2026: புலியை போல பசித்திருங்கள் என்று டைரக்டர் Ravi Bhargavan சொல்வதற்கு பின்னால் உள்ள சீக்ரெட் என்ன தெரியுமா?

Ravi Bhargavan – புலிகளைப் போல் பசித்திருங்கள்.!

புலி எப்போது பசியாயிருக்கும்..? நினைத்ததை இழுத்துப் போட்டு அடித்து தின்கிற வேலை எல்லாம் கிடையாது! புலிகளுக்கு சுத்தமாக வயிறு காலியாகி பசிக்க வேண்டும். பசித்தால்தான் இரைகளின் அருமை தெரியும்!

Facebook
Instagram
YouTube
Twitter

சிறுத்தைகள் போல் புலிகளால் நீண்ட தூரம் ஓட முடியாது. காரணம், களைத்து விடும். அதற்கும் காரணம் பசி!
விலங்கு இனங்களில் புலிகளுக்கு மரியாதை அதிகம். சிங்கத்தை விட மரியாதை அதிகம்! கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

வேங்கை என்று பெயர் உண்டு! வேங்கை… வேட்கை என்பதின் இன்னொரு பெயர்!
வேட்கை என்றால் அவா, ஆவல், ஆசை, தேவை, அவசியம், அத்தியாவசியம் இப்படி பல பொருட்கள் உண்டு.

புலிகளுக்கு எப்போது வேட்கை அதிகமாகுமோ அப்போது இரை தேடும்! உடற்பசி என்றால் அப்போதுதான் இணைதேடும்! எதுவாகினும் அதற்குப் பசிக்க வேண்டும்! பசித்த பின்புதான் புசிக்க வேண்டும்.

Ravi Bhargavan – புலிகளைப் போல் பசித்திருங்கள்.!

காலையில் ஒரு சிலர் இருக்கிறார்கள். பலரும் இருக்கிறார்கள்!
“இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை அப்படியே கொஞ்சம் குடல் கறி செஞ்சுரு! குடல் கறி இல்லேன்னா தலக்கறி வாங்கி பண்ணீரு”
“சும்மாதான இருக்கீங்க போய் வாங்கிட்டு வாங்களேன்”
அப்படியே டவுசரை மாட்டிட்டு கறிக்கடை, கோழிக்கடைக்குப் போய் ஆர்டர் குடுத்துட்டு, மீன் விக்கற பக்கமா உள்ள போவான். கெளுத்தி மீனைப் பார்ப்பான், ஃபோனைப் போட்டு ‘கெளுத்தி சூப்பரா இருக்கு வஞ்சிரம்கூட ஃபிரஷ்ஷா’ இருக்கும்பான்.

குடல்கறி வாங்க வந்தவன் தலக்கறி, மீனு, கோழின்னு மொத்தமா வாங்கிட்டு வந்து சமைக்க வைச்சிருவான்.
மதியம் எல்லாத்தையும் ஃபுல் கட்டு கட்டிட்டு! “அலமேலு நெஞ்சு கொஞ்சம் எரிச்சலா இருக்கு சோடா எடு” என்று சோடாவை குடித்தபடியே
“இன்னும் பத்து நாளைக்கு நான்வெஜ் கிடையாது தொடக்கூடாது” என்பான்.
அவளுக்குத் தெரியும் நைட்டே மறுபடியும் கேட்பான்னு!
நைட்டு சாப்பிடும்போது “அலமேலு தோசைக்கு அந்த சிக்கன் குழம்பு நல்லா இருக்கும் கொஞ்சம் எடேன்” என்பான்.

Ravi Bhargavan – புலிகளைப் போல் பசித்திருங்கள்.!

அப்புறம் காலையில, “அலமேலு இந்த மீன் குழம்பை ஒரு நாள் வைச்சு அடுத்த நாள் சாப்பிட்டா அதோட டேஸ்ட்டே தனி கொஞ்சம் அதையும் பாக்ஸ்ல போடு” என்பான்!

சிலருக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் நான்வெஜ் வேண்டும். ‘ஞாயிற்றுக்கிழமை என்றால் நான்வெஜ் உண்ண வேண்டும்’ என்பதை நாம் உருவாக்கிக் கொண்டோம்.

உண்மையைச் சொன்னால்… சற்று யோசித்துப் பாருங்கள் அது கறியோ, மீனோ, சிக்கனோ வெறும் தண்ணீரில் உப்புப் போட்டு சமைத்து எந்த மசாலாவும் கலக்காமல் சாப்பிட்டுப் பாருங்கள் ‘சப்’பென்று இருக்கும்!
மூன்று கறிகளிலும் எந்த வித்தியாசமும் தெரியாது!
ஆக, உடன் சேரும் மசாலாக்களால்தான் ருசி. அதே மசாலாக்களில் காய்கறிகளைச் சேர்த்துப் பாருங்கள் எந்த வித்தியாசமும் தெரியாது!
ஆனால் நாம் அப்படி பழகி விட்டோம். அந்த கறிவகைகளை சாப்பிட்டால்தான் ஒரு திருப்தி! சரி, அது ஆசை சம்பந்தப்பட்டது.
ஆனால் நம்மில் எத்தனை பேர் பசி எடுத்த பின்பு சாப்பிடுகிறோம்? இரவு உணவு ஜீரிணிக்கிறதோ இல்லையோ! காலை எட்டரை மணிக்கு டிஃபன் சாப்பிட்டாக வேண்டும். நல்ல பழக்கம்தான் ஆனால் இரவு உணவு உங்களுக்கு ஜீரணமாகிவிட்டதா?

