக்கு காரணமா இல்ல. அது நம்ம வாழ்க்கையின் dignity-யை குறைக்கிற விஷயம்.
நல்லவனா இருப்பது நல்லது தான். ஆனால் நம்மை நாமே காப்பாத்திக்காம நல்லவனா இருந்தா அது வாழ்க்கையையே மெதுவா உடைக்கும். அதனால சில விஷயங்களை வாழ்க்கையில் தெளிவா புரிஞ்சுக்கணும்.
எல்லாத்துக்கும் ‘சரி’னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சில இடங்களில் அமைதியா இருக்கலாம். சில இடங்களில் நம்ம நிலையை நாமே சொல்லணும். சில இடங்களில் “இதுக்கு மேல முடியாது”ன்னு மனசுக்குள்ள முடிவு எடுத்துக்கணும்.
மொத்தத்தில் வாழ்க்கை எப்போதும் யாருக்காவது மட்டும் இல்லை. அது நமக்காகவும் இருக்கணும். நம்மை நாமே மதிக்கலன்னா, உலகம் நம்மை மதிக்காது. இந்த உண்மை தான் வாழ்வியல். இது ஒரு நாள் புரிந்துட்டா, நம்ம வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் வரும்.
