2026: (Snake)பாம்புகளைப் போல் சினம் கொள்ளுங்கள்.! இயக்குனர் & எழுத்தாளர் ரவிபார்கவன் ஏன் இப்படி சொல்கிறார் தெரியுமா?
‘அது என்ன (Snake)பாம்புகளைப் போல் சினம் கொள்வது.!? சினம் கொள்ளச் சொல்லலாமா?’
ஏன் சினம் கொள்ளக்கூடாது!? ஔவைப்பாட்டி, ‘நையப்புடை’ என்கிறார்!
‘சிறுமை கண்டு பொங்குவீர்’ என முண்டாசுக் கவிஞன் சொல்கிறார்.
Facebook
Instagram
YouTube
Twitter
இஸ்லாமிய நூல்களை நான் படித்த போது, திருக்குரானில் அல்லாஹ் இப்படி சொல்கிறார்,
‘எங்காவது அநியாயம் நடந்தால், முதலில் வாயால் தடு, அதற்கும் உடன்படவில்லை என்றால் கைகளால் தடு என்கிறார். அதாவது ‘அடித்து விரட்டு’ என்பதன் பொருள். அல்லாஹ் என்னும் இறைவன் ‘வாயால் தடு இல்லையேல் கைகளால் தாக்கு’ என்கிறான்!
விவலியத்தில் ஈஷா நபி என்கிற ஏசுநாதர் தேவாலயத்தை வியாபாரத் தலமாக மாற்றுவோரை சவுக்கால் அடித்து விரட்டி இருக்கிறார்!
முகமதுநபி அவர்களும் இஸ்லாத்தைக் கட்டமைத்த போது வாள் முனையில் அதை சாதித்துள்ளார். அதாவது, அதன் பெயர் போர்தான்! தாக்குதல்களைத் தடுப்பது மிஞ்சினால் கொலை செய்வது!
உலகப்போர்களை எடுத்துக் கொண்டால், முகமது நபிகள் செய்த போரில்தான் பலி எண்ணிக்கை மிகக்குறைவு!
(Snake)பாம்புகள் தேடிப்போய் சினம் கொள்வதில்லை. நாம் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது பின்னாலயே சைலன்டாக ஓடிவந்து கடிக்கும் நாய்கள்!
சில நாய்கள்… கால் கிலோ சதையையே எடுத்து விடும்!
எல்லா ஜீவராசிகளும் கோபம் வந்தால் மனிதனை மிக வலிமையோடு தாக்கும்.
மனிதனைத் தேடிவந்து தாக்காத ஒரே உயிரினம் (Snake)பாம்பு என்று சொல்லலாம். ஆடு, மாடுகளை விட்டு விடுங்கள்.
பாம்புகள் போல் ஏன் சினம் கொள்ளவேண்டும் என்ற விவாதம் வந்த போது, கடும் விஷம் கொண்ட நூற்றி இருபது வகை பாம்புகள் உள்ளதை அறிய முடிந்தது!
எவ்வளவு கடும் கோபம் கொண்ட பாம்புகளாக இருந்தாலும் தேடி வந்து தாக்குவதில்லை! உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சினம் கொள்கிறது! அது அருகில் எலிகள் செல்லாத வரை பாம்புகள்… தானுண்டு என்று இருக்கும்!
சட்டையைக் கழட்டினமா போட்டமா, உரிச்சமா ஏதாவது தின்பதற்கு எலிகள் கிடைத்ததா..! அப்புறம் பாதுகாப்பான இடம் போய் பதுங்கிக் கொள்ளும்!
மனிதர்கள் அப்படி இருக்கமாட்டார்கள்.
நாய் படுத்துக் கொண்டு இருக்கும் போதே, எங்கயோ சென்று கொண்டு இருக்கும் மனிதன் ஒரு கல்லை எடுத்து வீசுவான். அது ‘வீல்’ என்று கத்தி ஓடும்.
பைக்கில் போய்க் கொண்டு இருப்பான் பெண்ணின் பின்புறம் ஒரு தட்டு தட்டிச் செல்வான்.
எங்கோ சண்டை நடந்து கொண்டிருக்கும்! என்ன ஏதென்று தெரியாமல் உள்ளே புகுந்து சம்பந்தமே இல்லாமல் வீரத்தைக் காட்டுவான், இது மனித குணம்!
சொத்துக்காக கொலைத் தாக்குதல், காதலுக்காகத் தாக்குதல், மனைவி பிள்ளைகளைத் தாக்குதல். பெண்ணாசை, மண்ணாசை, மத ஆசை, ஜாதி ஆசை இவைகளுக்காகத் தாக்குதல், தன்னை வலியவனாகக் காட்டிக் கொள்ளத் தாக்குவது!
இதனால் குறைந்தது ஒருவாரம் தூக்கம் கெடும்! அல்லது ஆயுள் தண்டனை என்ற பெயரில் வாழ்நாள் முழுவதும் தூக்கம் கெடும்!!
ஒரு சில அரசியல் தலைவர்களை நண்பர்களுடன் சந்தித்து உரையாடும்போது, அவர்கள் பேசியது,
‘அச்சுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! அச்சுறுத்தினால் மட்டுமே எதிர்க்கட்சியும், எனது தொண்டர்களும் கூட பயப்படுவார்கள்!’
யாரையோ பயம் காட்ட, யார் யாரையோ நடுங்க வைக்க அந்தத் தலைவர் அராஜகம் செய்கிறாராம். அந்தத் தலைவரால் பத்து ரௌடிகள் இல்லாமல் கோவிலுக்குக் கூடப் போகமுடியாது!
எங்கு தேவையோ, எப்போது தேவையோ, ‘வேறு வழியில்லை’ என்கிறபோது, ‘இனி உயிர் பிழைத்தே ஆக வேண்டும்’ என்கிற கட்டாயத்தின் போது சினம் கொள்ளுங்கள்…
(Snake)பாம்புகளைப் போல!!
