2026: மாறும் மனிதன் மாறா மிருகம் – இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan ஏன் திடீரென்றுமாடு மாதிரி தின்னுங்கள் அது பசுமாடோ, காளைமாடோ, எருமை மாடோ! என்று சொல்ல காரணம் என்ன தெரியுமா?
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
அது என்னங்க மாடு மாதிரி திங்கணும்! நாங்க எல்லாம் உயர்ந்த மனித ரத்தம்! நாய் மாதிரி தூங்கச் சொல்றீங்க, மாடுமாதிரி திங்கச் சொல்றீங்க!?
அவசரப்படாதீர்கள் மக்களே…
Facebook
Instagram
YouTube
Twitter
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
மாடுமாதிரி திங்கனும் இல்லேன்னா மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடணும்!
“அப்படியா சொல்றீங்க! சொல்லுங்க படிக்கலாம்.”
கொலப்பசி வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனேயே, “ஏய் இன்னும் சமையல் ரெடி பண்ணலையா? மணி ரெண்டு ஆகப்போகுது!” கத்துவது.
குய்யோ முய்யோ என்று குமுறுவது! “ஒரு மனுஷன் வருவான்னு தெரியாது” என்று டமால் டுமீல் என்று போட்டு உடைப்பது!
“ஏங்க எனக்கென்ன நாலு காலு நாலு கையா இருக்கு செய்யறதுக்கு”
டேபிளில் உணவு வைக்கப்பட்டவுடன் ஒரு யுத்தமே நடக்கும்! சோறோடு கூட்டு சாம்பார் பொரியல் அப்பளம் என்றிருக்கும்.
அந்த அயிட்டங்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு உள்ளே போகும்.
நான்வெஜ் என்றால் மீனு, கோழி எல்லாவற்றையும் சோற்றுடன் அப்படியே உள்ளே தள்ளுவது!
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
ஒரு அரைமணிநேரம் பசியைத் தாங்க முடியவில்லை!
அவ்வளவு பெரிய உருவம் மாடு! அதுக்கு எப்படி பசிக்கணும்!?
கறியே கண்டிராத நாய், கிடைத்ததும் வாயில் நீர் ஒழுக அலைபாய்ந்து தட்டழியும் {பரபரக்கும்}
மாடு அப்படியில்லை! கொலைப்பசியாக இருந்தாலும் புற்களையோ, புண்ணாக்கு, தவிடுகளையோ வைத்து விட்டு அவிழ்த்து விடுவார்கள் மெதுவாக வரும்.
எந்த ஒரு மாடாவது ஓடிப் போய் தின்பதைப் பார்த்து இருக்கிறீர்களா..?
போகும் நிதானமாக புற்களை மேயும். மிக நிதானமாக புண்ணாக்கு பருத்தி கலந்த தண்ணீரைக் குடிக்கும். மேலும் புற்களை மிக நிதானமாக மெல்லும்.
கிட்டத்தட்ட கிரைண்டர் அரைப்பது போல் புற்களை அரைத்துத் தின்று விட்டு மிக நிதானமாக வந்து அமர்ந்து கொள்ளும்.
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
அரைகுறையாக விழுங்கிய புற்களை மீண்டும் வெளியே எடுத்து அசை போடும்! தூள் போல் அரைத்து அசை போடும்! கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் எடுத்துக் கொள்ளும் அசை போடுவதற்கு!
அந்த நேரத்தில்… நன்றாகக் கவனியுங்கள்!
கன்றுக்குட்டிக்கு பால் கூட கொடுக்காது! உணவை உண்ணும் போது கன்றுக்குட்டிகள் வந்தால்… ஒரு உதை உதைத்து தன்னைக் கவனித்துக் கொள்ளும்!
அம்மா சாப்பிடும் வரை கன்றுக்குட்டி அம்மா மெல்வதைப் பார்த்துக் கொண்டே இருக்கும்! அசைபோட்டு முடித்த பின் படுத்த நிலையிலேயே கண்களை மூடிக்கொள்ளும்!
அதை ஓய்வு என்றும் எடுத்துக் கொள்ளலாம், ‘என்ன சாப்பிட்டோம்… அளவு எவ்வளவு… வயிற்றுக்குப் போதுமானதா’ என்பதை அசை போடுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
உலகில் மாட்டின் சாணமும் யானையின் சாணமும் மட்டுமே கைகளால் தெளிப்பதாகவோ, புனிதமாகவோ மருத்துவ குணம் கொண்டதாகவோ இருக்கிறது!
காரணம், மெதுவாக அரைத்துத் தின்பது, எவ்வளவு தேவையோ அதைமட்டும் அரைக்கிறது! நம்மைப் போல் லபக், லபக் என்று முழுங்குவதில்லை. அள்ளி அள்ளி வாயில் திணிப்பது இல்லை. விழுங்கும் முன் கைகளால் உருட்டுவது இல்லை.
