2026: டைரக்டர் ரவிபார்கவன் ஏன் மனிதர்களை (Cat)பூனைகளைப் போல் குறுக்கே போக சொல்கிறார் தெரியுமா??

(Cat)பூனைகளைப் போல் குறுக்கே செல்லுங்கள். பூனை குறுக்கே போனா, ‘சகுனம் சரியில்ல’ போற காரியம் விளங்காது.எல்லோரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்!

Facebook
Instagram
YouTube
Twitter

Why cross like cats meaning?

நிறைய விஷயங்கள் (CAT)பூனைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
பசித்தால், காத்திருக்கக்கூடாது! சரி, பூனை… அதற்கு ‘தனக்கு சாப்பாடு வேண்டும்’ என்று சொல்லத் தெரியாது. எழுதிக் காட்டத் தெரியாது. அதற்கு பசிக்கும் போது எங்கு எது கிடைக்கிறதோ, அதை, உடனே ஒரு கை பார்த்து விட வேண்டும்,
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சரி, எப்படி மூடி வைத்திருந்தாலும் தட்டிவிட்டு, உருட்டி தரையோடு தரையாகக் கொட்டி விட்டாலும் கூட நக்கி பசியாற்றி விட்டு போய்க்கொண்டே இருக்கும்!

பூனைகளை கவனித்தீர்கள் என்றால், அப்படி என்னதான் வேலை இருக்குமோ குறுக்க மறுக்க நடந்து கொண்டே இருக்கும்.
காகங்களுக்கும் வீடு அருகில் இருக்கும் உயிர் இனங்களுக்கும் உணவிடும் பழக்கம் எனது மனைவியிடமிருந்து எனக்கு கிடைத்து! சில உயிர் இனங்களை மிக அருகே இருந்து கவனிக்கும் சூழல் உருவானது.

சரி, பூனைக்கு வருவோம். அது குறுக்கும், நெடுக்கும் நடப்பது, ஒருவேளை பசியை உருவாக்கிக் கொள்ளவா? பசியை உருவாக்கி… உணவு இருக்கும் இடம் அறிகிறதா? அறிந்தபின் அதைக் களவாட நடந்தபடியே யோசிக்கிறதா? துணை தேடுகிறதா..?

இன்னொன்றையும் கவனித்தேன். எங்கு மண் கிடைக்கிறதோ அங்கு யாரும் அறியாத வகையில் மிக, மிக ரகசியமாக அக்கம் பக்கம் பார்த்து மலம் கழித்து அதாவது தோண்டி மலம் கழித்து மீண்டும் மண்ணால் மலத்தை மூடிவிடுவது! மனிதர்களைப் போல ரயில்வே டிராக்குகளிலும், முட்புதர்களிலும், கொஞ்சம் ஏமாந்தால் தெருக்களிலும் அப்படியே உட்கார்ந்து மலம், ஜலம் கழிக்கும் அரிய குணம் பூனைகளிடம் இல்லை!
எதிரே அப்பார்ட்மென்ட் இருக்கும், ஜன்னல்கள் திறந்திருக்கும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சுவற்றில் படம் வரைவது போல் யூரினை பாஸ் செய்வது!

‘சிறுநீர் கழிக்காதே’ என்று எழுதியிருப்பார்கள் கரெக்டாக அது மேலேயே அடிப்பது! பாவம் அந்த இடத்துக்காரனும் அனைத்து மதக் கடவுள்களையும் செலவழித்து வரைந்து வைப்பான். ஆனால் இவன் தனக்கு எந்தக் கடவுள் பிடிக்கவில்லையோ அதன் நேரே அடிப்பான். பூனைகள் அப்படி செய்வதில்லை.
நாய்கள் கம்பத்தைப் பார்த்தவுடன் மூத்திரம் போவது போல, சில மனிதர்கள் சுவற்றைப் பார்த்தவுடன் போவார்கள். கால்கள்தான் வித்தியாசம்!

