Life Coach Dr. Tamizhmaran: எல்லாம் சரியாக இருக்கும்போதும் மனசு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது?

Life Coach Dr. Tamizhmaran

பலர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இந்த கேள்வியை தங்களுக்குள்ளே கேட்டுக்கொள்கிறார்கள். “எல்லாமே சரியாகத்தானே இருக்கு, ஆனா மனசுக்கு ஏன் நிம்மதி இல்லை?” என்று. வெளிப்படையாக பார்த்தால் வேலை இருக்கிறது, குடும்பம் இருக்கிறது, தேவைகள் பெரும்பாலும் பூர்த்தியாகியிருக்கிறது. ஆனாலும் மனசு எதோ ஒன்று குறைகிறது என்று தொடர்ந்து உணர்த்திக்கொண்டே இருக்கும்.
இதற்குக் காரணம் பெரிய பிரச்சனைகள் அல்ல. நாம தினமும் மனசுக்குள் சேர்த்துக்கொண்டு போகும் சின்ன சின்ன விஷயங்கள் தான். பேசாமல் விட்ட வார்த்தைகள், வெளிக்காட்டாத கோபம், சொல்லாமல் வைத்த ஏமாற்றங்கள், “இதெல்லாம் நம்மால் சரி செய்ய முடியாது” என்ற எண்ணங்கள். இவை எல்லாம் மெதுவாக மனசுக்குள் தேங்கி, அமைதியை கெடுக்க ஆரம்பிக்கின்றன.

Facebook
Instagram
YouTube
Twitter

Life Coach Dr. Tamizhmaran

இன்னொரு விஷயம், நாம எப்போதும் ஏதோ ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பது. அடுத்த இலக்கு, அடுத்த பொறுப்பு, அடுத்த கட்டம். இப்போது இருக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்காமல், எதிர்காலத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தால், மனசு இன்றைய நிமிடத்தில் இருக்க முடியாமல் போகிறது.

மேலும், மனசுக்கு சோர்வு வந்தாலும் அதை கவனிக்காமல் விட்டுவிடுவது இன்னொரு காரணம். உடம்புக்கு சோர்வு வந்தால் உடனே கவனம் செலுத்துவோம். ஆனால் மனசின் சோர்வை பல நேரங்களில் நாம் பொருட்படுத்துவதில்லை. அந்த புறக்கணிப்பே ஒரு கட்டத்தில் அமைதியின்மையாக வெளிப்படுகிறது.

Life Coach Dr. Tamizhmaran

வாழ்க்கையில் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எல்லா கேள்விகளுக்கும் உடனடி பதில் கிடைக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. சில நேரங்களில், நம்மை நாமே கொஞ்சம் மெதுவாக நடத்திக்கொள்வதே மனசுக்கு பெரிய ஓய்வை தருகிறது.

அமைதி என்பது வெளியிலிருந்து வருவது இல்லை. அது நம்ம உள்ளே உருவாகும் ஒரு நிலை. அந்த நிலையை உருவாக்க பெரிய மாற்றங்கள் தேவையில்லை. நம்மை நாமே புரிந்துகொள்ள ஆரம்பித்தாலே வாழ்க்கையின் பாரம் மெதுவாக குறைய தொடங்கும்.

இன்னும் தெளிவு பெற விரும்புபவர்கள், நம் வாழ்வியல் பயிற்சி வகுப்பில் இணையலாம். அதற்கு கீழே உள்ள WhatsApp லிங்கை கிளிக் செய்யவும்.

Class Registration

மேலும் விரிவான விபரங்களுக்கு எனது whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.!

Check us My Social Media: Facebook Instagram YouTube

Privacy & Policy
Disclaimer
Contact us
About us