2026: மாறும் மனிதன் மாறா மிருகம் புத்தகத்தில் இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன் என்ன காரணத்திற்காக (Monkey)குரங்குகளை போல உறவுகளை பேணுங்கள் என்று சொல்லியிருக்கிறார் தெரியுமா?
(Monkey)குரங்குகளைப் போல் உறவுகளைப் பேணுங்கள்!
“குரங்குகளைப் போல் உறவுகளைப் பேணுவதா.!? நாங்கள் எல்லாம் பலபடிகள் மேல, கியூவில் நின்று எல்.கே.ஜி சேர்க்கிறோம்.
பெரிய படிப்பில் சேர்க்கிறோம்.
Facebook
Instagram
YouTube
Twitter
கல்யாணம் வரை கொண்டு போய் சேர்க்கிறோம்!”
“எல்லாம் சரி, உங்களைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்களே… அதை எதில் கொண்டு சேர்ப்பது!”
“ஆமால்ல”
‘ஆமால்ல’தான், அவசரப்படாமல் குரங்குகளைக் கொஞ்சம் படிப்போம்!
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, தலக்கோணம் போன்ற விலங்குகள் வாழ் ஸ்தலங்களுக்குச் சென்றீர்கள் என்றால், கார்களில் நிறைய வாழைப் பழங்களை வைத்துக் கொண்டு, (Monkey)குரங்குகளுக்குக் கொடுத்துக் கொண்டே போவார்கள்.
தங்களிடம் இருக்கும் பண்டங்கள், பிஸ்கட், பழம், சாப்பாடு ஏதாவது கொடுப்பார்கள். சில உன்னத இளைஞர்கள் பீர் பாட்டிலாகக் கூட கொடுப்பார்கள்.
பீட்ஸா போன்றவைகள், பிரியாணி போன்றவைகள் கூட்டம் கூட்டாமாக வாங்கிச் சாப்பிடும்! இது தெரிந்த விஷயம்! குட்டிகளை கூடவே கூட்டிக் கொண்டு அலையும்! இதுவும் நாம் பார்த்திருப்போம்!
கொஞ்சம் அதிர்வான நிகழ்வுகளைப் பார்ப்போம்! குரங்குகள் தன் குட்டிகளை மட்டும் அரவணைத்து, அன்பு காட்டி சாப்பிடுவதில்லை! தன் கூட்டத்தோடு இருக்கும் ஒரு இருபது, முப்பது உறவுக் கூட்டங்களையும் கூடவே வைத்துக் கொள்ளும்!
அதற்கு ஒரு பிரச்சனை என்றால்… கூட்டத்தில் இருக்கும் குரங்கிற்குப் பிரச்சனை என்றால்… மொத்தமாக ஒன்று சேர்ந்து உயிரைக் கொடுத்துக் காப்பாற்றும்! கூட்டத்திற்கு தலைமை தாங்கும் மூத்த ஆண் குரங்கு காவல் பணியை எடுத்துக் கொள்ளும்!
அந்தக் கூட்டங்களில் ஒரு ஆண் (Monkey)குரங்கு, ஒரு பெண் (Monkey)குரங்கோடு மட்டும்தான் உறவு கொள்ள முடியும்! ஒரே வயிற்றில் பிறந்தவைகளை அனுமதிப்பது இல்லை!
இங்கு இருக்கும் பெண் (Monkey)குரங்குகளை வட்டமிடும் வேறு குழுவில் உள்ள ஆண் குரங்கை அடித்து விரட்டினாலும்… வெளிப்பார்வைக்கு அடித்து விரட்டுவதாகத் தோன்றலாம். அந்தக் குரங்கோடு மல்லுக்கு நின்று சண்டையிடும்! அந்த ஆண் குரங்கின் பலத்தைத் தெரிந்து கொள்ளும்! தெரிந்து கொண்டு தன் குழுவில் உள்ள பெண்ணோடு சேர சம்மதிக்கும்!
நோஞ்சானிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது! துணைக்கு ஒரு கஷ்டம் என்றால் போராடத் துணிச்சல் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் விட வீட்டோடு மாப்பிளையாக இருக்க வேண்டும்!
அதாவது… தன் குழுவோடு இணைப்பது! ‘மேட்டரை முடித்து விட்டு போயிருச்சுன்னா!?’ போகாது!
காரணம், புதிதாக இணைந்த ஆண் குரங்கை அத்தனை குரங்குகளும் சேர்ந்து நேசித்தல்! புதிதாக உணவுகள் கிடைக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்! புதுப்புது உணவுகளை அறிமுகம் செய்யும்!
பார்த்த இடங்களுக்கு எல்லாம் கூட்டிட்டுப் போய், இது பர்கர், புதிய உணவு பீட்ஸா இது, வட இந்தியக்கார்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று சப்ஜி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்களை எல்லாம் அறிமுகப்படுத்தி உண்ணக் கொடுப்பது!
