நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகள்! உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: ஜோதிடத்தின் ஒரு முக்கிய கிளையாக விளங்கும் நியூமராலஜி, ஒருவரது ஆளுமை, வாழ்க்கை நடை, எதிர்கால வாய்ப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களை எண்களின் அடிப்படையில் விளக்குகிறது. இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரை உள்ள ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்துவமான ஆற்றலும், அதிபதியும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பொதுவாக ஒருவரின் விதி எண், அவர் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் மாதத்தின் 25ஆம் தேதியில் பிறந்திருந்தால், 2 + 5 = 7 என்பதே அவரது விதி எண்ணாகும். அந்த விதி எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அந்த நபரின் குணங்கள், நடத்தை மற்றும் வாழ்க்கை வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அனைவரும் கடுமையாக உழைத்தாலும், அனைவருக்கும் ஒரே அளவு பணவரவு அமைவது இல்லை. சிலர் அதிக சிரமமின்றியே பணத்தை ஈர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். நியூமராலஜி படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிப்பதில், வியாபாரத்தில் மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றி பெறுவதில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
விதி எண் 5 – பணவரவு குவியும் எண்
ஒரு மாதத்தின் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதி புதன். புதன் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் காரகன் என நியூமராலஜி கூறுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதனின் அருளை பிறவியிலேயே பெற்றிருப்பார்கள் என நம்பப்படுகிறது.
ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள்
விதி எண் 5-ஐ கொண்டவர்கள் எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க அஞ்சமாட்டார்கள். முடிவெடுப்பதில் வேகமானவர்கள். எடுத்த முடிவுகள் பெரும்பாலும் அவர்களுக்கு சாதகமாக அமையும். இவர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
புத்திசாலித்தனம் & நிதி வெற்றி
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் மனம் மிகவும் கூர்மையானது. ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்வதால், வேலை அல்லது தொழில் எதுவாக இருந்தாலும் நிதி நன்மைகள் கிடைக்கும். இவர்களின் புத்திசாலித்தனம் தான் இவர்களை அதிக பணவரவிற்கு கொண்டு செல்லும் முக்கிய காரணமாக உள்ளது. அதனால் பணப்பற்றாக்குறை என்பது இவர்களுக்கு அரிதாகவே இருக்கும்.
பயண விரும்பிகள் & பேச்சுத் திறன்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே பயணங்களை விரும்புவார்கள். ஒரே இடத்தில் கட்டுப்பட்டு இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. மற்றவர்களுடன் எளிதில் பழகும் குணம் கொண்டவர்கள். இவர்களின் மிகப்பெரிய பலம் பேச்சுத் திறன். பேசிப் பேசிக் கடினமான காரியங்களையும் எளிதில் சாதித்து விடுவார்கள். இந்த திறமை தான் இவர்களை பிரபலமாக்கி, பொருளாதார ரீதியாக வலுவான நிலைக்கு கொண்டு செல்கிறது.
பொறுப்புத் துறப்பு:
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் நியூமராலஜி அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. இதன் நம்பகத்தன்மைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தக் கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. எந்தவொரு ஜோதிட அல்லது நியூமராலஜி ஆலோசனையையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிபுணர்களை அணுகுவது அவசியம்.
