2026: (Crocodile)முதலைகளைப்போல் அட்ஜஸ்ட் செய்து பழகுங்கள் – மாறும் மனிதன் மாறா மிருகம் புத்தகத்திலிருந்து இயக்குனர் ரவிபார்கவன்.!

(Crocodile)முதலைகள் எங்கே அட்ஜஸ்ட் செய்கிறது!? பசி வந்தால்… யானையோ காட்டு எருமையோ, எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை! தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்து கூட்டமாகச் சேர்ந்து ஐந்து நிமிடத்திற்குள் முழு உடலையும் கபளீகரம் செய்து விடும்! அது எங்கே அட்ஜஸ்ட் செய்கிறது!?

Facebook
Instagram
YouTube
Twitter

டிஸ்கவரி சேனல் பார்க்கும் போது இப்படி ஒரு பயங்கர மிருகமா.!? யாரையும், எதனையும் அச்சுறுத்தும் ஒரு உருவம். எதைக் கண்டும் பயப்படாத வெறி! அது, தேவை என்றால் எவ்வளவு கடினமான உணவாக இருந்தாலும் அதைப் பிடித்து விடும். அடிபட்டு பின்வாங்கும் முதலைகள் இல்லவே இல்லை!
யானை, சிங்கம் போன்ற உருவங்களைக் கூட கூடுமானவரை அடித்து வீழ்த்த முயற்சி செய்யும்! முடியவில்லை என்றால் சாப்பிடாமல் பிடியை விடுத்து பின்வாங்கி விடும்!

அசுரப்பிடியை… நொடியில் தளர்த்திவிடும்! இவைதான் டிஸ்கவரி போன்ற சேனலில் பார்த்தது.
இந்த (Crocodile)முதலைகளின் இன்னொரு முகம் என்னவாக இருக்கும்!?
குளம், குட்டை, ஏரிகள் வெயில் காலங்களில் வற்றி விடுகிறது. அப்போது இது உணவை எங்கிருந்து பெறுகிறது! சுத்தமாக அனைத்தும் நீர் வற்றிய பருவ காலங்களில் அதன் வாழ்க்கை முறை மிக சாதுவாக இருக்கும்!

(Crocodile)முதலையா… இப்படி!? என்று கேட்கத் தோன்றும்! கலங்கிய சேறுகளுக்குள் அமிழ்ந்து, மாதக் கணக்கில் கண் மூடிக் கிடக்கும். கூடுமானவரை வெளியே வருவதில்லை. இந்தக் காலகட்டங்களில் கல்யாணம் முடித்து, குழைந்தைகள் கூட பெற்றுக் கொள்வதில்லை! அமைதி! அட்ஜஸ்ட்மென்ட்!

அந்தச் சேறும், காய்ந்து போகும் தருணங்களில் கூட… மண்ணோடு மண்ணாக ஒட்டிக் கொண்டிருக்கும்! தேடிவரும் இரையைக் கூடத் தாக்காது! எனர்ஜியை வேஸ்ட் செய்யும் வகையில் வாலன்ட்டியராகப் போவதில்லை. குட்டிகளும் அப்படியே! குட்டிகளும்… அப்படியே கற்றுக் கொள்கிறது!

வெறிகொண்டு சீசன் நேரங்களில் தேடித் தேடிப் பிடித்து அடித்து உண்ணும் உணவுகளை எல்லாம், சக்தியாகச் சேமித்து அதிகமாக எனர்ஜியை வீணடிக்காமல் போய்ப் பதுங்கிக் கொள்ளும்!
சரி, இது இங்குதானா..? வற்றாத நதிப்படுகைகளில் முதலைகளின் வாழ்க்கை முறை என்ன? கங்கை நதி ஏரியாக்கள், பிரம்மபுத்திரா, சிந்து போன்ற பகுதிகளை பார்த்தீர்களானால், நீர் நிலைகளில் கூட அவைகள் வேட்டையாடுவது இல்லை! ‘தேமே’ என்று கரையோரங்களில் எல்லாம் அமைதியாகப் படுத்து முகம் மட்டும் சற்று வெளியே தெரிந்தது போல் அமைதி காத்துக் கொண்டிருக்கும்!
அவைகளுக்குத் தெரியும்! தண்ணீர் தேடி கொழுத்த மிருகங்கள் எப்போது நீர் அருந்த வரும்! அந்தக் காலங்கள் வரை சிறு இரைகளைப் பிடித்துத் தின்னாமல் கொழுத்த மிருகங்களுக்காகக் காத்திருக்கும்!

