2026: கலைவாணர் NSK பற்றிபலரும் அறிந்திடாத ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?? – பொம்மைகளும் உண்மைகளும் புத்தகத்திலிருந்து இயக்குனர் ரவிபார்கவன்.!

NSK பற்றிபலரும் அறிந்திடாத ரகசியங்கள்

ஒரு புறம் தன் கவர்ச்சிகரமான அழகால், தனது வசீகர குரலால் பாகவதர் தமிழ்நாட்டு ஆண் பெண்களை கட்டிப் போட்டுக் கொண்டிருக்க… இந்தப்புறம் பி.யூ.சின்னப்பா, எம்.கே.ராதா, ரஞ்சன் போன்றவர்கள் வாளோடு படப்பிடிப்பிற்கு வந்தார்கள்.
பாகவதருக்கு வாள் எல்லாம் சரிப்பட்டு வரவில்லை.

Facebook
Instagram
YouTube
Twitter

NSK பற்றிபலரும் அறிந்திடாத ரகசியங்கள்

இவர்கள் திரைப்படத்தில் வாளை சுழட்டுவாரகள். கனங்… கனங்… என்று வாள் உண்டாக்கும் சத்தத்தில் ரசிகன் சொக்கிப் போனான் ‘இவன்தான் வீரன்’ என்று ஒரு கூட்டம் ஆர்ப்பரித்தது.

இதே காலகட்டத்தில் என்.எஸ்.கே தனது நவீன நகைச்சுவையால் தியேட்டரை தெறிக்க விட்டார். வரும் பணத்தை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கினார்.வள்ளல் பெயருக்கு எம்.ஜி.ஆரின் முன்னோடி. எம்.ஜி.ஆரின் ரோல்மாடல். வறுமை கால கட்டத்தில் கூட வீட்டில் இருக்கும் கடைசி வெள்ளி டம்ளர்களைக் கூட தானமாக கொடுத்தார்.

NSK பற்றிபலரும் அறிந்திடாத ரகசியங்கள்

என்.எஸ்.கே நாற்பத்தியொன்பது வயதில் இறந்த போது டி.ஏ.மதுரம் வீதிக்கு வந்தார். சாராயக்கடை வாசல்களில் ‘நான் மதுரம், என்.எஸ்.கே மனைவி ஒருகிளாஸ் சாராயம் குடேன்.’ கையேந்தி குடிக்க ஆரம்பித்தார். ‘நடிகை குடிப்பாள்’ என்று பொதுமக்களுக்கு உணர்த்திய முதல் சினிமா பிரபலம்!

எம்.கே.ராதா, பி.யூசின்னப்பா, ரஞ்சன் போன்றவர்கள் குடிப்பதற்கு லைசென்ஸ் வங்கி வைத்துக் கொண்டு விடிய விடிய குடித்தது யாருக்கும் தெரியாது. நடிக்க முடியாத அளவிற்கு தள்ளாடி வந்து நின்று, அரச உடை அணிந்து கையில் வாளை கொடுத்து, சண்டைப் பயிற்சியாளர் அவரின் கையைப் பிடித்துக் கொண்டு வாளைச் சுழற்றியது, அப்போதைய அப்பாவி ரசிகனுக்குத் தெரியாது. அப்பாவி ரசிகனைப் பொறுத்தவரை நடிகன் என்பவன் தேவதூதன். ரட்சகன். மீட்பன்.

NSK பற்றிபலரும் அறிந்திடாத ரகசியங்கள்

இவர்களின் வண்டவாளங்களை ஒருவன் கிழித்தான். தமிழில் தோன்றிய முதல் மஞ்சள் பத்திரிக்கை இந்து நேசன்.
இந்துநேசன் வாங்கிப் படிக்க ஆலாய்ப் பறந்தார்கள். லட்சுமிகாந்தன் மூலம் நடிகர்களின் இன்னொரு முகம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. பதறிப் போனார்கள் மூன்று சூப்பர்ஸ்டார்களும் பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கே துடித்துப் போனார்கள். ‘நாம் கடவுள் அல்லவா, கடவுளைப் பற்றி ஒருவன் தப்பாக எழுதுவதா’ என்று வெகுண்டார்கள்.

ஒருநாள் கைரிக்க்ஷாவில் வந்து கொண்டிருந்த லட்சுமிகாந்தனை யாரோ கத்தியால் குத்திக் கொலை செய்தார்கள். கொலை செய்பவர்கள் மூடர்கள். அறிவற்றவர்கள் என்பதற்கு முதல் உதாரணம் அந்த முதல் மூன்று சூப்பர்ஸ்டார்களும்தான். எப்படியோ மாட்டிக் கொண்டார்கள்.சிறை சென்றாகள்.

NSK பற்றிபலரும் அறிந்திடாத ரகசியங்கள்

ரசிகன் குழம்பிப் போனான். அவதாரப் புருஷர்கள் கொலை செய்வார்களா? “ச்ச…ச்சே… ச்சச்சே….” என்று பேசினார்கள்.

அப்போது ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் இல்லை. அதனால் படித்த ஏ-கிளாஸ் ரசிகனுக்கு மட்டும், இவர்கள் கொலைகாரர்கள் என்பதை தெரிந்தார்கள். பாமரனுக்கு எதுவும் விளங்கவில்லை, பொய்யாகப் பிடித்துப் போட்டு விட்டார்கள். அப்போதே அவன் நம்ப ஆரம்பித்தான், “ச்சே…. அவர்கள் நல்லவர்கள்… இருக்காது.” இரு காதுகளையும் மூடினார்கள்.

இந்த சூப்பர்ஸ்டார்கள் அப்படியே அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்க.. “இல்லை இல்லை நான் தான் உண்மையான அவதாரப்புருஷன்” என்று, ஒரு சூப்பர்ஸ்டார் உருவாகிக் கொண்டிருந்தார்.

Privacy & Policy
Disclaimer
Contact us
About us