நவரச நாயகன் நடிகர் கார்த்திக் கவலைக்கிடமா?? வீல்சேரில் வந்ததை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நடிகைகளை எப்படி ரசிகர்கள் உச்சத்தில் வைத்து கொண்டாடுகிறார்களோ அதேபோன்று ஒரு சில நடிகர்களை ரசிகைகளும் உச்சத்தில் வைத்து கொண்டாடுவார்கள்.. அந்த விதத்தில் பெண் ரசிகர்களால் புடை சூழ புகழின் உச்சத்தில் இருந்தவர் தான் நடிகர் கார்த்திக்.

நடிகர் கார்த்திக்கு நவரச நாயகன் என்கின்ற ஒரு பட்டமும் உண்டு..அதே நேரத்தில் இவருக்கு ஆண் ரசிகர்கள் எவ்வளவு இருந்தார்களோ அதைவிட பல மடங்கு பெண் ரசிகைகள் அதிகமாகவே இருந்தார்கள் என்று சொல்லலாம்… இன்னும் சொல்லப்போனால் தமிழ் தெலுங்கு மொழி படங்களில் நடிக்கும் பல்வேறு கதாநாயகிகளும் நடிகர் கார்த்திக்கின் மிகப்பெரிய ரசிகையாகவே இருந்தார்கள்.. நடிகர் கார்த்திக்கு இன்னொரு சிறப்பு அவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன்..தமிழ் சினிமாவில் மிகவும் அமைதியான ஒழுக்கமான எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகர் என்று பெயர் பெற்றவர் தான் நடிகர் முத்துராமன்..இவர் நடிக்கின்ற காலகட்டத்தில் மூன்றாவது கட்ட நடிகராக இருந்தார். நடிகர் முத்துராமனுக்கு தன்னுடைய மகன் கார்த்திக் சினிமாவிற்கு வருவதில் துளி கூட விருப்பமில்லை ஆனால் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அவரை சினிமாவிற்கு கொண்டு வந்தது..அன்று ஆரம்பித்த அவருடைய பயணம் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


நவரச நாயகன் என மக்களால கொண்டாடப்பட்ட நடிகர் கார்த்திக் வீல் சேரில் வந்த புகைப்படம் ரசிகர்களை பதற வைத்த நிலையில், அவரின் உடல்நலம் தற்போது எப்படி இருக்கிறது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் தான் நடிகர் கார்த்திக்.
இவர், பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய, அலைகள் ஓய்வதில்லை..

” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானார். அவருடன் நடிகர் ராதாவும் நாயகியாக அதே திரைப்படத்தில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து கார்த்திக்கின் யதார்த்தமான நடிப்பு, அழகு, திறமை ஆகிய திரைத்திறையில் கொடிக்கட்டி பறக்கும் நடிகராக மாற்றியது. அன்று முதல் இன்று வரை கார்த்திக்கின் நடிப்பை ஈடு செய்வதற்கு தமிழ் சினிமாவில் வேறு ஒரு நடிகர் வரவில்லை.
என்ன தான் இவர் நடிப்பில் புலியாக இருந்தாலும், திரைத்துறையில் இருப்பவர்களுடன் ஏற்பட வாக்குவாதங்கள் காரணமாக படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்து கார்த்திக்கின் மார்க்கட் படிபடியாக குறைய ஆரம்பித்தது.
இதற்கிடையில், அனேகன் திரைப்படத்தில் ரீ- என்றி கொடுத்து மாஸ் காட்டியிருப்பார். தற்போது இந்த நிலையில், நடிகர் கார்த்திக் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார்கள் என பல செய்திகள் வந்திருந்தாலும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீல் சேரில் உள்ள புகைப்படம் சமீபக்காலங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதற்கு அவருடைய மகன் கௌதம் கார்த்திக் பேட்டிகளில் மறுப்பு தெரிவித்திருந்தார். குறையாத வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காணொளியொன்று வெளியாகியுள்ளது.அதில் கார்த்திக், எழுந்து நின்று பாடல் பாடி நடனமாடும் காட்சி உள்ளது. இந்த காணொளியை நடிகர், மூத்த பத்திரிகையாளர் என பன்முகங்களை கொண்ட சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருக்கிறார்.

நடனமாடி கொண்டே கம்பு சுற்றும் அளவுக்கு கார்த்திக் நலமாக இருக்கிறார்கள் என்ற கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் கார்த்திக்கின் மீது எவ்வளவுதான் விமர்சனங்கள் இருந்தாலும் அவர் மீண்டும் நல்லபடியாக உடல் நலத்துடன் தேடி வர வேண்டும் தொடர்ந்து சினிமாவில் அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..