பட்டுப் புடவையில் தேவதையாக மாறிய ஆர்த்தி ரவி! விவாகரத்து சர்ச்சைக்கு பின் வைரலாகும் பதிவு – என்ன விசேஷம்?
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு சமூக வலைதள பதிவும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த வரிசையில், தற்போது பச்சை நிற பட்டுப் புடவையில் அசத்தல் அழகில் தேவதையாகவே மாறிய ஆர்த்தி ரவியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரவி மோகன் – ஆர்த்தி தம்பதிகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரிவுக்குப் பிறகு குழந்தைகளுடன் ஆர்த்தி தனியாக வாழ்ந்து வருகிறார். மறுபுறம், ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் நெருக்கம் காட்டி வருவது பேசுபொருளாக மாறியுள்ளது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக தோன்றுவது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் பிரிவுக்கான காரணம் குறித்து இருவரும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டதால், குடும்ப பிரச்சினை பொதுவெளியில் விவாதமாக மாறியது. ஆர்த்தியும் அவரது தாயும் தன்னை மதிக்கவில்லை என ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையான காரணம் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை.
இந்நிலையில், சிங்கிளாக இருந்தபடியே தன்னம்பிக்கையுடன் மாஸ் காட்டும் வகையில் ஆர்த்தி ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில அசத்தல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பச்சை நிற பட்டுப் புடவையில் பாரம்பரிய தோற்றத்தில் ஜொலிக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
“பல பெண்கள் தங்கள் கனவுகளை நிறுத்தி, தொழில் வாழ்க்கையை விட்டுக் கொடுத்து, சமூகம் கைதட்டுவதற்காக அதை ‘சமரசம்’ என்று அழைக்கிறார்கள். காதலுக்காக சமரசம் செய்யலாம், ஆனால் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையும் சூழ்நிலைகளும் மாறக்கூடும். நிதி சுதந்திரம் இன்னும் உங்கள் பொறுப்பு. நான் இதை தாமதமாகக் கற்றிருக்கலாம். ஆனால் இதைப் படிக்கும் ஒருவர் இதை முன்பே கற்றுக்கொள்வார்” என அவர் பதிவு செய்துள்ளார்.
இந்தப் பதிவுக்கு இணையத்தில் லைக்குகளும், ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன. விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு ஆர்த்தி ரவியின் தன்னம்பிக்கை மற்றும் தெளிவான பேச்சு பல பெண்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.
