2026 Life Coach Dr. Tamizhmaran: ஏன் சில நாட்கள் எதுவும் செய்ய விருப்பமே இல்லாமல் போகிறது?

Life Coach Dr. Tamizhmaran

பலருக்கும் சில நாட்கள் இப்படித் தான் இருக்கும். காலை எழுந்ததும் எதிலும் ஆர்வம் இல்லை. வேலை செய்ய மனசில்லை. பேச மனசில்லை. வெளியே போகவும் விருப்பம் இல்லை. “என்னாச்சு எனக்கு?” என்ற கேள்வி மனசுக்குள் வந்து போகும். பெரிய பிரச்சனையும் இல்லை. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு வெறுமை மாதிரியான உணர்வு.

Facebook
Instagram
YouTube
Twitter

Life Coach Dr. Tamizhmaran

இந்த நிலை பெரும்பாலும் சோர்வின் காரணமாக வருவது இல்லை. அது மனசு நீண்ட நேரம் தாங்கி வந்த ஒரு அழுத்தத்தின் வெளிப்பாடு. எப்போதும் பொறுப்பு, எதிர்பார்ப்பு, கட்டாயங்கள் என்று ஓடிக்கொண்டே இருக்கும் மனசு, ஒரு கட்டத்தில் சற்று நின்று விடும். அந்த நிறுத்தமே இந்த ஆர்வமின்மையாக வெளிப்படுகிறது.

பல நேரங்களில் நாம இந்த உணர்வை எதிர்த்து போராட ஆரம்பிக்கிறோம். “இப்படி இருக்க கூடாது”, “நான் பலவீனமா ஆகிட்டேனா” என்று நம்மையே குற்றம் சொல்லிக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் இது பலவீனம் அல்ல. இது மனசு ஓய்வு கேட்கும் ஒரு அறிகுறி.

சிலர் இதை சோம்பேறித்தனம் என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால் சோம்பேறித்தனம் என்பது செய்ய விருப்பமில்லாதது. இந்த நிலை அதைவிட வேறுபட்டது. செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போவது தான் இங்கே பிரச்சனை. அந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல் போனால், நம்மையே நாம கடுமையாக நடத்த ஆரம்பிப்போம்.
இந்த நிலையில் முக்கியமானது, நம்மை கட்டாயப்படுத்தாமல் இருப்பது. எல்லா நாளும் ஒரே மாதிரி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. சில நாட்கள் மெதுவாக இருந்தால் அதில் தவறு இல்லை. மனசுக்கும் உடம்பைப் போல ஓய்வு தேவைப்படும் என்பதை ஏற்றுக்கொண்டாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.

Life Coach Dr. Tamizhmaran

ஆர்வம் திரும்ப வர நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதற்காக அதை இழுத்து வர வேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக, சின்ன சின்ன விஷயங்களில் இருந்து ஆரம்பித்தாலே போதும். ஒரு நாள் முழுக்க productive ஆக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல், “இன்றைக்கு இதுவரை போதும்” என்று நம்மை அனுமதிப்பதே பெரிய மாற்றமாக இருக்கும்.

இந்த உணர்வு நிரந்தரமல்ல. அது ஒரு கட்டம். அந்த கட்டத்தை புரிந்து கொண்டு, நம்மை நாமே சற்று மென்மையாக நடத்திக்கொண்டால், மனசு தானாகவே மீண்டும் நகர ஆரம்பிக்கும்.

இன்னும் தெளிவு பெற விரும்புபவர்கள், நம் வாழ்வியல் பயிற்சி வகுப்பில் இணையலாம். அதற்கு கீழே உள்ள WhatsApp லிங்கை கிளிக் செய்யவும்.

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!

Check us My Social Media: Facebook Instagram YouTube

Privacy & Policy
Disclaimer
Contact us
About us