டின் பீர்கள் கொடுப்பது! குடித்துவிட்டு அதன் மேலேயே சாயும்! இப்படி தன் குழந்தைகளை, தன் உறவுகளை பாதுகாப்பதில் குரங்கிற்கு இணையாக எந்த இனமும் இல்லை! அது ஆஜானுபாகுவாக இருக்கும் கொரில்லா வகை குரங்குகளோ சாதாரண குரங்குகளோ!
இவைகளில் சிம்பான்சி என்ற ஒரு வகை உண்டு! அதன் நடவடிக்கை அத்தனையும் மனிதனை ஒட்டியிருக்கும்! பேச மட்டும் தான் தெரியாது! அவைகளில்தான் பாசம் அதிகம்!
தலைமைக் குரங்கு, குட்டிகளுக்கு வாழ்வாதாரங்களுக்கான அத்தனை பாடங்களையும் கற்றுக் கொடுக்கும்!
தூக்கி அதாள பாதாளத்தில் வீசிவிட்டு போராடி வர வைக்கும்! ஒரு இரண்டு மணிநேரம் அவகாசம் கொடுக்கும். வரவில்லை என்று தோன்றினால் கூட்டத்தோடு பாய்ந்து விடும்! குரல்களை எழுப்பி எழுப்பி, இருப்பிடத்தை அறிந்து கொண்டு, தூக்கிக் கொண்டு வந்து விடும்! வந்து இக்கட்டுக்களிலிருந்து தப்பிக்கப் பாடம் நடத்தும்!
ஒரு குட்டி விபத்தில் இறந்து விட்டால்… அது எலும்புக் கூடாக மாறும்வரை பக்கத்திலயே வைத்திருக்கும்!
கர்ப்ப காலங்களில் பெண் (Monkey)குரங்குகளை மடிமீது வைத்துத் தாங்கும்! காப்பிக் கொட்டைகள், அரியவகை இலுப்பைப் பூக்கள், அரிதாகப் பூக்கும் குறிஞ்சிப் பூக்கள், அரியவகைத் தாவரங்களை, மூலிகைகளை உண்ணச் சொல்லி, அந்த இடங்களுக்கு எல்லாம் அழைத்துப் போய் முற்றிலுமாக மூலிகை உணவுகளை சாப்பிடச் சொல்லி – வயிற்றில் இருக்கும் குட்டி ஆரோக்யமாக வளர வழிசெய்யும்!
கொரில்லாக்கள் தனது துணைக்கு ஒரு ஆபத்து என்றால், ‘நீயா நானா? வா பார்த்து விடலாம்’ என்று சாகும் வரை ஒன்றோடு ஒன்று மோதும்! மரணத் தாக்குதல்! கடைசி மூச்சு இருக்கும் வரை பலத்தைப் பிரயோகிக்கும்!
ஒருமுறை கர்ப்பம் ஆகும் கொரில்லா, அடுத்தமுறை கர்ப்பம் ஆவதற்கு நீண்ட காலங்கள் எடுத்துக் கொள்ளும்! நீண்ட காலங்கள் எடுத்து ஒரு ஆண் துணையைத் தேடும்! பழைய கணவனை அருகே அண்ட விடாது!
‘அடுத்து பிறக்கும் குட்டி இன்னும் பலவானாக இருக்க வேண்டும். போராடும் வல்லமை படைத்தவனாக இருக்க வேண்டும்!’ என்று இன்னும் பலமுள்ள கணவனைத் தேடிக் கொள்ளும்!
இதற்காக தன்னை பலமுள்ள ஆணாகக் காட்டிக் கொள்ள ஆக்ரோஷமாக மார்பில் அடித்து, முந்தைய கணவன்களோடு போராடும்! ஒருவேளை முந்தைய கணவன் ஜெயித்து விட்டால், அந்தக் கணவனை சேர்த்துக் கொள்ளும்! ‘அவனை ஜெயித்துவிட்டு வாடா’ என்று கூறுவதாகும்!
உறவுகளைப் பேணுவதில் இவைகளைப் போல் வேறு எந்த மிருகத்திடமும் காண இயலாது!
குறிப்பாக ஆப்பிரிக்கக் காடுகளில் உள்ள குரங்கு இனங்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் உறவுக்காகப் போராடுகிறது!
படிக்க வைப்பதும், வசதிகளைப் பெற்றுத் தருவதிலும் பேணுதல் கணக்கில் வராது!
அந்தக் குழந்தை சமூகத்திற்கும், உறவுகளுக்கும், நம்பிக்கையானவர்கள் ஆக பாதுகாவலர்கள் ஆக, தாய், தந்தையர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்காமல் எல்லோரையும் பேணுகிறவர்களாக அவன் வளர வேண்டும். அதற்கு நீங்கள் உறவுகளைப் பேண வேண்டும்!
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே!
குரங்குகளைப் போல் உறவுகளைப் பேண வேண்டும்!
