90ஸ்-ல கலக்குன அப்பாஸ் இப்ப கன்றாவி நிலையில் இருந்து மீண்டும் ரீ- என்ட்ரி
பிரபல சாக்லெட் ஹீரோ 90ஸ் கிட்ஸ் பெண்களின் கலாப காதலன் நடிகர் அப்பாஸ் 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இவர் நடிக்கும் படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவுல கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.
கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ’டார்லிங்’ திரைப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து ’அடியே’, ’நாச்சியார்’, ‘பேச்சுலர்’, ‘கிங்ஸ்டன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இசை, நடிப்பு என ஜி.வி.பிரகாஷ் படு பிசியாக உள்ளார்.
இந்நிலையில், ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார்…
1996-ல் ஆரம்பித்த நடிகர் அப்பாஸின் சினிமா பயணம் 2015-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இடையில் சில தோல்விகள், வெற்றிகள் கிடைத்தாலும் ஒரு கட்டத்தில் அவரது மார்கெட் பெரிதாக வீழ்ந்தது. இதையடுத்து, நடிகர் அப்பாஸ் நியூசிலாந்துக்கு வேலைக்காக சென்று அங்கு டாக்ஸி ட்ரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தற்போது ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