அட்ஜ்ஸ்ட்மென்ட்!! உறவு கொள்ளாது!
காரணம்… கொழுத்த மிருகங்களை வேட்டையாடும் காலத்தில் உடம்பில் அதிக தெம்பும் வீரியமிக்க விந்து அணுக்களும் ஆக்ரோஷமாக உறவு கொள்ளும் பலமும், பெண் முதலைகளைக் கவரும் வண்ணம் வேட்டையாடும் துணிச்சலும்… பெண் முதலைகள் சைட் அடிக்கப் பெரும் மிருகங்களை வேட்டையாடுவதில் ஆண் முதலைகளுக்கு அலாதியான பிரியம்!

இதில் போட்டிகள் வேறு! தான் அடித்த மிருகங்களை தோழிகள் சேர்ந்து புசித்தால் ஆண் முதலைகளுக்கு ஒரு கெத்து! ‘நாம் சம்பாதித்துப் போடறோம் பொம்பளைங்க சாப்பிடுது!’ அதில் ஒரு பொருத்தமான ஜோடியைத் தேர்ந்தெடுத்து பின்னாலயே போவது! பெண் முதலைகள் சற்று பந்தா பண்ணினாலும் இணங்கிவிடும்!

இங்கும் அட்ஜஸ்ட்மென்ட்!! எது கிடைத்தாலும் ஓகே என்பது மனிதர்கள் மட்டும்தான் போல!
மிருகங்கள் அப்படியில்லை! நன்றாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்! தேர்ந்தெடுத்து கவர வேண்டும். கவர்ந்த பின் ஆக்ரோஷமாகப் பலத்தைப் பிரயோஜனப்படுத்தாமல் அதை இணக்கமாக இணங்க வைத்து அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு, நல்ல நாள், ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்தது போல் போய் உறவு கொள்ளும்.

ஒரு… அட்ஜஸ்ட்மென்ட்!
மனைவி கர்ப்பம் தரித்துவிடுவாள். அதன்பின் கர்ப்பம் தரித்த மனைவியை காதல் கொள்ளும்! சில ஆண் முதலைகள் நோட்டம் விட்டால் அடித்து விரட்டும்!

குழந்தை பிறக்கும் வரை பராமரிப்பது. கறி அடித்துக் கொடுப்பது. நன்றாக உரம் ஏற்றி உரம் ஏற்றி ஆரோக்யமான முதலைகளைப் பெறும்! அட்ஜஸ்ட்மென்ட்… அசாத்தியப் பொறுமை!

எந்தச் சூழ்நிலையிலும் நோஞ்சானாக உறவு கொள்ளக்கூடாது என்கிற பொறுப்பும் பொறுமையும், மிக நெருக்கமாக முதலைகளை நீங்கள் உற்றுக் கவனித்தால் புரியும்! அட்ஜஸ்ட்மென்ட்!
பொறுத்திருந்து, காத்திருந்து பலனை அனுபவிப்பது!
பசித்திரு, விழித்திரு வீரத்துறவி விவேகானந்தன் முதலைகளுக்குச் சொல்லி இருப்பாரோ..?

‘நூறு முதலைகளை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன்’ என்று!
அட்ஜஸ்ட் செய்யப் பழகிக் கொள்வோம் (Crocodile)முதலைகளைப் போல!
அசாத்திய பலங்களைப் பெறுவோம் (Crocodile)முதலைகளைப் போல!

Privacy & Policy
Disclaimer
Contact us
About us