(Cat)பூனையிடம் அபாரமான நேர்த்தி உண்டு! பூனைகள் உறவு கொள்வதை யாரும் பார்க்க முடியாது! ராத்திரி எல்லாம் தூங்க விடாமல் கத்திக் கொண்டே இருக்கும் என்று தெரியும்! கத்துவதுதான் கேட்கும், அதன்பின் நடக்கும் உறவுகளைப் பார்த்ததில்லை. பூனைகள் குட்டி போடுவதைப் பார்க்க முடியாது! நேர்த்தி! திருடுவதை நாம் பார்க்க முடியும். சரி, ஏன் (Cat)பூனைகள் குறுக்கே செல்ல வேண்டும்!?
நாம் ஒரு வீட்டைவிட்டு இறங்கி எப்படி நடக்கிறோம் என்பதை பூனைகள் கவனிக்கின்றது!
‘ஒருவனை அடிக்க வேண்டும்’ என்று ஆக்ரோஷமாக இறங்கும் போது, கால்களில் ஒரு சத்தம் ஒரு அதிர்வு! அதை… பூனைகள் உணர்கிறது!

டூ வீலரையோ, காரையோ எடுத்து முறுக்கிக் கிளம்பும் போது, ஒரு வித்தியாசம் இருப்பதை பூனைகள் உணருகிறது!
காம்ப்பௌன்ட்டை விட்டு இறங்கி நிதானமாக அடி எடுத்து நடந்து பாருங்கள், எந்தப் பூனையும் குறுக்கே பாய்வதில்லை! அந்த நிதானம் எந்த அதிர்வையும் ஏற்படுத்துவது இல்லை. பூனைகளை பீதிக்குள்ளாக்கி குறுக்கே ஓட வைப்பது இல்லை! அதன் பீதி உணர்வே பய உணர்வே… குறுக்கே ஓட வைக்கிறது!

‘போவதைத் தடுத்து விட மாட்டோமா? இவன் தெரிந்தவனாயிற்றே… பாலைக்காய்ச்சி மூடாமல் வைப்பானே… எத்தனைவாட்டி திருடிக் குடித்திருக்கிறோம்.!? இவனைத் தடுத்து விட மாட்டோமா’ – என்று நினைக்கிறதோ..?
தெரு எங்கும் பூனைகள் நடந்தாலும் எல்லாப் பூனைகளும் குறுக்கே பாய்வதில்லை!? மனிதன் இது சகஜம்தானே என்று நினைக்கிறானோ! ஒரு விலங்கு மட்டும் ஏன் குறுக்கே பாய்கிறது!?

எத்தனையோ மனிதர்கள் பூனை குறுக்கே பாய்ந்ததும் திரும்பி வந்து விடுவார்கள் என்பது தெரியும்! தண்ணி குடிப்பார்கள், உட்கார்ந்து தண்ணி குடித்து விட்டு எழும் போது அது ஆத்திரமோ, கோபமோ, வருத்தமோ கொஞ்சம் தணியும்!
சென்ஸிட்டிவானவர்கள் மீண்டும் வெளியில் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள்! வெளியே போவதால் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்கப் பார்க்கின்றன!

அதன் அறிவுக்குட்பட்டு நம்மை ஏதோ ஒரு வகையில் காப்பாற்றுகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா.!?
ஃபோனில் பேசியபடி கோபத்தோடு கிளம்பும் கணவனையோ, உறவுகளையோ தடுக்கிறோமா.!? இல்லை..! மேலும் கோபத்தைத் தூண்டிவிட்டு அனுப்புகிறோம்!
‘அவனை நாசமாக்கு… ஒரே போடு! மண்டை ரெண்டாகப் பிளக்க வேண்டும்!’

கைகலப்பு! முடிவில் கைவிலங்கு மாட்டிக் கொள்வார்கள்! கோபத்தோடு இருப்பவர்களை ஆசுவாசப் படுத்துங்கள்!
‘ஏதோ தெரியாமல் செய்திருப்பான்’ என்று குறுக்கே புகுந்து அவனைச் சாந்தப்படுத்துங்கள்.

அரிவாளோடு போகிறவனை குறுக்கே புகுந்து அறிவால் சாந்தப்படுத்துங்கள்!
கூடுமானவரை அசம்பாவிதங்களைத் தடுக்க குறுக்கே புகுந்து சமாதானப்படுத்துங்கள்!
குறுக்கே புகுந்து திரும்பி வரவைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்துங்கள்! பூனைகள் அதைச் செய்கிறது! மனிதன்.!?

Privacy & Policy
Disclaimer
Contact us
About us