2026: மாறும் மனிதன் – மாறா மிருகம்.. (Buffalo) எருமையைப் போல் அமைதியாக இருங்கள்.. இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன் இப்படி சொல்ல என்ன காரணம் தெரியுமா?

(Buffalo)எருமையின் சுபாவமே அதுதாங்க, உங்களுக்கும் தெரியும்! ஆனால் (Buffalo)எருமைகள் எப்படி பொறுமையாக இருக்கிறது.!?

Facebook
Instagram
YouTube
Twitter

ஈ மொய்த்தால் காதுகளால் விரட்டும், வால்களால் விரட்டும், அது அசைந்து கொடுத்துப் பார்த்து இருக்கிறீர்களா?
உலகிலேயே ஆடுகள் முகம், எருமையின் முகம் மட்டும்தான் எந்த ரியாக்க்ஷனையும் காட்டுவது இல்லை!
மிக அருகே இருந்து கவனித்த போது… ஆடுகள் கூட சில நேரங்களில், நொடிப் பொழுதில் முகத்தில் பயத்தைக் காட்டும்! கேமராவில் கூட படம் பிடிக்க இயலாது! படம் பிடிக்க, நாட்கணக்கில், வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டும்!

அதே நாட்கணக்கில் வாரக்கணக்கில் (Buffalo)எருமையை கவனித்த போது, ஒரு சிறு குச்சியால் அடிக்க ஓங்கிய போதும் எந்த ரியாக்க்ஷனையும் காட்டாமல் தலையை மட்டும் கொஞ்சம் திருப்பிக் கொண்டது.
மிகப் பொறுமையாகப் பார்த்தது. அதை அப்படியே மேய்த்துக் கொண்டு போய், தண்ணீரில் இறக்கிய போதும் மகிழ்ச்சியைக் காட்டவில்ல!
‘ஓ… தண்ணீரில் இறங்க வேண்டுமா…’
இறங்கிக் கொள்கிறேன்! மூச்சு விடுவதற்கு ஏதுவாக முகத்தை மட்டும் வெளியே வைத்துக் கொண்டது. ஏழு மணிநேரம், எட்டு மணிநேரம் ஆனாலும் மிகப் பொறுமையாக தண்ணீரிலேயே மூழ்கியிருந்தது!

பார்க்கும்படி இலை தழைகளை எடுத்து நீட்டினேன், ஆடுகளாக இருந்தால் எழுந்து ஓடி வரும்! எருமை இலை தழைகளை பார்த்ததோடு சரி, அமைதியாக இருந்தது!
பின், குளத்தில் இறங்கி பிடித்து வெளியே இழுத்ததும், அடம் எல்லாம் பிடிக்கவில்லை பொறுமையாக எழுந்து வெளியில் வந்து விடும்! இலை தழைகளை எடுத்து வாய் அருகே கொண்டு செல்ல வேண்டும்.

‘ஓ சாப்பிடச் சொல்கிறாயா சாப்பிடுகிறேன்’
வாங்கி உண்ணும்! எருமைக்கு வாயில் கொடுக்க வேண்டும்! எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தால் தின்று கொண்டே இருக்கும்! கயிறைப் பிடித்து இழுத்தால் பின்னால் வந்து விடும்!
‘இவ்வளவு நல்லவனாடா நீ’ என்று கேட்கத் தோன்றும்!
வாலுக்கு அருகே சற்று மேலே இரண்டுதட்டு தட்டி லேசாக ஆட்டினால், ‘உட்காரச் சொல்கிறாயா? சரி, உட்காருகிறேன்’ உட்கார்ந்து விடும்!

அவ்வளவு நிதானம்! அவ்வளவு பொறுமை! அவ்வளவு அமைதி! எதைப் பற்றியும் அலட்டிக் கொள்வது இல்லை!
மழை பெய்கிற காலங்களில் ஆடுகள், நாய், பூனை எல்லாமே நனையாமல் தப்பிக்கும். எங்காவது போய் ஒதுங்கிக் கொள்ளும்! எருமைகளுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலைகள் இல்லை! போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!
போதும் என்று நாம் சொல்லும் போது, ஒன்று நமக்கு அது ஒத்துக் கொள்ளாமல் இருக்கும்!
எருமைமாடு எது பிடித்தாலும் அலட்டிக் கொள்வதில்லை! இல்லை என்றாலும் கவலைப் படுவதில்லை!