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
ஏன்யா..! தட்டுல இருக்கிற சோறை வேற யாராவது எடுத்துக்கப் போறாங்களா? இல்ல சாப்பாடு பறந்திரப் போகுதா!? பரக்க பரக்க விழுங்கறது!
வாயில் சோறு இருக்கும் போதே தட்டில் பொரியலில் கை வைத்து எடுத்து உள்ளே தள்ள முயல்வது!
கல்யாணப் பந்தியில் அமர்ந்ததும் சோறு போடுவதற்கு முன்னால் ஸ்வீட், காரம், பொரியல், கூட்டு, அப்பளம் என்று பலவகையில் வைத்துச் செல்வான்.
சோறு போடுபவன் வருவதற்குள் மொத்த இலையில் உள்ளதையும் விழுங்கி இருப்பார்கள் சிலர்! பரிமாறுபவன் ஒரு பார்வை பார்ப்பான் பாரு! அந்தப் பார்வைக்கு அங்கேயே தூக்குல தொங்கிரணும்!
இதனால்தான் சில விருந்து நடக்கும் இல்லங்களில் தட்டு நிறைய பிரியாணியை வைத்து, அதற்குள் சிக்கனை வைப்பது. இல்லேன்னா சிக்கனை ஃபுல்லா கட்டிட்டு சோறை வைச்சிருவான்.
ஒரு வகையில் மனிதனை கேவலப்படுத்தும் விஷயம்தான்!
மீண்டும் மாட்டுக்கே வருவோம்! மதியம் வயிறாற உண்ட மாடுகள் தேவை என்றால் மட்டுமே தன் முன்னால் கிடக்கும் புற்களை மேயும்!
இயக்குனர் & எழுத்தாளர் Ravi Bhargavan
தேவை இல்லையென்றால் தொடாது! ஜீரணித்து சாணமாக்கி வெளியேற்றிய பின்தான் அடுத்த ரவுண்டு உண்ண ஆரம்பிக்கும்.
மாட்டின் சாணம் மருந்து!
மாட்டின் சாணம் கிருமி நாசனி!
மனிதன் கழித்தால் சிறுநீர்,
மாடு கழித்தால் கோமியம்.
தெய்வங்கள் நிறைந்த இடத்தில் பூஜை செய்யும் போது மாட்டின் சிறுநீர்… அங்கு புனிதம்!
அதை எடுத்து தலையில் தெளிப்பார்கள்.
உலகில் எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத பெருமை! அந்த ஒரே இனம் மாடு!
அதன் சாணமும் புனிதம்! சிறுநீரும் புனிதம்!
அதனால்தான் சொல்கிறோம் ‘மாடுபோல உண்ணுங்கள்’ என்று!
மிக உன்னிப்பாக மாடுகளைக் கவனிக்கும் மனிதர்களின் உணவு முறையும் கிராமங்களில் மாடுகளைப் போல் இருக்கும்! மாடுகள் உண்ணும் பசுமைக் கீரைகளை அந்த மனிதனும் உண்ணுவான்.
மாடுகளுக்கு அதிகம் கீரை பிடிக்கும். அது முருங்கைக் கீரையோ, அகத்திக் கீரையோ!
மாடுகளைப் பார்த்தே அன்றைய ஆரோக்ய மனிதன் இலை, தளை, கீரைகளைத் தின்றான்.
இப்போதும் கீரைகளைத் தின்னு என்கிறார்கள் மருத்துவர்கள்.
மாடுகளை அடுத்து ஆடுகளும் பசுமை இலைகளைத் தின்பது. ஆனால் ஆட்டின் புழுக்கைகள், ஆட்டின் சிறுநீர் புனிதமாகக் கருதப்படவில்லை. காரணம், ஆடுகள் பெரும்தீனி தின்பது…
கிடைக்கும் போதெல்லாம் தின்பது! போதும் என்ற மனம் அதற்கு இல்லை. எப்போது எல்லாம் புல் போடுகிறார்களோ அப்போது எல்லாம் உண்ணும்!
ஆடுகள் போல் மாடுகள் உண்ணாது, ஆடுகள் ஜீரணிக்கக் காத்திருப்பது இல்லை. எனவே மாடுகளைப் போல் உண்ணுங்கள்.
மாடுகள் போல் உண்டால் நமது சிறுநீரில் நாற்றம் வராது. நமது மோஷனில் கெட்ட வாசனை வராது. வியர்வையில் துர்நாற்றம் வராது! மாடுகள் அசைவம் உண்பதில்லை!
அசைவம் உண்ணும் விலங்குகளிடத்தில் துர்நாற்றம் கூடவே சுற்றும்! அருகில் செல்ல முடியாது!
நாய் போன்ற கோரைப்பல் இருக்கும் அனைத்து விலங்குகளுக்கும் உணவைக் கொடுத்து விட்டு பாதியில் எடுத்தால் கடிக்கும்!
ஆனால் இலை தளைகளை உண்ணும் மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் அந்தக் கோபம் வராது!
உணவுகளில் ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்றார்கள். மாடுகளைப்போல் இருப்போம்!