நண்பர்களே… உறுதியிலும் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். பசிக்காமல் சாப்பிடும் ஒவ்வொரு பிடி உணவிற்கும் நீங்கள்… மாத்திரை சாப்பிட்டாக வேண்டும்! நீங்கள் ஆஸ்பத்திரியில் படுத்திருக்க வேண்டும்!

உணவு எங்கும் ஓடிப்போய் விடாது! பசித்த பின் சாப்பிட்டால் என்ன குறைந்து விடப் போகிறது… மயங்கி விழுந்து விடுவாயா ‘புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ – ஒரு உதாரணம்.

Ravi Bhargavan – புலிகளைப் போல் பசித்திருங்கள்.!

ஆனால்… பசித்தால் ஒரு மீனைக் கூட தொடாது. மிருகங்களில் அப்படியே மாறுபட்டது புலி!
அதற்கு பசியின் அருமை தெரிய வேண்டும். விரட்டிப் பிடித்து கஷ்டப்பட வேண்டும்.
சில காட்டுமாடுகள் எட்டி உதைத்து கூட்டமாகச் சேர்ந்து துவம்சம் செய்துவிடும். ஆனால் சுற்றி நிற்கும் ஐந்து புலிகளும் வேட்கையோடு காத்திருக்கும்!
இல்ல… வேறு வழியில்லை எதையாவது பிடித்து சாப்பிட்டால்தான் உண்டு என்றால் கடுமையாகப் போராடும்.

சிங்கங்களைப் பார்த்திருப்பீர்கள் நான்கு ஐந்து பெண் சிங்கங்கள் போராடும். ஒரு ஆண் சிங்கம் உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும். ‘இதுக்குமேல இந்த பொம்பளைங்கள நம்பி பிரயோஜனம் இல்லை’ என்று முடிவு எடுக்கும் போது, எழுந்து ஒரே அடியில் சாய்த்து விடும்.!

Ravi Bhargavan – புலிகளைப் போல் பசித்திருங்கள்.!

கொஞ்சம் பசித்தாலும் சிங்கங்கள் வேட்டையாடும். காரணம் அதன் வலிமையான தோள்கள், முடி, ஆஜானுபாகுவான உடம்பு! அதற்குத் தேவையான எனர்ஜி வேண்டும்! வகை தொகை இல்லாமல் சாப்பிட வேண்டும்!
புலிகளில் கொழுத்த புலிகளைப் பார்த்திருக்கிறீர்களா? முடியாது! புலிகளின் வயிறு ஒட்டியேதான் இருக்கும்! வேட்டையாட முடியாத சூழலில் வயதான சிங்கங்கள், பிற சிங்கங்களால் ஒதுக்கப்படும். பட்டினி கிடந்து செத்துவிடும்.

ஆனால் கிழட்டுப் புலியாக இருந்தாலும் சாகும் வரை வேட்டையாடும். புலிகள் பூனைகளைவிட தங்கள் உடம்பை சுத்தப்படுத்தும், நக்கிக் கொண்டே இருக்கும். சிறு அழுக்கு உடம்பில் படியக்கூடாது. அழுக்கான புலிகளைப் பார்த்து இருக்கிறீர்களா?

சிங்கங்கள் சேற்றில் புரண்டு அப்படியே அலையும் அதற்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால் புலிகளுக்கு தங்கள் உட்புற உடலையோ, வெளிப்புற உடலையோ பேணிப் பாதுகாக்க வேண்டும்.

Ravi Bhargavan – புலிகளைப் போல் பசித்திருங்கள்.!

‘வேங்கை மார்பன்’ வேங்கை போல் மார்பு படைத்தவன். வயிறு ஒட்டி இருப்பதும் மார்புகள் விரிந்தும் இருப்பது புலிகளின் சிறப்பு!
‘விடுதலைச் சிங்கங்கள்’
‘விடுதலை யானைகள்’
என்றெல்லாம் இல்லை.
இனப்போராளிகள் பெயர் வைத்து தங்களைப் புலிகள் என்று காட்டிக் கொண்டார்கள்.
காரணம் ஏன் தெரியுமா? விடுதலை வேட்கை!

வேட்கையோடு அலைவது புலிகள் மட்டுமே! தாகத்தோடு அலைவது புலிகள் மட்டுமே!
சிங்கங்களை வேட்டையாடலாம், சிறுத்தைகளை வேட்டையாடலாம்.
வெறியும், வேட்கையும் கொண்ட புலிகளை வேட்டையாட முடியாது!

அப்படியே வேட்டையாட வேண்டும் என்றால் பலரும் சேர்ந்து சூது செய்ய வேண்டும்.
சூதுதான் புலிகளை வென்றது!
வீரத்தில் புலிகளை வெல்ல இயலாது.

மனிதப்புலிகள் காட்டுப் புலிகளைப் போலவே இருந்தார்கள்.
காட்டுப் புலிகளைப் போலவே உண்டார்கள்.
மிகப்பெரிய இராணுவத்தினரை கண்ணில் விரல்விட்டு ஆட்டினார்கள்.
பசித்திருப்போம். பசித்தால் மட்டுமே புசிப்போம் புலிகளைப்போல…

Privacy & Policy
Disclaimer
Contact us
About us