சிலர் இருக்கிறார்கள்! ‘ஹலோ ஒரு கப் பாயசம்’ அது உள்ளே போவதற்குள் இன்னொரு கப் என்பார்கள்! ‘மாப்பிளை வீட்டார் நல்லா கவனி!’
பாயசத்தைப் பார்த்ததே இல்லையா? இனி கல்யாண விசேஷம் வரவே வராதா? சரி, அப்படியே வரவில்லை என்றாலும், வீட்டில் பாயசத்தை காய்ச்சித் தர மாட்டார்களா? அந்தக் கல்யாண வீட்டில் மூச்சு முட்ட பிடித்து விட வேண்டியது!
‘நூறு ருபாய் மொய் செய்து இருக்கிறோம்… சாப்பிட வேண்டாமா? நூறு ருபாய்க்கு எந்த ஹோட்டலில்டா ஏழு, எட்டு வகைக் கூட்டு, பொரியல், பாயசம் கொடுப்பார்கள்!

இதுல பஃபே எல்லாம் வந்துருச்சு! தெருத் தெருவா தட்டை எடுத்துக்கிட்டுப் போய், என்னென்ன அயிட்டம் இருக்கோ அது எல்லாம் தட்டுல போட்டு பிச்சைக்காரனை மாதிரியே நின்று கொண்டு தின்பது!
இந்த உலகத்தில் பஃபே போல உறவுகளைக் கேவலப்படுத்தும் ஒரு விருந்து கிடையாது!
கல்யாண வீட்டில் பந்தியில் கீழே அமர்ந்து சாப்பிடுவது, குனிந்து குனிந்து சாம்பார் ஊற்றுவது! அதன் பின் டேபிள் பெஞ்சுகளில் அமர்ந்து சாப்பிட்டோம்! இப்போது தட்டுக்களை எடுத்துக் கொண்டு கையேந்தி ‘அம்மா தாயே’ என்று சொல்லாமல் தட்டுக்களை நிரப்பிக் கொண்டு ஒரு மூலையில் நின்று தின்பது.
இது என்ன நாகரீகம், இது நாகரீகமா.!? கல்யாணத்திற்கு வர வைத்து விட்டு ‘கையேந்தி தின்னுட்டுப் போடா’ என்பது எவ்வளவு பெரிய அசிங்கம்!
கூடுமானவரை உங்கள் இல்லத்து நிகழ்ச்சிகளில் பஃபே சிஸ்‌டத்தைத் தவிர்க்க முயலுங்கள். அமர வைத்து உணவு கொடுங்கள்.

மீண்டும் (Buffalo)எருமைக்கு வருவோம்! தொழுவத்திற்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தால் எருமைகள் உட்கார்ந்து விடும்! பசுமாடுகள், காளைகள் எது கிடைத்தாலும் தின்று கொண்டே இருக்கும்! பின் அசைபோடும்! எருமைமாடுகளுக்கு அதன் முன்பு உணவை வைத்தால் மட்டுமே பொறுமையாக உண்ணும்!
அந்த நிதானம்தான்… அந்த பொறுமைதான்… அந்த அமைதிதான்… எருமைகளை ஏர் பூட்டவோ, வண்டிகளில் பூட்டவோ, சுமைகளைத் தூக்கிக் கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை!

எந்த மாட்டு வண்டிகளிலாவது (Buffalo)எருமைகளைப் பூட்டிப் பார்த்து இருக்கிறீர்களா? வடபழனியில் இருந்து தி.நகர் போவதற்கு ஒரு மாதமாகும்!
காளைகள் அப்படி இல்லை, ரெண்டு போடு போட்டால் நாலுகால் பாய்ச்சலில் ஓடும்!
நிதானமாக இருப்பவர்களுக்கு சுமைகளோ, சோதனைகளோ வராது.

எதையும் பொறுமையாக டீல் செய்பவர்களுக்கு துன்பங்கள் வராது.
‘கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான்.’
எருமைகளின் நிதானத்தைக் கடைப்பிடித்து துன்பங்களின்றி வாழ்வோம்.

Privacy & Policy
Disclaimer
Contact us
About us