2026: விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு, ஆர்த்தி ரவி தாய்க்கு வெளியிட்ட உருக்கமான பதிவு வைரல்.!
விவாகரத்து சர்ச்சைக்குள்ளாகி வரும் நடிகை ஆர்த்தி ரவி தனது சமூக ஊடகங்களில் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், 2026 புத்தாண்டை முன்னிட்டு, தனது சிறுவயது புகைப்படத்துடன் அவர் தாய்க்கு உருக்கமான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்துவருகிறது. விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிவுக்கு பிறகு ரவி மோகன் கெனிஷா உடன் நெருக்கமாக இருப்பார், ஆனால் ஆர்த்தி இன்னும் சிங்கிளாக உள்ளார்.
ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்: ஆரவ் மற்றும் அயான். விவாகரத்து சர்ச்சையில் ரவி மோகன் பல இடங்களில் கூறியதாவது, ஆர்த்தி மற்றும் அவரது தாய் அவருக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்கவில்லை என்றும், சம்பள பணத்தை முழுமையாக அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்த்தியின் தாய் சுஜாதாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சூழலில், ஆர்த்தி ரவி தனது சிறுவயது புகைப்படத்துடன் தாய்க்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அவர் பதிவில் குறிப்பிடுகையில்:
“அம்மா, என் கடந்த கால வாழ்க்கையில் நீங்கள் வில்லியாக சித்தரிக்கப்டீர்கள்… ஆனால் நீங்கள் அவமானத்தை விட என் வாழ்க்கைக்க முக்கியத்துவம் கொடுத்தீர்கள். உண்மை கர்மா நிச்சயம் பதில் கொடுக்கும், நீதி நிச்சயம் வெல்லும்.”
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
